Published:Updated:

துர்முகி வருட விசேஷ தினங்கள்!

துர்முகி வருட விசேஷ தினங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
துர்முகி வருட விசேஷ தினங்கள்!

துர்முகி வருட விசேஷ தினங்கள்!

துர்முகி வருட விசேஷ தினங்கள்!

துர்முகி வருட விசேஷ தினங்கள்!

Published:Updated:
துர்முகி வருட விசேஷ தினங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
துர்முகி வருட விசேஷ தினங்கள்!

சித்திரை -1 (14.4.16) தமிழ் வருடப்பிறப்பு. சித்திரை மாதப்பிறப்பு. விஷு புண்ய காலம். இன்று விஷுக்கனி தரிசனம் அனைத்து மங்கலங்களையும் தந்தருளும். முதல் நாள் இரவே காய்-கனிகள், புஷ்பம், மஞ்சள், குங்குமம், தங்கம், வெள்ளி முதலிய மங்கலப் பொருட்களை வீட்டு பூஜையறையில் வைத்து,  புத்தாண்டு அன்று காலை கண்விழித்ததும் பாருங்கள்!

சித்திரை 2 (15.4.16) வெள்ளி - ஸ்ரீராம நவமி:
ஸ்ரீராமபிரானையும் ஸ்ரீசீதா பிராட்டியையும் வணங்கி வழிபட சிறந்த நாள்.

சித்திரை 8 (21.4.16) வியாழன் - சித்ரா பெளர்ணமி.
மிகவும் ஆற்றல் வாய்ந்த நாள். இன்று தெய்வ வழிபாடு செய்வது அதீத பலன்களை அளிக்கவல்லது!

சித்திரை 21 (4.5.16) புதன் - அக்னி நட்சத்திரம் ஆரம்பம். இன்று முதல் வைகாசி 15-ம் நாள் (28.5.16) வரை அக்னி நட்சத்திர காலம். இந்த காலத்தில் உபநயனம், விவாஹம், யாகங்கள், தர்ம காரியங்கள் முதலானவற்றை செய்யலாம். வீடு கட்ட துவங்குவது, கிணறு வெட்டுவது, விதை விதைப்பது, கும்பாபிஷேகம் முதலானவற்றைத் தவிர்க்கவும். ஆலயங்களில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு மேல் தாரா பாத்திரத்தில் நீரை நிரப்பி வழிபடுவதால் மிகுந்த நன்மை உண்டாகும்.

துர்முகி வருட விசேஷ தினங்கள்!

சித்திரை 26 (9.5.16) திங்கள் - அக்ஷ்ய திருதியை: இன்று தங்கம், வெள்ளி போன்றவையோ, பசு, ஆடைகள், குடை, செருப்பு போன்று இயன்றதை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினால், அவை பன்மடங்காகப் பெருகும்.

வைகாசி - 1 (14.5.16) சனி - வைகாசி மாதப் பிறப்பு:
விஷ்ணுபதி புண்ய காலம் என்பார்கள். இன்று செய்யும் ஆலய தரிசனமும் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பணமும், தான-தர்மங்களும் பன்மடங்கு பலன்களை நமக்கு வழங்கும்!

வைகாசி 8 (21.5.16) சனி - வைகாசி விசாகம். இன்று பௌர்ணமி. இன்று முருகனை தரிசித்து வழிபட உகந்த திருநாள். அருகில் இருக்கும் தீர்த்தவாரியில் பங்குகொண்டு ஈசனின் அருளை அடைவோம்.
ஆனி -1 (15.6.16) புதன்- ஆனி மாதப் பிறப்பு: ஷடசீதி புண்யகாலம். இந்த நாளின் தெய்வ தரிசனமும் முனோர்கள் ஆராதனையும் வேண்டிய பயனை தரவல்லது.

ஆனி 20 (4.7.16) புதன் – ஆனித்திருமஞ்சனம்:
அமாஸோம பிரதக்ஷிணம். இன்று அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்கும் இடத்தை காலைப் பொழுதில் 108 முறை வாம் வருதல் நினைத்த காரியத்தை ஈடேற்றித் தரும்.

ஆனி 26 (10.7.16) ஞாயிறு: - ஸ்ரீநடராஜர் அபிஷேகம். இன்று இரவு நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தைத் தரிசிப்பதும், வழிபடுவதும் விசேஷம்.

ஆனி 31 (15.7.16) வெள்ளி: சாதுர்மாஸ்ய விரத ஆரம்பம்.
மஹான்களை தரிசித்து ஆசிபெற சிறந்த காலம்.

ஆடி - 1 (16.7.16) சனி - ஆடி மாதப் பிறப்பு. சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணத்தைத் தொடருவதால், இந்த மாதம் முதல் ஆறு மாதங்களை தட்சிணாயன காலம் என்பார்கள். இம்மாதம் முழுவதும் சந்திரனின் வீட்டில் சூரியன் இருப்பார். அம்பிகையை வழிபட மிகச்சிறந்த மாதம்.

ஆடி 4 (19.7.16) செவ்வாய்- குரு பூர்ணிமா. இன்று வேதவியாசருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம். நம் ஆச்சார்யர்களை வழிபட்டால், அதுவே அவரை வழிபடுவதற்கு இணையானது ஆகும்.
ஆடி 13 (28.7.16) வியாழன் - ஆடிக்கிருத்திகை. இன்று ஷண்முகரை வழிபட்டால், குடும்ப ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் நல்லறமாகும்.

ஆடி 18 (2.8.16) செவ்வாய் - ஆடி அமாவாசை:
முன்னோரை ஆராதிக்க உகந்த நாள். இந்த மாதத்தில் அளிக்கக்கூடிய தர்ப்பணங்கள், அவர்களை திருப்திப்படுத்தும். அது ஆசீர்வாதமாக நம்மை வந்தடையும். செவ்வாய்க்கிழமையும் அமாவாசையும் கூடி இருக்கக்கூடிய நாளில் எல்லாம் அன்னையை வழிபடுதல் மிகுந்த பலன்களை தரவல்லது. ஆடிப்பெருக்கு. குருப்பெயர்ச்சி: சிம்ம ராசியிலிருந்து கன்யா ராசிக்கு காலை 9:30 மணிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார்.

ஆடி 21 (5.8.16) வெள்ளி- ஆடிப்பூரம். ஆண்டாளை வழிபட்டு அருள்பெறலாம்.

ஆடி 28 (12.8.16) வெள்ளி - வரலக்ஷ்மி விரதம். செல்வம் பொங்கிட மங்கலங்கள் பெருகிட வரம் அளிக்கும் லக்ஷ்மியை வழிபட சிறந்த நாள்.

ஆவணி - 1 (17.8.16) புதன்- ஆவணி மாதப் பிறப்பு: சூரியன் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார். இதை விஷ்ணுபதி புண்யகாலம் என்பர். இன்று செய்யும் தெய்வ ஆராதனையும் முன்னோர் வழிபாடும் விசேஷமானவை.

ஆவணி 2 (18.8.16) வியாழன் - ஆவணி அவிட்டம். யஜுர் உபாகர்மம். யஜுர் வேதத்தை கிளையாகக் கொண்டுள்ளவர்கள் சிறப்பு ஆராதனைகள் செய்யும் நாள்.

ஆவணி 9 (25.8.16) வியாழன் - கோகுலாஷ்டமி: கீதை அருளிய ஸ்ரீகண்ணபிரான் நமக்காக இந்த பூமியில் அவதரித்த நாள்.

ஆவணி 19 (4.9.16) ஞாயிறு: ஸாம உபாகர்ம.
இன்று ஸாமவேதம் பயின்றோர் முப்புரி நூலை அணிந்துகொள்ளும் நாள்.

ஆவணி 20 (5.9.16) திங்கள் - விநாயக சதுர்த்தி
. கணபதியை வழிபட்டு, தடைகள் (கர்ம வினைகளும்) யாவும் தகர்த்து எறியப்பட்டு, இன்ப வாழ்வை பெறுவோம்.

ஆவணி 28 (13.9.16) செவ்வாய் - ஓணம் பண்டிகை.

ஆவணி 30 (15.9.16) வியாழன் - நடராஜர் அபிஷேகம்:
அருகில் இருக்கக்கூடிய நடராஜப் பெருமானை வழிபட்டு நோயற்ற வாழ்வைப் பெற சிறந்த நாள்.

புரட்டாசி-1 (17.9.16) சனி - புரட்டாசி மாதப்பிறப்பு. இதை ஷடசீதி புண்ய காலம் என்பர். புதனின் அதிதேவதையான விஷ்ணுவை இந்த மாதம் வழிபட்டு வரம் பெறுவோம். புரட்டாசி சனிக்கிழமை. ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என ஆழ்வார் கூறியுள்ளது போல், எல்லாம் வல்ல ஸ்ரீமந் நாராயணனை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெறுவோம். மஹாளயபட்சம் ஆரம்பம். இன்று துவங்கி பதினைந்து நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உரிய மிகச் சிறந்த நாட்கள்.

புரட்டாசி 14 (30.9.16) வெள்ளி: மஹாளய அமாவாசை.
இன்று செய்யும் தர்ப்பணம் முன்னோரை திருப்தி செய்து நமது குடும்பம் தழைத்தோங்க வழிவகுக்கிறது.

புரட்டாசி 15 (1.10.16) சனி - நவராத்திரி ஆரம்பம். இன்று துவங்கி ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபட உகந்த காலம்.

புரட்டாசி 24 (10.10.16) திங்கள் - ஸ்ரீசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. இன்று கலைமகளை வழிபட்டு சகல ஞானமும் பெறச் சிறந்த நாள்.

புரட்டாசி 25 (11.10.16) செவ்வாய்- விஜயதசமி. காரியங்களில் வெற்றி பெற இன்று அவரவர் செய்யும் தொழிலை மானசீகமாக வழிபடுங்கள். இன்று வியாழக் கிழமையாகவும் இருப்பதால், குருகுலக் கல்வி துவங்கவும் சிறந்த நாள்.

புரட்டாசி 28 (14.10.16) வெள்ளி- ஸ்ரீநடராஜர் அபிஷேகம்

ஐப்பசி-1 (17.10.16) திங்கள் - ஐப்பசி மாதப் பிறப்பு
. இன்று முதல் துலா ஸ்நானம் மனதுக்கு புத்துணர்ச்சி தரும்; மனோபலம் பெருகும்.

ஐப்பசி 13 (29.10.16) சனி: தீபாவளி. எல்லாம்வல்ல கிருஷ்ண பகவான் நம் நலனுக்காக நரகாசுரனை அழித்தார். அதன் நினைவாக விடியற்காலையில் எண்ணெயில் மகாலட்சுமியும், வெந்நீரில் கங்கையும் இருந்து அருள்புரிவதாக ஐதீகம். இன்று தீபாவளி நோன்பு கடைப்பிடிப்பது மரபு.

ஐப்பசி 14 (30.10.16) புதன் - கேதார கௌரி விரதம். இன்று சிவனாரை நோக்கி பார்வதிதேவி கடைப்பிடித்த விரதத்தை நாமும் கடைப்பிடித்து வழிபட்டால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

ஐப்பசி 15 (31.10.16) வியாழன் - ஸ்கந்த சஷ்டி ஆரம்பம். சூரபத்மனை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, ஸ்கந்தன் போர் செய்த ஆறு நாட்களும் விரதம் அனுஷ்டித்தால், நம் இன்னல்கள் யாவும் அழியும். ஒளிமயமான வாழ்வு பெறலாம்!

ஐப்பசி 28 (13.11.16) ஞாயிறு- அன்னாபிஷேகம்.
(நக்ஷத்ர பிரதான இடங்களில்) இன்று சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகத்தில் பங்குபெற்று, பசிப்பிணி நீங்க சிவனாரை வழிபடுவோம்.

ஐப்பசி 29 (14.11.16) திங்கள் அன்னாபிஷேகம் (
திதி பிரதான இடங்களில்) பெளர்ணமியான இன்று அதிகாலை, நமது கவலைகள் யாவும் விலக புண்ணிய நதிகளில் நீராடுதல் நலம்.

கார்த்திகை -1 (16.11.16) புதன் - கார்த்திகை மாதப்பிறப்பு. விஷ்ணுபதி புண்யகாலம். இன்று ஆலய தரிசனமும், முன்னோர் வழிபாடும் விசேஷம்.

கார்த்திகை 27 (12.12.16) திங்கள் - அண்ணாமலையார் தீபம்; திருக்கார்த்திகை தீபம். இல்லங்கள்தோறும் தீபம் ஏற்றி, அறியாமை எனும் இருளைப் போக்கி நாடும் வீடும் நலம் பெற வேண்டுவோம்.

கார்த்திகை 28 (13.12.16) செவ்வாய் ஸர்வாலய தீபம்

மார்கழி -1 (16.12.16) வெள்ளி - மார்கழி மாதப்பிறப்பு. ஒரு வருடத்துக்கு உரிய ஆற்றலை - பலனை ஒரே மாதத்தில் வழிபாடு நடத்தி பெறுவதற்கான ஒப்பற்ற மாதம். தனுர்மாத பூஜை துவக்கம்.

மார்கழி 14 (29.12.16) வியாழன்: ஹனுமத் ஜயந்தி. தீவினைகள் நீங்க, பகையும் சத்ரு பயமும் நீங்க அஞ்சனை மைந்தனை வழிபட்டு அருள் பெறுவோம்.

மார்கழி 24 (8.1.17) ஞாயிறு - வைகுண்ட ஏகாதசி.
  ஸ்ரீமந் நாரா யணனை இன்று உபவாசம் இருந்து வழிபடுங்கள்.

மார்கழி 28 (12.1.17) புதன்- ஆருத்ரா தரிசனம்.
சிவனாரை, ஸ்ரீநடராஜர் திருமேனியாக தரிசிக்கச் சிறந்த நாள்.

மார்கழி 29 (13.1.17) வெள்ளி - போகிப் பண்டிகை. இந்திரனை வழிபடும் நாள். இன்று பழைய பொருட்களை வெளியேற்றி புதிய பொருளை வாங்குவது மரபு.

தை - 1 (14.1.17) சனி - உத்தராயன புண்யகாலம் துவக்கம். மகர சங்கராந்தி.

தைப் பொங்கல். பொங்கல் வைக்க சிறந்த நேரம்: காலை 11 முதல் 12 மணி வரை.

தை 14 (27.1.17) வெள்ளி- தை அமாவாசை.
முன்னோர் வழிபாடு விசேஷம்.

தை 21 (3.2.17) வெள்ளி - ரத ஸப்தமி. சூரிய பகவான் வடக்கு நோக்கி பயணத்தை துவங்கும் காலம். சூரிய வழிபாடு விசேஷ பலன்களை தரும்.

தை 22 (4.2.17) சனி - தை கிருத்திகை முருகனை வழிபடவும்.

தை 27 (9.2.17) வியாழன்- தைப்பூசம். நட்சத்திர பிரதான இடங்களில் தைப்பூசம்.

தை 28 (10.2.17) வெள்ளி - பௌர்ணமி பிரதான இடங்களில் தைப்பூசம்.

 மாசி - 1 (13.2.17) திங்கள் - மாசி மாதப்பிறப்பு.  இன்று சூரியன் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். சிவனாரை வழிபட்டு சிந்தை மகிழலாம்.

மாசி 12 (24.2.17) வெள்ளி - மஹா சிவராத்திரி. உபவாசம், வழிபாடு, கண்விழித்து இருத்தல் முதலானவற்றால் சிவனாரை வழிபட்டு வரம் பெறவேண்டிய திருநாள்.

மாசி 27 (11.3.17) சனி - மாசி மகம். (நட்சத்திர பிரதான இடங்களில்). ஹோலிப் பண்டிகை. நடராஜர் அபிஷேகம்

மாசி 28 (12.3.17) ஞாயிறு - மாசிமகம். (பெளர்ணமி பிரதான இடங்களில்) இன்று கடலில், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது மிகுந்த பலன்களை தரவல்லது.

பங்குனி - 1 (14.3.17) செவ்வாய் - பங்குனி மாதப் பிறப்பு. இன்று மாலை 5.06 மணிக்கு சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கிறார். காரடையான் நோன்பு (நோன்பு நேரம்: மாலை 4 முதல் 5 மணிக்குள்).
பங்குனி 16 (29.3.17) புதன் - வஸந்த நவராத்திரி ஆரம்பம். இன்று துவங்கி 10 நாட்கள் அம்பிகையை ராஜராஜேஸ்வரியாக வழிபட்டால், இல்லறம் செழிக்கும்.

பங்குனி 27 (9.4.17) ஞாயிறு - பங்குனி உத்திரம். (நட்சத்திர பிரதான இடங் களில்) தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த நாள். பெளர்ணமி பிரதான இடங்களில் அடுத்த நாள் (பங்குனி 28) இந்த விழாவைக் கொண்டாடுவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துர்முகி வருட விசேஷ தினங்கள்!
துர்முகி வருட விசேஷ தினங்கள்!

அட்டைப்பட ஓவியம்: சிவாஸ் ** சென்னை சூர்யோதயத்தின்படி சுத்த வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்தவர்: ஜோதிடர் 'ஜோதிடமணி’ வசந்தா சுரேஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism