மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

மே 18-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

திறமை... உச்சத்தில்!

ராசி பலன்கள்

மேஷம்: எதிரிக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! குருபகவான் 5-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வீட்டைப் புதுப்பிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. 2-ல் சூரியன் தொடர்வதால், பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.

அழகு, இளமை கூடும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: உழைப்பால் உயர்பவர்களே! 20-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்வதால்... அழகு, இளமை கூடும். கண்டகச் சனி தொடர்வதால், வாழ்க்கைத் துணைவரின் குறைகளை குத்திக்காட்டாதீர்கள். புதன் 12-ல் மறைந்திருப்பதால், உறவினர்களால் அன்புத் தொல்லைகள் வந்து போகும். சூரியன் ராசிக்குள் நிற்பதால், உடல் உபாதை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் அதிக பேச்சு வேண்டாம்.


எதிர்பார்த்த பணம் கிடைக்கும்!

ராசி பலன்கள்

மிதுனம்: பாசத்துக்கு கட்டுப்பட்டவர்களே! 6-ல் செவ்வாய் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கிடைக்கும். புது பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால்... மன இறுக்கம், அலைச்சல், செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து தகுந்த முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

வீடு களைகட்டும்!   

ராசி பலன்கள்

கடகம்: சமத்துவத்துக்காக போராடுபவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால், பணப்புழக்கம் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகளால் உங்கள் வீடு களைகட்டும். சுற்றுலா சென்றுவருவீர்கள். சனி 5-ல் தொடர்வதால், உங்கள் மனதில் குழப்பம் வந்து போகும். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்க போராட வேண்டிவரும். வியாபாரத்தில் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்யோகத்தில் உங்களின் உழைப்புக்கு மிகுந்த பாராட்டுகள் கிடைக்கும்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

சிம்மம்: அண்டமே சிதறினாலும் அஞ்சாதவர்களே! ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரபலம் பெற்று நிற்பதால், உங்களின் நிர்வாகத்திறன் கூடும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். குரு, ராகு மற்றும் சனியின் போக்கு சரியில்லாததால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.


அடிப்படை வசதிகள் பெருகும்!

ராசி பலன்கள்

கன்னி: நல்லது, கெட்டதை சமமாக பாவிப்பவர்களே! 20-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால், உங்களுக்கு அடிப்படை வசதிகள் பெருகும். உங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு விருப்பப்பட்ட வேலை கிடைக்கும். 12-ல் குருவும், ராகுவும் நிற்பதால், வீண் விரயம், அலைச்சல் வந்து செல்லும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் உங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

ரசனைக்கேற்ற வீடு அமையும்!

ராசி பலன்கள்

துலாம்: நாடி வருவோருக்கு நல்லது செய்பவர்களே! 20-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்கிரன் 8-ம் இடத்தில் ஆட்சிபெற்று அமர்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும். வெள்ளியாலான பொருட் கள் வாங்குவீர்கள். பாதச் சனி தொடர்வ தால், யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். சூரியன் 8- ல் மறைந்திருப்பதால், அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்யோகத்தில், சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மனப்போராட்டம் ஓயும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: வேகமாக செயல்படு பவர்களே! 6-ல் மறைந்து கிடக்கும் சுக்கிரன் 20-ம் தேதி முதல் 7-ம் வீட்டில் நுழைந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதால், மனப்போராட்டங்களில் இருந்து மீள்வீர்கள். புதன் 6-ல் மறைந்திருப் பதால்... சிக்கனமாக இருங்கள். சூரியனும் ராசிக்கு 7-ல் அமர்ந்திருப்பதால், உடல் உபாதை வந்து போகும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், டென்ஷன் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. 

போட்ட திட்டம் பலிக்கும்!

ராசி பலன்கள்

தனுசு: `தன் கையே தனக்கு உதவி' என்று வாழ்பவர்களே! சூரியன் 6-ல் நிற்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். உங்களுக்கு உறவினர்களின் ஆதரவு உண்டு. சுக்கிரன் 20-ம் தேதி முதல் 6-ல் மறைவதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் நீங்கள் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

வாழ்க்கைத் துணைவரால் மனமகிழ்ச்சி!

ராசி பலன்கள்

மகரம்: வசதி வந்த போதும் பழைய வாழ்க்கையை மறக்காதவர்களே! சனியும், செவ்வாயும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், நினைத்தது நிறைவேறும். வாழ்க்கைத் துணைவர் பொறுப்பாக நடந்துகொள்வார். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் ஏமாற்றம், பேச்சால் பிரச்னை வந்து போகும். குரு 8-ல் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார்.   

கனத்த மனசு லேசாகும்!

ராசி பலன்கள்

கும்பம்: உதவும் குணத்தால் உயர்ந்தவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். கனத்த மனசு லேசாகும். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை தேடுபவர்களுக்கு, நல்ல வேலை அமையும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்...  உடல் அசதி, வீண் டென்ஷன் வந்து போகும். அக்கம்பக்கம் இருப்பவர்களை அனு சரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் நீங்கள் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.             

காரிய தாமதம் விலகும்!

ராசி பலன்கள்

மீனம்: ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களே! சூரியன் 3-ல் நிற்பதால், துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். தாமதமான காரியங்கள் விரைவில், நல்ல விதத்தில் முடிவடையும். வீட்டு உபயோக சாதனங்களைப் புதிதாக வாங்குவீர்கள். 6-ல் குரு மறைந்திருப்பதால், மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.