Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மார்ச் 1 முதல் 14 வரை‘ஜோதிடரத்னா’கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

மார்ச் 1 முதல் 14 வரை‘ஜோதிடரத்னா’கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

ற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர்களே!

சுக்ரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். தடைப் பட்ட வேலைகள் உடனே முடியும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

பழைய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சொந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சூரியன் 13-ம் தேதி வரை லாப வீட்டில் நிற்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சகோதரர்களால் பயனடைவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். என்றாலும் சனியுடன் நிற்பதால், ஏமாற்றம், வீண் டென்ஷன், முன்கோபம் வந்து செல்லும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால், பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீர்திருத்தம் செய்வீர்கள்.

வழக்குகளில் அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

தைரியமான முடிவுகளால் முன்னேறும் நேரம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்களே!

ராசிபலன்

சூரியன் 10-ல் வலுவாக நிற்பதால், உங்களின் நிர்வாகத் திறமை அதி கரிக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். 

புதனும் சுக்ரனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், மன உளைச்சல், தாயாருக்கு ஆரோக்கிய குறைவு, வேலைச்சுமை, விரயங்கள் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.

கடந்தகால கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்தியோகத் தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க நேரிடும். கலைத் துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

கடின உழைப்பால் நினைத்தது நிறைவேறும் நேரம் இது.

மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர்களே!

ராசிபலன்

செவ்வாய், சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெகு நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். திடீர் பணவரவு உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளின் நினை வாற்றல் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். தூரத்துச் சொந்தங்கள் தேடி வருவார்கள். கோயில் கும்பா பிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சூரியனும், கேதுவும் 9-ம் வீட்டில் நிற்பதால், சேமிப்புகள் கரையும், தந்தைக்கு மூச்சுத் திணறல் வந்து செல்லும். குரு சாதகமாக இல்லாததால், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் மாறி வரும் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து போகும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.

புதிய பாதையில் பயணிக்கும் வேளை இது.

சிந்தனைத் திறனும், செயல் திறனும் கொண்டவர்களே!

ராசிபலன்

குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீடு கட்டும் பணி நல்ல விதத்தில் முடியும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராகு, கேது மற்றும் சூரியன் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், திடீர் செலவுகளால் திணறுவீர்கள். முன்கோபம், பேச்சில் கடுமை வேண்டாம்.

வழக்கில் வழக்கறிஞரை கலந்தா லோசிப்பது நல்லது. தாய் வழியில் அனுசரித்துப் போகவும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்ப தால், புதுத் தெம்பு பிறக்கும். பழைய உறவினரைச் சந்திப்பீர்கள். பால்ய நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து வேறு வீடு மாறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். செவ்வாய் 5-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மதிப்பு கூடும். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். என்றாலும் சனியும் 5-ல் நிற்பதால், மனஉளைச்சல், வீண் குழப்பம், எதிர் காலம் பற்றிய பயம் வந்து செல்லும்.

வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை தெரிந்து செயல்படத் தொடங்குவீர்கள். கலைத் துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

போராடி இலக்கை எட்டிப் பிடிக்கும் வேளை இது.

பிறந்த மண்ணை நேசிப்பவர்களே!

ராசிபலன்

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முடிவுக்கு வரும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. பிள்ளை களின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர், உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 7-ம் தேதி வரை சுக்ரன் சாதகமாக இல்லாததால், தொண்டை வலி, மின்னணு, மின்சார சாதனப் பழுது, கணவன்-மனைவிக்குள் மோதல்கள் வந்து செல்லும்.

ஆனால், 8-ம் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உற்சாகமடை வீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப் பீர்கள். வாகனப் பழுதை சரி செய்  வீர்கள். செவ்வாய் பகவான் சாதகமாக இருப்பதால், சகோதரர்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

தாயாரின் உடல் நிலை சீராகும். உங்கள் ராசியிலேயே குருவும், ராகுவும் தொடர்ந்து கொண்டிருப்பதால், நெஞ்சு எரிச்சல், மூச்சுப் பிடிப்பு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகள் எல்லாம் வந்து செல்லும். ரத்த அழுத் தத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

நெருங்கிப் பழகியவர்களில் சிலர் உங்களை தவறாகப் புரிந்துகொண்டு விலகுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத் துறையினரே! உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

தட்டுத் தடுமாறி கரையேறும் காலம் இது.

கள்ளங்கபடமில்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர்களே!

ராசிபலன்

3-ல் சனி தொடர்வதால், உங்களது பலம், பலவீனத்தை உணர்ந்து செயல் படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று இனத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சூரியன் 6-ல் நிற்பதால், அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

8-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால், சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வரக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

11-ம் தேதி வரை புதனும் 6-ல் மறைந்திருப்பதால், சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். நண்பர்களுடன் பகைமை வந்து செல்லும். உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். 12-ல் குருவும், ராகுவும் மறைந்திருப்பதால், யாருக்காகவும் ஜாமீன் கையொப்பமிட வேண்டாம்.

3-ல் செவ்வாய் நிற்பதால், சகோதரர்கள் மதிப்பார்கள். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். புது வேலையாட்கள்  அமைவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினரே! சின்னச் சின்ன விமர்சனங்கள் தலைதூக்கும்.

நிதானித்து செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

நல்லது கெட்டது நான்கையும் அறிந்தவர்களே!

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். பணவரவு உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். குரு சாதகமாக இருப்பதால், வீட்டு விசேஷங்கள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். செவ்வாய் 2-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் பணம் வரும். சகோதரர்கள் உதவுவார்கள். உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 2-ல் சனி தொடர்வதால், பேச்சில் காரம் வேண்டாம். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். கை, கால் வலி, தலைச்சுற்றல் வந்து நீங்கும். பழைய கடன் குறித்து கவலைகள் வந்து செல்லும். 5-ல் சூரியன் தொடர்வதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள். அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புதிய சலுகைகளை அறிமுகப் படுத்துங்கள். உத்தியோகத்தில் உங்களின் அதிரடியான செயல்களைக் கண்டு அனைவரும் வியப்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

மன நிறைவுடன் காணப்படும் வேளை இது.

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்படுபவர்களே!

ராசிபலன்

உங்களின் ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள்ளேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தடைகள் நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். 4-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால், சிலர் புது வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. உறவினர்கள் தங்கள் தவறை உணருவார்கள்.

எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். நட்பு வட்டம் விரியும். குரு 10-ல் நிற்பதால், விபத்து, வாழ்க்கைத் துணைக்கு அறுவை சிகிச்சை, வாகனப் பழுது, சின்னச் சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், சில விஷயங்களில் முன்யோசனையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள். வீண் பகை, கவலை, அமைதியின்மை வந்து விலகும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரி களின் ஆதரவு மனதுக்கு இதமாக இருக்கும். பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

புத்துணர்ச்சி ததும்பும் நேரம் இது.

ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களே!

ராசிபலன்

சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். மேல் மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதைச் செய்வார்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் திருப்பம் உண்டாகும். சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். புது வண்டி வாங்குவீர்கள்.

விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குரு வலுவாக இருப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கோயில் விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சனியும் ராகுவும் சாதகமாக இல்லாததால், கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத் துறையினரே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

திறமைகளை வெளிப்படுத்தும் வேளை இது.

எதிரிக்கும் நல்லதே நினைக்கும் குணம் கொண்டவர்களே!

ராசிபலன்

புதனும் சுக்ரனும் சாகதமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அரசாங்க வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். பிரபலங்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு.

செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், எதிர்காலம் பற்றிய கவலைகள் அடி மனதில் நிழலாடும். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத் துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

தன்னம்பிக்கையுடன் செயல்படும் தருணம் இது.    

மனசாட்சிக்கு உட்பட்டு செயல்படுபவர்களே!

ராசிபலன்

யோகாதிபதி சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு, வாகன வசதி, ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாகனப் பழுதைச் சீர்செய்வீர்கள். இங்கித மாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.

பழைய நண்பர்கள், உறவினர்கள் தங்களது தவறை உணருவார்கள். ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாத தால், வேலைச்சுமை, தாழ்வுமனப் பான்மை, வீண் பழி வந்து செல்லும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குருவும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால், கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வேலை அமையும்.

கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். கலைத்துறையினரே! மூத்த கலைஞர் களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மலையாய் இருந்த தடைகள் பனியாய் உருகும் நேரம் இது.

பட்டம், பதவி, பணத்துக்கெல்லாம் மயங்காதவர்களே!

ராசிபலன்

செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம் பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

நீங்கள் கொடுக்கும் அறிவுரைகளை ஏற்று பிள்ளைகள் தேர்வை நல்ல முறையில் எழுதுவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், சோர்ந்து கிடந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள்.

உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும்.

ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்ப தால், ஷேர் மூலம் பணம் வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் கடன் பிரச்னை, கண் வலி வந்து செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகும். 6-ல் குரு மறைந்திருப்பதால், வி.ஐ.பி.க்களுடன் கருத்து மோதல்கள், வீண் டென்ஷன், இனம் தெரியாத கவலைகள் வரக்கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்து வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதமாகும். கலைத் துறையினரே! உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும் நேரம் இது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism