பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ன்மானம் மிகுந்தவர் நீங்கள். குரு 5-ல் தொடர்வதால், மாறுபட்ட யோசனை கள் உதயமாகும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். சிலருக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

14-ம் தேதி முதல் சூரியன் உங்கள் ராசியை விட்டு விலகுவதால், சோர்வு, சலிப்பு, படபடப்பு நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், ஆபரணங்கள் வாங்குவீர்கள். லாப வீட்டில் கேது தொடர்வதால், பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில், வாடிக்கையாளர்களைக் கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகள் உதவி செய்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

திடீர் திருப்பங்கள் உண்டாகும் காலம் இது. 

ராசிபலன்

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் நீங்கள். சூரியன் 14-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால், வேலை அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து போகும். செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சகோதரர்களால் பயனடைவீர்கள். கண்டகச் சனி தொடர்வ தாலும், 4-ல் ராகு நீடிப்பதாலும் திடீர் நண்பர்களை நம்ப வேண்டாம்.

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகவும். முடிந்த வரையிலும் முக்கிய விஷயங்களை நீங்களே நேரில் சென்று முடிக்கப் பாருங்கள். பூர்வ புண்ணியாதிபதி புதனும், 19-ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரனும் 12-ல் மறைந்திருப்பதால், உறவினர்- நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு 4-ல் தொடர்வதால், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! அறிமுகக் கலைஞர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

காலம் கருதி செயல்பட்டு வெல்பவர் நீங்கள். ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். ஷேர் மூலம் லாபம் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வழக்கு சாதகமாகும். புது பதவிகள் தேடி வரும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணவரவு உண்டு. ரசனைக்கேற்ப வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால், கம்பீரமாக பேசுவீர்கள். சகோதரிக்கு வேலை கிடைக்கும். காலி இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சூரியன் 14-ம் தேதி முதல் 12-ல் மறைவதால், பல விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். சில நாட்களில் தூக்கம் குறையும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். வியாபாரத்தில், எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்தியோகத்தில், வேலை அதிகரித்தாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் தருணம் இது.

ராசிபலன்

பொதுவுடைமை சிந்தனை கொண்டவர் நீங்கள். முக்கிய கிரகங்கள் வலுவாக இருப்பதால், அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது சொத்து சேரும். அரசால் அனுகூலம் உண்டு. சனி 5-ல் நிற்பதால், பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள்.

குரு 2-ல் நிற்பதால், பணபலம் உயரும். ஷேர் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சி கள் வீட்டில் ஏற்பாடாகும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். வியாபாரத்தில், புது யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துகொண்டு வலிய வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த புது வாய்ப்புகளும், தேடி வரும். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் வேளை இது.

ராசிபலன்

சீர்த்திருத்த சிந்தனை மிகுந்தவர் நீங்கள். செவ்வாய் 4-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதுடன், 14-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரபலம் பெற்று அமர்வதால் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். புது வேலை கிடைக்கும். பிதுர்வழிச் சொத்துக்கள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால், யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். எவருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில், வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பெரிய அளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். கலைஞர்கள் தங்கள் படைப்பு களை வெளியிட போராடவேண்டி இருக்கும்.

கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது.

ராசிபலன்

பொறுமையான செயல்பாடுகளால் சாதிப்பவர் நீங்கள். செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும். 

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், ஆடை- ஆபரணம் சேரும். ராசிநாதன் புதன் 8-ல் மறைந்திருப்பதால், வீண் அலைச்சல், செலவுகள், உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வந்து செல்லும். 12-ல் குருவும், ராகுவும் மறைந்திருப்பதால், எதிர்பாராத பயணங்கள் உண்டு. கேது வலுவாக இருப்பதால், வியாபாரம் செழிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். கலைத்துறையினரே! புதுமையான படைப்புகளால் புகழடைவீர்கள்.

பேரும் புகழும் கிடைக்கும் காலம் இது.

ராசிபலன்

கூடி வாழும் எண்ணம் கொண்டவர் நீங்கள். ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங் காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திருமணம் கூடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டில் உள்ள நண்பர்களால் திடீர்த் திருப்பம் உண்டாகும்.

புதன் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பாதச் சனி தொடர்வதால், செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 14-ம் தேதி முதல் சூரியன் 8-ல் மறைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் 20-ம் தேதி முதல் 8-ல் நுழைவதால், சளித் தொந்தரவு, காய்ச்சல், அசதி, சோர்வு வந்து விலகும். ஆனால், சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால், மனப்போராட்டங்கள் ஓயும். வியாபாரத்தில், உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

விடாமுயற்சியால் இலக்கை எட்டும் தருணம் இது.

ராசிபலன்

ழைப்பால் உயர்வு காணும் உத்தமர் நீங்கள். ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். எல்லா பிரச்னைகளில் இருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால், உடல் உஷ்ணம் அதிகமாகும்.

உங்களின் சப்தமாதிபதி சுக்கிரன் 20-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், பணப்பற்றாக்குறை விலகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால், வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உங்களின் உழைப்பை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். ஜென்மச் சனி தொடர்வதால், ஒருவித பதற்றம் வந்து செல்லும். வழக்குகளில் வழக்கறிஞரின் அணுகுமுறையைக் கவனிப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய விமர்சனங்கள் வந்து போகும்

காலம் அறிந்து செயல்படவேண்டிய வேளை இது.

ராசிபலன்

சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள்.14-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ராசிநாதன் குரு சாதகமாக இருப்பதால், அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். `சொந்த வீடு' ஆசை நிறைவேறும். புது வேலை அமையும்.

20-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், இறுமல், கழுத்து வலி, வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துபோகும். வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் வரக்கூடும். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. கேது 3-ம் வீட்டில் தொடர்வதால், மனோபலம் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று இனத்தவர்கள், மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வியாபாரத்தில், பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத் துறையினர்களே! உங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

னவலிமை மிகுந்தவர் நீங்கள். சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வசதி- வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கு சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

என்றாலும் சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். குருவும், ராகுவும் 8-ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, தோலில் நமைச்சல் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில், பணிச் சுமை அதிகரிக்கும்; கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சூழ்ச்சிகளைக் கடந்து வெற்றி காணும் தருணம் இது.

ராசிபலன்

சுற்றத்தாரை மகிழவைத்து மகிழ்பவர் நீங்கள்! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் தொடர்வதால், அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு பிரச்னைகள் வந்து போகும். மற்றவர்களின் ஆலோசனையின்றி யோசித்து முடிவெடுக்கவும். செவ்வாய் 10-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில், அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத் துறையினரே! நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் நேரம் இது.

ராசிபலன்

ன்பால் வெற்றி பெறுபவர் நீங்கள். புதன் 3-ல் நிற்பதுடன், 14-ம் தேதி முதல் சூரியனும் 3-ல் அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். ராகு வலுவாக இருப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வாகன வசதி பெருகும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

செவ்வாய் 9-ல் நிற்பதால், எதிர்ப்புகள் அடங்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், எளிதாக முடிய வேண்டிய விஷயங்களையும்  பலமுறை போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங் கள். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

விவேகமான முடிவுகளால் சாதிக்கும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு