Published:Updated:

ராசிபலன்

மார்ச் 29 முதல் ஏப்ரல் 11 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ளிமையான தோற்றமும், யதார்த்த மான பேச்சும் கொண்ட நீங்கள், வீண் விவாதங்களை ஒருபோதும் விரும்ப மாட்டீர்கள்.

குரு 5-ல் நீடிப்பதால், எதிர்பார்த்த பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய இடத்தை விற்றுவிட்டு, உங்களின் ரசனைக்கு ஏற்ப வீடு வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டாலும் பல நேரங் களில் அறிவுப்பூர்வமாக முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.
5-ல் ராகு தொடர்வதால், பிள்ளை களை அனுசரித்து செல்லவும். பூர்வீகச் சொத்தில் சீர் செய்வீர்கள். லாப வீட்டில் கேது அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்த வழக்கு சாதகமாகும். 12-ல் சூரியன் மறைந்திருப்பதால் முன்கோபம், காரிய தாமதம், உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி ஆகியன வந்துசெல்லும்.

வியாபாரத்தில், முக்கிய பிரமுகர் களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங் களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத் துறையினர், மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் ஆதாயம் அடைவார்கள்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் வேளை இது!

ராசிபலன்

பேச்சில் கம்பீரமும், செயலில் அதிவேகமும் கொண்ட நீங்கள், ஒரு விஷயம் குறித்து முடிவெடுத்த பின்னர் யோசிக்க மாட்டீர்கள்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வ தால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.

ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உற்சாகமாக காணப்படுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சுகாதிபதி சூரியன் லாப வீட்டில் அமர்ந்து இருப்பதால், அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.  வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

5-ல் ராகு நிற்பதால், அவ்வப்போது மன உளைச்சல், பிள்ளைகளால் டென்ஷன், வீண் செலவுகள் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் நன்மை உண்டாகும். சனி, கேது மற்றும் குருவின் போக்கு சரி இல்லாததால், சங்கடமான சூழ்நிலை களை சமாளிக்க நேரிடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள்.

வியாபாரத்தில், வாடிக்கையாளர் களுக்கு புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி சில நேரம் கடிந்து பேசினா லும் பல தருணங்களில் கனிவாக நடந்துகொள்வார். கலைத் துறை யினருக்கு புதிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வந்து சேரும்.

கனிவான பேச்சால் காரியம் சாதிக்கும் காலம் இது!

மனசாட்சியை  பெரிதும் மதிக்கும் நீங்கள், அடித்தட்டு மக்களுக்காக போராடுவீர்கள்.

ராசிபலன்

செவ்வாயும், சனியும் 6-ல் வலுவாக இருப்பதால், வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உடன் பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவர்.

புதனும் சுக்ரனும் சாதகமான வீடு களில் செல்வதால், பண பலம் உயரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். புது நட்பு மலரும்.

ராகுவும், சூரியனும் சாதகமாக இருப்பதால், ஷேர் மூலம் லாபம் பெறும் வாய்ப்பு உண்டு. கௌரவ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டு. அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குரு 3-ல் தொடர்வதால், தாழ்வு மனப்பான்மை, வீண் டென்ஷன் வந்து செல்லும்.

வியாபாரத்தில், புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பற்று - வரவு உயரும். வேலையாட்கள், பங்குதாரர்கள் ஆகியோர் எதிர்பார்த்த உதவிகளைச் செய்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத் துறையினரின் படைப்புத் திறன் மேம்படும்.

வெற்றிக்கனியைச் சுவைக்கும் வேளை இது!

பூமியைப் போல பொறுமையும், பூவைப் போல மென்மையான பேச்சும் கொண்ட நீங்கள், சொன்ன சொல் தவறாதவர்கள்.

ராசிபலன்

புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மனோபலம் அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையில் இருந்து விடுபடு வீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். மனைவியுடனான மோதல்கள் நீங்கும். சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 
குரு வலுவாக 2-ல் அமர்ந்திருப் பதால், பணவரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்தை மாற்றி, புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். சூரியன் 9-ல் நிற்பதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தந்தைக்கு நெஞ்சு வலி, சோர்வு, அசதி  ஆகியன வந்துபோகும்.

2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால், கோபத்தைத் தவிர்க்க வும். கண் வலி, பல் வலி வந்து போகும். 5-ல் சனி பகவான் தொடர்வ தால், மன உளைச்சல், பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள், வீண் குழப்பங்கள் ஆகியன வந்து செல்லும்.

வியாபாரத்தில், சூட்சுமங்களை உணர்ந்து செயல்படுவீர்கள். பழைய சரக்குகளை, தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் உங்களுக்கு அதீத முக்கியத்துவம் தருவார்கள். நீங்களும் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற் றும் வகையில் சாதித்துக் காட்டுவீர்கள். கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் நேரம் இது!

ராசிபலன்

தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழும் நீங்கள், சுக்ரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிக் கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள்.
பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். புது வேலை கிடைக்கும்.

4-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக் குச் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி  வருவீர்கள்.

ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால், ஒருவித படபடப்பு, தடுமாற் றம், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.  வழக்கில் வழக்கறிஞரை ஆலோசித்து முடிவுகள் எடுக்கவும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். கோபத்தைத் தவிர்க்கவும்.

வியாபாரத்தில், வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்து கொள்வீர் கள். பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத் துறையினர், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

திட்டமிட்டு செயல்படுவதால் முன்னேறும் வேளையிது!

ராசிபலன்

உயர்ந்த கொள்கைகளுடன் வாழும் நீங்கள், தப்பு செய்தவர்களை மன்னிக்க மாட்டீர்கள். சனி, செவ்வாய் மற்றும் கேது சாதகமாக இருப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள்.

வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். மாற்று மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மனைவி வழியில் ஆதரவு பெருகும். ராசி நாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.

சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு காரியங்கள் இழுபறியாகும். மனைவியுடன் வீண் விவாதங்கள், வந்து போகும். 12-ல் குரு மறைந்திருப்பதால், தூக்கமின்மை, தாயாருடன் மோதல்கள், எதிலும் ஒருவித தயக்கம் வந்து செல்லும்.

வியாபாரத்தில், எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண் டாம். கலைத் துறையினருக்கு வெளி நாட்டு புது நிறுவனங்கள் வாய்ப்பு அளிக்கும்.

புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் வேளை இது!

ராசிபலன்

கலகலப்பாகப் பேசும் சுபாவம் கொண்ட நீங்கள், ஒருபோதும் சோகங் களையும் சுமைகளையும் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள்.

குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், காரியங்கள் வெற்றி அடையும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்கு வீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்பு உடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர் களால் ஆதாயம் அடைவீர்கள்.

30-ம் தேதி முதல் புதன் ராசிக்கு 7-ல் அமர்வதால், சோர்வு நீங்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். 2-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று அமர்வதால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். என்றாலும் 6-ல் மறைவதால், கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

செவ்வாய் 2-ல் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். சூரியன் 6-ல் நிற்பதால், அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஏழரைச் சனி தொடர்வ தால், குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரிகள், புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு, வேறு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு!

அலைச்சலுடன் ஆதாயத்தைப் பெற்றுத் தரும் காலம் இது!

ராசிபலன்

சிந்தனைத் திறனால் திறம்பட செயல்படும் நீங்கள், எடுத்த காரியங் களில் ஒருபோதும் பின்வாங்க மாட்டீர்கள். 2-ம் தேதி முதல் 5-ல் சுக்ரன் உச்சம் பெற்று அமர்வதால், புதுத் தெம்பு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும்.

மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமா கும். கொடுத்த பணம் திரும்பி வரும். வேலை கிடைக்கும். சூரியனும் 5-ம் இடத்திலேயே தொடர்கிறார்; ஆகவே, பிள்ளைகளை பொறுமையுடன் வழிநடத்தவும்.

ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், அதிகார பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். ரத்த அழுத்தம், சோர்வு வந்து விலகும்.

30-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால், திடீர் செலவுகள், ஏமாற்றம் வந்து போகும். உறவினர், நண்பர்களுடன் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. குரு 10-ல் நிற்பதால், சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள், பழைய கடன் பற்றிய கவலைகள் வரக்கூடும். ராகு- கேது சரியில்லாததால், எவருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

வியாபாரத்தில், அதிரடி சலுகை களை அறிவித்து சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை இருந்தாலும் அதிகாரிகள் உதவுவார்கள். கலைத் துறையினரை, பழைய நிறுவனங்கள் அழைத்து பேசி வாய்ப்புகளும் தரலாம்.

சுற்றத்தாரை புரிந்துகொள்ளும் தருணம் இது!

ராசிபலன்

தவறு செய்தவர்கள் யாராக இருந் தாலும் தண்டிக்கும் குணம் கொண்ட நீங்கள், புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமைவார். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும்.

3-ல் கேது பலம் பெற்றிருப்பதால், வழக்கில் வெற்றி கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குரு 9-ல் நிற்பதால், தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புகழ்வார்கள். குலதெய்வ பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள்.

செவ்வாய் 12-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஏழரைச் சனி தொடர்வதால், நேர்மறை எண்ணங் களை வளர்த்துக்கொள்ளுங்கள். சிலர் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.

வியாபாரம் செழிக்கும். வேலை ஆட்களும், பங்குதாரர்களும் உங்களிடம் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். எனினும், வேலைப் பளுவும் அதிகரிக்கும்.கலைத் துறையினர், பரபரப்புடன் காணப் படுவார்கள்.

மறைந்து இருக்கும் திறமைகள் வெளிப்படும் வேளை இது!

ராசிபலன்

இப்படித்தான் வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் நீங்கள், சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கையும் தைரியமும் பெறுவீர்கள். வி.ஐ.பி-களுடன் சகஜ மாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். கடனைப் பற்றி அவ்வப்போது கவலைப் படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர் பார்த்த வகையில் பணம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் குறித்த கவலைகள் நீங்கும். வீடு மாறுவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னை சரியா கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ராசிநாதன் சனி பகவான் 11-ல் நிற்பதால், வேற்றுமொழி பேசுபவர்கள் உதவுவார்கள்.

உங்கள் பாக்கியாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ராகுவும், கேது வும் சாதகமாக இல்லாததால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். வீண் பயம், கவலைகள், மறைமுக எதிர்ப்பு கள், பல் வலி, பேச்சால் பிரச்னைகள் வந்து செல்லும். வழக்கில் நிதானம் அவசியம்.

வியாபாரத்தில் பழைய சரக்கு களைப் போராடி விற்பீர்கள். பங்குதாரர் கள், வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். உத்தியோகத்தில், சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கலைத் துறையினர், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.

சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரம் இது!

ராசிபலன்

மற்றவர்களின் அதிகாரத்துக்கு ஒருபோதும் அடிபணியாத நீங்கள், அன்புக்கு அடிமையாகி விடுவீர்கள். யோகாதிபதி புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள்.

திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீடு வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

சர்ப்ப கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், முடிந்துவிடும் என நினைத்த விஷயங்கள்கூட, வீண் அலைச்சலைத் தந்த பிறகே முடிவுக்கு வரும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

செவ்வாயும், சனியும் 10-ல் நீடிப்ப தால், சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சிலர், புதிதாக தொழில் தொடங்குவீர்கள். வேற்றுமொழிக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சூரியன் 2-ல் நிற்பதால், சூழ்நிலை அறிந்து பேசுவது அவசியம்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். வியாபார ஸ்தலத்தை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள்.உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர் களிடம் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத் துறையினருக்கு, சம்பள பாக்கி கைக்கு வரும்.

தளராத நெஞ்சுறுதியுடன் செயல்படும் தருணம் இது!

ராசிபலன்

புகழின் சிகரத்துக்குப் போனாலும் மற்றவர்களை மதித்து நடக்கும் நீங்கள், ராகு வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதால், சாணக்கியத்தனத்துடன் செயல்பட்டு சில காரியங்களை சாதிப்பீர்கள்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். பதவிகள் தேடி வரும். குலதெய்வக் கோயிலுக்கு காணிக்கை செலுத்து வீர்கள். ஷேர் லாபம் தரும்.

ராசிக்குள்ளேயே சூரியன் தொடர் வதால், கண் எரிச்சல், முன்கோபம், தூக்கமின்மை ஏற்படும். புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்கள் சிலர் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். வாகனப் பழுது சீராகும். உங்களில்  சிலர், புது வாகனம் வாங்குவீர்கள். கடனில் ஒருபகுதியை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவான் 6-ல் மறைந்திருப் பதால், வீண் பழி, மறைமுக எதிர்ப்பு, வீண் பகை, சின்னச் சின்ன ஆரோக் கிய குறைவு வந்து செல்லும்.

வியாபாரத்தில், புதிய வாடிக்கை யாளர்கள் உங்களைத் தேடி வருவார் கள். வியாபாரம் விருத்தியாகும். உத்தியோகத்தில், உயரதிகாரி உங்களிடம் விரும்பி பேசுவார். எனினும், சக ஊழியர்களால் சிறுசிறு தொந்தர வுகள் உண்டு; அவர்களால் அலைக் கழிக்கப்படுவீர்கள். கலைத் துறை யினரின் படைப்புகளுக்குப் பரிசு -  பாராட்டுகள் கிடைக்கும்.

வி.ஐ.பி-களின் நட்பால் சாதிக்கும் தருணம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு