அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

புது வீடு அமையும்!

ராசி பலன்கள்

மேஷம்: ஆழமாக யோசிப்பவர்களே! குரு பகவான் 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால்... வீண் அலைச்சல் ஏற்படலாம். 11-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி நீங்கள் லாபம் சம்பாதிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.

அமைதியான போக்கு அவசியம்!

ரிஷபம்: உலக நடப்பை உன்னிப்பாக கவனிப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில்

ராசி பலன்கள்

செல்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ராகுவும், குருவும் சாதகமாக இல்லாததால், சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

ராசி பலன்கள்

வசதி, வாய்ப்புகள் பெருகும்!

மிதுனம்: நேர்மறை எண்ணம் அதிகமுள்ளவர்களே! செவ்வாய், சூரியன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் சாதகமாக இருப்பதால்... வசதி, வாய்ப்புகள் பெருகும். நீண்ட  நாட்களாக செல்ல நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு 3-ம் வீட்டில் இருப்பதால், யாருக்கும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.

பணவரவு திருப்தி தரும்!

ராசி பலன்கள்கடகம்: முன்னெச்சரிக்கை உணர்வு அதிகமுள்ளவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்... வீண் விரயம், ஏமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடியான சில மாற்றங்களை செய்வீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக்காட்டுவீர்கள்.

பிரச்னைகளைக் களையும் நேரம்!

ராசி பலன்கள்


சிம்மம்: சுமைதாங்கியாய் இருப்பவர்களே! புதன் சாதகமாக இருப்பதால், பிரச்னைகளின் ஆணி வேரைக் கண்டறிந்து களைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்தபந்தங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால், உடல் உபாதை வந்து செல்லும். 4-ல் செவ்வாய்ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

தைரியம் கூடும்!

ராசி பலன்கள்


கன்னி: இயற்கையை நேசிப்பவர்களே! சனியும், செவ்வாயும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியம் கூடும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். சூரியன் 7-ல் நிற்பதாலும், 2-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதாலும், வீண் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்குத் தொல்லை தந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

ஆடை, ஆபரணம் சேரும்!

ராசி பலன்கள்

துலாம்: சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக போராடுபவர்களே! சூரியன், குரு மற்றும் ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மார்ச் 30-ம் தேதி வரை புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதாலும், ஏப்ரல் 2-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதாலும், வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

எடுத்த காரியம் முடியும்!

விருச்சிகம்: வெற்றியைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால்,

ராசி பலன்கள்

எடுத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். ராசிக்குள்ளேயே செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாததால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

தாம்பத்யம் இனிக்கும்!

ராசி பலன்கள்


தனுசு: தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர்களே! சுக்கிரனும், சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தாம்பத்யம் இனிக்கும். உறவினர் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதிய நட்பால் நீங்கள் உற்சாகமடைவீர்கள். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... இனம்தெரியாத கவலை, ஏமாற்றம், வீண் பழி வந்து செல்லும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

பிள்ளைகள் வாழ்க்கை சிறக்கும்!    

ராசி பலன்கள்


மகரம்: மன்னிக்கும் மனசு உள்ளவர்களே! சூரியன், செவ்வாய் மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். தோழிகளால் உதவிகள் உண்டு. நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்... மனஉளைச்சல், பசியின்மை வந்து நீங்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மற்றவர்களை வியக்க வைப்பீர்கள்.

ராசி பலன்கள்

மனப்பக்குவம் உண்டாகும்!

கும்பம்: அறிஞர்களின் அருகில் இருக்க விரும்புபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்கும் கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. வேலைக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சர்ப்ப கிரகங்கள் மற்றும் சூரியன் சாதகமாக இல்லாததால், முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்வீர்கள்.

நல்ல செய்தி வரும்!

ராசி பலன்கள்மீனம்: எதையும் இருவிதமாக யோசிப்பவர்களே! செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணைவரின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். ராசிக்குள் சூரியனும், 6-ல் குருவும் நிற்பதால்... உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.