Published:Updated:

ராசிபலன்

ஏப்ரல் 26 முதல் மே 9 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்பவர்களே!

பாக்கியாதிபதி குருவும், ராசிநாதன் செவ்வாயும் வலுவாக இருப்பதால், மற்றவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற சூட்சுமத்தை உணர்வீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் வரும். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்.

புதன் ராசிக்குள் நிற்பதால், இங்கிதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது நட்பு மலரும். பயணங்களால் உற்சாகம் உண்டாகும். ராசிக்குள் சூரியனும், 5-ல் ராகுவும் தொடர்வதால், நீங்கள் சாந்தமாக இருந்தாலும் உங்களைச் சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். கேது லாப வீட்டில் நிற்பதால், வருமானம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு அதிகரிக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், நம்பிக்கைக்கு உரியவர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பக்கபலமாக இருப்பார். கலைத்துறையினரே! தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும்.

கோபத்தை கட்டுப்படுத்தி வெற்றி பெறும் நேரம் இது.

எதிர் நீச்சல் போடுபவர்களே!

ராசிபலன்

செவ்வாய் ஆட்சி பெற்று 7-ல் அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுக ஸ்தானத்தில் குருவும், ராகுவும் தொடர்வதால், வேலைச்சுமை இருக்கும். தாயாருடன் விவாதம் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். ராசிநாதன் சுக்ரனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள்.

12-ல் சூரியன் இருப்பதால், அடுத்தடுத்து பயணங்களும், செலவினங்களும் கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். கண்டகச் சனி தொடர்வதால், உள்மனதில் ஒரு பயம், சின்னச் சின்ன போராட்டம், நிம்மதியற்ற போக்கு வந்துபோகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

முயற்சி செய்து முன்னேறும் காலம் இது.

எந்த நிலையிலும் தன்னம்பிக்கை தளராதவர்களே!

ராசிபலன்

செவ்வாயும், சனியும் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். 3-ல் குரு நீடிப்பதால், முயற்சிகள் தாமதமாகும். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

3-ல் ராகு வலுவாக நிற்பதால், எதிர்ப்புகள் அடங்கும். வேற்று மாநிலத்தவர்கள் உதவுவார்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். லாப வீட்டில் சூரியன், புதன், சுக்ரன் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் கசப்பு உணர்வுகள் வந்து செல்லும். கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் வேளை இது.

தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பவர்களே!

ராசிபலன்

10-ல் தொடரும் சூரியனும், புதனும் உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

பழைய நண்பர், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால், உடலில் பிரச்னைகள் வந்து போகும். வாகனத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். 5-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மதிப்பு கூடும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், சுற்றுலா சென்று வருவீர்கள். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். 2-ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

திடீர் யோகம் தரும் நேரம் இது.

செய்நன்றி மறவாதவர்களே!

ராசிபலன்

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், போராடும் மனப்பக்குவம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அர்த்தாஷ்டமச் சனி, ஜென்ம குரு மற்றும் ராசிக்குள் ராகு நீடிப்பதால், கோபத்தைக் குறையுங்கள்.

சகிப்புத் தன்மையும் உங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. உங்களுடைய திறமை குறைந்துவிட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்கள் உங்களைச் சரியாக மதிக்கவில்லை என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். தர்மசங்கடத்துக்கு உள்ளாவீர்கள். ஆனால், யோகாதிபதி செவ்வாய் 4-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களைக் குறை கூறுவார்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

தன் கையே தனக்கு உதவி என்பதை உணரும் தருணம் இது.

எப்போதும் ஒற்றுமையை விரும்புபவர்களே!

ராசிபலன்

செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். 8-ல் புதன் நிற்பதால், திடீர்ப் பயணங்கள் ஏற்படும். உறக்கம் பாதிக்கப்படும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சூரியனும் 8-ல் நிற்பதால், அரசு விவகாரங்கள் அலைக்கழிக்கும். சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், புது வேலை கிடைக்கும். ராகுவும், குருவும் 12-ல் மறைந்திருப்பதால், மன உளைச்சல் வந்து போகும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். கேது 6-ல் நிற்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மனதைப் புரிந்துகொள்வீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

கடின உழைப்பால் சாதிக்கும் வேளை இது.

முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்ந்தவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிநாதன் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு அதிகரிக்கும். சிலர் வீடு மாறுவீர்கள். பாதச் சனி தொடர்வதால், பழைய பிரச்னைகளை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

மற்றவர்கள் ஆலோசனை கூறினாலும் நன்றாக யோசித்து செயல்படுங்கள். சூரியன் ராசியைப் பார்ப்பதால், சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். குரு, புதன் மற்றும் ராகு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.

உண்மையால் உயரும் நேரம் இது.

உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் பேசுபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று ராசியிலேயே அமர்ந்திருப்பதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். தைரியம் பிறக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது சாதகமாக அமையும். இழுபறியாக உள்ள வேலைகள் உடனே முடியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். எதிர்ப்புகள் அடங்கும். சிலருக்கு புது வேலை கிடைக்கும்.

பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதனும், சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கைத் துணையோடு பிரச்னைகள் வரக்கூடும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். செலவினங்களும், அலைச்சல்களும் தொடரும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா என்று சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது.

மற்றவர்களின் நலனை விரும்புபவர்களே!

ராசிபலன்

ராசிநாதன் குருபகவானும், கேதுவும் வலுவாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். புது வேலை அமையும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.

வேற்று மொழி, இனத்தவர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால், முடிக்கவே முடியாது என நினைத்திருந்த வேலைகளைக் கூட சுலபமாக முடித்துக் காட்டுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். 5-ல் சூரியன் தொடர்வதால், பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக்கொண்டே போகும். திடீர்ப் பயணங்கள் உண்டு. அரசாங்க விஷயங்கள் தாமதமாகி முடியும். 9-ல் ராகு தொடர்வதால், சேமிப்புகள் கரையும். பெற்றோர் மீது மனவருத்தமும் வரக்கூடும்.

வேலையாட்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

ஒரு சில காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்களே!

ராசிபலன்

உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4-ம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் அமர்ந்திருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் எல்லோரையும் கவருவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வீட்டை இடித்துக் கட்டுவது, அழகுபடுத்துவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

ஓரளவு பணம் வரும். உறவினர்கள் மனதைப் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். லாப வீட்டிலேயே சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராசிக்கு 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் தொடர்வதால், கண்ணில் சின்னதாக தூசி விழுந்தாலும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. குருவும் 8-ல் நீடிப்பதால், ஒற்றையாக இருந்து எவ்வளவுதான் போராடுவது, எத்தனைக் காலத்துக்குத்தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. சக ஊழியர்களுடன் சண்டையைத் தவிர்க்கவும். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள்.

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளை இது.

நன்கு யோசித்து செயல்படுபவர்களே!

ராசிபலன்

சூரியன் சாதகமாக இருப்பதால், சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் விலகும். வேலை கிடைக்கும். குருவால் திடீர் பயணங்கள் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும்.

திட்டமிட்டு பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தவற்றை இப்போது வாங்கித் தருவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசங்களில் கலந்துகொள்வீர்கள். புதன் வலுவாக இருப்பதால், பூர்வீக சொத்தால் வருமானம் வரும். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம், வீண் விரயங்கள், கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்கள், உத்தியோகத்தில் மேலதிகாரியின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.

சமாதானத்தை விரும்புபவர்களே!

ராசிபலன்

6-ல் நிற்கும் ராகுவும், 9-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் செவ்வாயும் உங்கள் புகழ், கௌரவத்தை ஒரு படி உயர்த்தும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகனம் அமையும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தூரத்து சொந்தம் தேடி வரும். சூரியன் 2-ல் நிற்பதால், நிதானம் அவசியம். ராசிநாதன் குரு 6-ல் மறைந்திருப்பதால், தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய வேலையாட்கள், பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு