அவள் 16
Published:Updated:

துர்முகி வருட பலன்கள்!

துர்முகி வருட பலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
துர்முகி வருட பலன்கள்!

`ஜோதிட ரத்னா

13.4.2016 புதன் கிழமை மாலை மணி 6.30-க்கு... சுக்லபட்சம் சந்தான சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரம் 4-ம் பாதம், மிதுன ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் தனுசு லக்னம், மீன ராசியில், பத்தரை நாமகரணத்தில், சித்தயோகம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த நன்னாளில், ராகு மகா தசையில் சந்திரன் புக்தி குரு அந்தரத்தில் சந்திரன் ஹோரையில் புதிய தமிழ் வருடமான துர்முகி வருடம் சிறப்பாகப் பிறக்கிறது.

துர்முகி வருட பலன்கள்!

மேஷம்

துர்முகி வருட பலன்கள்!

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் பிறப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வருடப் பிறப்பு முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 7-ல் அமர்வதால்... அழகு, ஆரோக்கியம் கூடும். இந்த ஆண்டு முழுக்க சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால், தூக்கமின்மை வந்து போகும். இந்த ஆண்டு முழுக்க ராகு 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். கேது இந்த ஆண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்தப் புத்தாண்டு  நெருக்கடிகளைத் தந்தாலும், கடின உழைப்பால் முன்னேற வைப்பதாக அமையும்.

ரிஷபம்

துர்முகி வருட பலன்கள்!

உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும். தாமதமான  காரியங்கள் உடனே முடியும். ஆண்டு முழுக்க ராகு 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால், கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை இந்த ஆண்டு முழுக்க சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். 1.8.2016 வரை குருபகவான் 4-ல் அமர்வதால், எந்த விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக அணுகுங்கள். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால், குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். 17.1.217 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், தங்க ஆபரணங்களை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு `தன் கையே, தனக்கு உதவி’ என்பதை உணர வைப்பதாக அமையும்.

மிதுனம்

துர்முகி வருட பலன்கள்!

சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சாதக மாக இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்ப தால், வாழ்க்கைத் துணைவர் நேசிப்பார். இந்த வருடம் முழுக்க சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உடல் உபாதை வந்து செல்லும். ராகு 3-ம் வீட்டிலேயே இந்த வருடம் முழுக்க நீடிப்பதால், உடன்பிறந்தவர் வகையில் நன்மை உண்டாகும். ஆனால், கேது 9-ல் தொடர்வதால், திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வருடப் பிறப்பு முதல் 1.8.2016 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 4-ல் நுழைவதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால், மனஇறுக்கங்கள் விலகும்.

இந்தப் புத்தாண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும்.

கடகம்

துர்முகி வருட பலன்கள்!

உங்களின் யோகாதிபதி செவ்வாய் ஆட்சிபெற்று 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 5-ம் இடத்திலேயே தொடர்வதால், மனக் குழப்பம் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால்... வீண் அலைச்சல்கள், செலவுகள், திடீர் பயணங்கள் உண்டாகும். இந்த வருடம் முழுக்க ராகு 2-ம் இடத்திலும், கேது 8-லும் தொடர்வதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். 1.8.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு, ராசிக்கு 3-ல் அமர்வதால்,  காரிய தாமதம் உண்டாகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால்,  தாயாருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.

இந்தப் புத்தாண்டு ஏமாற்றங்களைத் தந்தாலும், வளைந்துக் கொடுக்கும் குணத்தால் நிம்மதியைத் தருவதாக அமையும்.

சிம்மம்

துர்முகி வருட பலன்கள்!

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால்... வீடு, வாகன வசதி பெருகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். 1.8.2016 வரை ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால், உடல்நலம் பாதிக்கப்படலாம். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.  17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால், வேலைச்சுமை இருக்கும். உறவினர்களில் சிலர் உங்களைவிட்டு விலகுவார்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 4-ல் அமர்ந்து அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால், சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். இந்த ஆண்டு உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், சின்ன சின்னப் பிரச்னைகளை பேசித் தீர்க்கப் பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

இந்தப் புத்தாண்டு சுகவீனத்தை தந்தாலும், ஓரளவு மகிழ்ச்சியையும் தரும்.

கன்னி

துர்முகி வருட பலன்கள்!

உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 3-ம் வீட்டில் தொடர்வதால்... நவீன ரக செல்போன், சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுக்க ராகுபகவான் ராசிக்கு 12-ம்

வீட்டில் மறைந்திருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். கேது இந்த ஆண்டு முழுக்க 6-ம் இடத்திலேயே தொடர்வதால், வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். 1.8.2016 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும், கொஞ்சம் பற்றாக்குறை இருக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால், திடீர் பணவரவு ஏற்படக்கூடும்.

இந்தப் புத்தாண்டு திடீர் யோகங்களை தருவதுடன், சற்றே ஆரோக்கிய குறைவையும் தரும்.

துலாம்

துர்முகி வருட பலன்கள்!

உங்களுடைய ராசிக்கு 9-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த துர்முகி வருடம் பிறப்பதால், வீட்டை விரிவு படுத்தும் முயற்சி நல்ல விதத்தில் முடியும். இந்த ஆண்டு முழுக்க ராகு, ராசிக்கு லாப வீட்டில் தொடர்வதால், ஷேர் மூலம் பணம் வரும். கேது 5-ம் இடத்திலேயே ஆண்டு முழுக்க தொடர்வதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். இந்த ஆண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால், நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். குருபகவான் 1.8.2016 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால், வீண் விரயம் வந்து போகும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால், சகிப்புத்தன்மை தேவை.

இந்தப் புத்தாண்டு சில சங்கடமான சூழ்நிலைகளை ஏற்படுத்தினாலும், தைரியத்தால் வெற்றி தருவதாக அமையும்.

விருச்சிகம்

துர்முகி வருட பலன்கள்!

சூரியனும், சுக்கிரனும் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 1.8.2016 வரை குரு 10-ல் தொடர்வதால், அடுத்தடுத்த வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்கு 12-ல் மறைவதால், செலவினங்கள் அதிகமாகும். இந்த வருடம் முழுக்க ஜென்மச் சனி தொடர்வதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். இந்த ஆண்டு முழுக்க ராகு 10-ம் வீட்டிலும், கேது 4-லும் தொடர்வதால்... வேலைச்சுமை மனஇறுக்கம் உண்டாகும்.

இந்தப் புத்தாண்டு ஓய்வின்மையையும், மன அமைதியின்மையையும் தந்தாலும், உழைப்பால் உயர வைக்கும்.

தனுசு

துர்முகி வருட பலன்கள்!

உங்களுடைய ராசிக்கு 7-ல் அமர்ந்து சந்திரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால், விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 9-ல் நிற்பதால், வீடு, மனை, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால், சில நேரங்களில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல ஆழ்மனதில் வெறுமை வந்து செல்லும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால், வருமானம் உயரும். இந்த வருடம் முழுவதும் ராகுபகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையுடன் பிணக்கு ஏற்படலாம். கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால், தைரியம் கூடும். இந்த வருடம் முழுவதுமாக சனி 12-ல் மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான, விரயச் சனியாக தொடர்வதால்... அலைச்சல், செலவுகள் இருக்கும்.  

இந்தப் புத்தாண்டு திட்டமிட்டு செயல்படுவதாலும், சகிப்புத்தன்மையாலும் சாதிக்க வைப்பதாக அமையும்.

மகரம்

துர்முகி வருட பலன்கள்!

செவ்வாய் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த துர்முகி வருடம் பிறப்பதால், வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடிவடையும். இந்த ஆண்டு முழுக்க ராகு 8-லும், கேது 2-ம் இடத்திலும் நீடிப்பதால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். இந்த வருடம் முழுவதுமாக உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால், திடீர் யோகம் உண்டாகும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். 1.8.2016 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வருமானம் உயரும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

இந்தப் புத்தாண்டு சில பிரச்னைகளில் சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் முன்னேற வைக்கும்.

கும்பம்

துர்முகி வருட பலன்கள்!

இந்தப் புத்தாண்டு உங்களின் 5-ம் வீட்டில் பிறப்பதால், பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். உறவினர் களின் ஆதரவு பெருகும். இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். 1.8.2016 வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைக்கழிப்புகள் அதிகமாகும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9-ல் அமர்வதால், விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வருடப் பிறப்பு முதல் இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ராகுவும், ஜென்ம ராசியிலேயே கேதுவும் தொடர்வதால், உடல் உபாதை  வந்துப் போகும்.

எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டிய வருடமிது.

மீனம்

துர்முகி வருட பலன்கள்!

இந்த துர்முகி வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால், வீட்டைப் புதுப் பிக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். இந்த ஆண்டு முழுக்க ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். கேது, ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கையின் சூட்சுமத்தை உணருவீர்கள். 1.8.2016 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து கிடப்பதால், அவ்வப்போது சோர்வாகக் காணப்படுவீர்கள். 2.8.2016 முதல் 16.1.2017 வரை மற்றும் 10.3.2017 முதல் 13.4.2017 வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால், உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். 17.1.2017 முதல் 9.3.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால் டென்ஷன் அதிகமாகும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 9-ல் நிற்பதால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

இந்தப் புத்தாண்டு அதிரடி மாற்றங்களைத் தந்து அந்தஸ்தை அதிகப்படுத்தும்.