Published:Updated:

ராசி பலன்கள்

ராசி  பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

மே 4-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

மே 4-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி  பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பொறுப்புகள் அதிகமாகும்!

ராசி  பலன்கள்

மேஷம்: விட்டுக் கொடுத்து வெல் பவர்களே! கேது வலுவாக லாப வீட்டில் நிற்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். விருந்தினர் வருகை உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகுவதால், தடைப்பட்ட அரசு காரியங்கள் முடியும். ஆனால், பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். குரு 5-ல் நிற்பதால், பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப் புகள் அதிகமாகும்.

உற்சாகம் பொங்கும்!

ராசி  பலன்கள்

ரிஷபம்: கடந்து வந்த பாதையை மறவாதவர் களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், தடைகள் இருந்தாலும் ஓய மாட்டீர்கள். இல்லத்தில் உற்சாகம் பொங்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததாலும், கண்டகச் சனி தொடர்வதாலும் வீண் டென்ஷன், உடல் உபாதை வந்து போகும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங் கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் மற் றவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

ராகு பகவான் துணை நிற்பார்!

ராசி  பலன்கள்

மிதுனம்: மன சாட்சிக்கு பயந்தவர்களே! 3-ல் நிற்கும் ராகு உங்களை பரபரப்பாக செயல்பட வைத்து, பல விஷயங்களையும் விரைந்து முடிக்க வைப்பார். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களின் உயர்கல்வி, உத்யோகம் குறித்த முயற்சிகள் நல்ல விதத் தில் முடியும். 3-ல் குரு மறைந்திருப்பதால், உங்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், அதிகாரிகளின் பாராட் டால் நீங்கள் உற்சாக மடைவீர்கள்.

அந்தஸ்து உயரும்!

ராசி  பலன்கள்

கடகம்: கடமை தவ றாதவர்களே! புதனும், சுக்கிரனும் 10-ல் நிற்பதுடன், சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். உறவி னர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்... வீண் அலைச்சல், மன இறுக்கம் வந்து போகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதுக் கிளை தொடங் குவீர்கள். உத்யோகத்தில் கட்டுப்பாடுகள் நீங்கும்.

உல்லாசப் பயணம்... உள்ளம் குளிர்விக்கும்!

ராசி  பலன்கள்

சிம்மம்: காலநேரம் தவறாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், தடைகள் நீங்கும். ஜென்ம குருவும், ராசிக்குள் ராகுவும் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர் கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்ப்புகள் விலகும் வேளை!

ராசி  பலன்கள்

கன்னி: மகிழ்வித்து மகிழ்பவர்களே! 3-ல் சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப் பதால், குடும்ப வரு மானம் உயரும் பிள்ளைகளை நீங்கள் புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 12-ல் குருவும், ராகுவும் மறைந்திருப்பதால்... வீண் பயம், குழப்பங்கள் வந்து போகும். வியா பாரத்தில் வாடிக்கையா ளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் உங்க ளுக்கு எதிரான அதிகாரி இடம் மாறுவார்.

நிம்மதி நிலவும்!

ராசி  பலன்கள்

துலாம்: நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே! சுக்கிரனும், புதனும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண் டிருப்பதால், குடும்பத் தில் நிம்மதி உண்டு. வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பாதச் சனியால் சங்கடங்கள் வரலாம். லாப வீட்டில் குருவும், ராகுவும் தொடர்வதால்... வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வியா பாரத்தில் வாடிக்கை யாளர்களைக் கவர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.


உடன்பிறப்பு கைகொடுக்கும்!

ராசி  பலன்கள்

விருச்சிகம்: எதார்த்த மாக பேசி காரியம் சாதிப்பவர்களே! ராசி நாதன் செவ்வாய் ராசிக் குள் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதுடன், 13-ம் தேதி வரை சூரியனும் 6-ல் நிற்பதால், உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவு வார்கள். சுக்கிரனும், புதனும் 6-ல் மறைந் திருப்பதால், உடல் உபாதை வந்து நீங்கும். ராகுவும், குருவும் 10-ல் நிற்பதால், மன உளைச் சல் ஏற்படலாம். வியா பாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் நிலையை தக்கவைக்க போராட வேண்டியிருக்கும்.

துணிவு துணை நிற்கும்!

ராசி  பலன்கள்

தனுசு: வாழ்க்கைப் பாடத்தைக் கற்றவர் களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். திடீர் பணவரவு உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். 14-ம் தேதி முதல் சூரியன் சாதகமாவதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடா கும். ஏழரைச் சனி தொடர்வதால், முக்கிய கோப்புகளைக் கவன மாகக் கையாளுங்கள். வியாபாரத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். 

பாசமழை பொழியும்!

ராசி  பலன்கள்

மகரம்: வெளிப்படை யாகப் பேசுபவர்களே! சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், நட்பு வட்டம் விரியும். வாழ்க்கைத் துணைவர் பாசமழை பொழிவார். ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால், குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வழக்க மான லாபம் உண்டு. உத்யோகத்தில் கூடுத லாக நேரம் ஒதுக்கி உழைத்தாலும், மூத்த அதிகாரியை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள்.

நல்லது நடக்கும்!

ராசி  பலன்கள்

கும்பம்: குத்தலாகப் பேசத் தெரியாதவர்களே! புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும்நிற்பதால், அவ்வப் போது பலவீனமாக உணர்வீர்கள். மின் சாரத்தை கவனமாக கையாளுங்கள். வியா பாரத்தில் வாடிக்கை யாளர்களைக் கவரு வீர்கள். உத்யோகத்தில் நீங்கள் உயரதிகாரிகளின் மன நிலையை அறிந்து அதற்கேற்ப செயல் படுவீர்கள்.

ஆபரண யோகம்!

ராசி  பலன்கள்

மீனம்: சுற்றத்தாரை அரவணைத்துச் செல்பவர்களே! 6-ல் ராகு வலுவாக அமர்ந் திருப்பதால், கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால், கோபம் குறையும் தடைப்பட்ட அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். குரு 6-ல் மறைந்திருப்பதால், சில காரியங்களைப் போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத் யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள்.

படங்கள்:இரா.யோகேஷ்வரன்