மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மார்ச் 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

பெருமை பெருகும் வேளை!

ராசி பலன்கள்

மேஷம்: தலைமைப் பண்பு அதிகமுள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான

ராசி பலன்கள்

வீடுகளில் செல்வதால், உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்திழுக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால், திடீர் செலவுகள், அலைச்சல் வந்து செல்லும். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு முழு உரிமை தருவார்.

திருமணத் தடை விலகும்!

ரிஷபம்: உண்மையின் பக்கம் நிற்பவர்களே! சூரியன் லாப வீட்டிலும், செவ்வாய் 7-ல் ஆட்சிபெற்றும்

ராசி பலன்கள்

அமர்ந்திருப்பதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு இருக்கும். திருமணம் தாமதமானவர்களுக்கு விரைவில் கூடி வரும். கண்டகச் சனி தொடர்வதாலும், சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததாலும், மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும்.

திட்டம் தீட்டும் நேரம்!                          

ராசி பலன்கள்

மிதுனம்: மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே! 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால், சவாலான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து திட்டம் தீட்டுவீர்கள். குரு 3-ம் வீட்டில் தொடர்வதால், யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். வியாபாரத்தில், கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், உயரதிகாரி குறைகூறுவார். 

மனவலிமை கிட்டும்!

கடகம்: `காலம் பொன் போன்றது’ என்பதை உணர்ந்தவர்களே! உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 5-ம்

ராசி பலன்கள்

வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். சூரியனின் போக்கு சரியில்லாததால், சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் நீங்கள் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உறவு, நட்பு கைகொடுக்கும்!

ராசி பலன்கள்

சிம்மம்: கனவை நனவாக்குவதில் வல்லவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால்... முன்கோபம், உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.    

உத்யோகத்தில் பாராட்டு!

கன்னி: பிரதிபலன் பாராமல் பழகுபவர்களே! செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக

ராசி பலன்கள்

அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு உண்டு. சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதாலும், 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதாலும்... மின்னணு, மின்சார சாதனப் பழுது ஏற்படக்கூடும். 12-ம் தேதி முதல் புதன் ராசிக்கு 7-ல் நுழைவ தால், உற்சாகம் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

சொத்து வாங்கும் யோகம்!

ராசி பலன்கள்

துலாம்: சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே! லாப வீட்டிலேயே குருவும், ராகுவும் தொடர்வதால், எதிர்பார்த்திருந்த தொகை உங்கள் கைக்கு வரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 12-ம் தேதி முதல் புதன் 6-ம் வீட்டில் நுழைவதால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை நன்கு தெரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் நீங்கள் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். 

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்!

விருச்சிகம்: தெளிவாக சிந்திப்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின்

ராசி பலன்கள்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய நட்பால் ஆதாயமடை வீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் அமர்வதால் எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். ஜென்மச் சனி தொடர்வதால், வாழ்க்கை பற்றிய மனக்குறை இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.

காரிய தாமதம் நீங்கும்!

ராசி பலன்கள்

தனுசு: பொதுநலம் பற்றி யோசிப்பவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால்... புகழ், கௌரவம் கூடும். தாமதமான விஷயங்கள் உடனே முடியும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால், உங்களைப் பற்றி சிலர் எதிர்மறையாக விமர்சிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து, அதற் கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம்விட்டுப் பேசுவார்கள்.

பேச்சில் நிதானம் அவசியம்!

மகரம்: ஆளுமைத் திறன் அதிகமுள்ளவர்களே! செவ்வாயும், சனியும் லாப வீட்டில் வலுவாக

ராசி பலன்கள்

அமர்ந்திருப்பதால், எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் அன்பு பெருகும். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால், பேச்சில் நிதானம் அவசியம். எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

செலவுகள் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

கும்பம்: மன்னிக்கும் குணம் கொண்டவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள். பள்ளி, கல்லூரி கால தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். 14-ம் தேதி முதல் 2-ல் சூரியன் நிற்பதால், உடல் உபாதை வந்து செல்லும். ராகு 7-ம் இடத்திலும், கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால், செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உறவுகள் மதிக்கும்!

மீனம்: மற்றவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொள்பவர்களே! ராகு வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், விலை

ராசி பலன்கள்

உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். 14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால், உடல் உபாதை ஏற்படலாம். ராசிநாதன் குரு, ராசிக்கு 6-ல் மறைவதால், மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரம் விரிவடையும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.