Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

ஜூன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள்

ஜூன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள்

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: எதிலும் மாற்றத்தை விரும்புபவர்களே! லாப வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். 12-ம் தேதி வரை சப்தமாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று 2-ல் அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணைவர் முழுமையாக நேசிப்பார். 5-ல் ராகு தொடர்வதால், மனதில் குழப்பங்கள் வந்து செல்லும். அஷ்டமத்துச் சனி தொடர் வதால், வீண் விரயம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் தருவீர்கள்.     

உறவினர்களால் ஆதாயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசி பலன்கள்

ரிஷபம்: தராதரம் அறிந்து பழகுபவர்களே! 12-ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். சனி, ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதக மாக இல்லாததால், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சில நேரங்களில் பிடிப்பில்லாமல் போகும்.

சொத்து வாங்கும் யோகம்!

ராசி பலன்கள்

மிதுனம்: சமயோஜித புத்தியால் சாதிப்பவர்களே! சனி வலுவாக 6-ம் வீட்டில் தொடர்வதால், கடினமான காரியங்களையும் நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். புது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத் தில் உங்கள் செல்வாக்கு உயரும். 3-ம் இடத்தில் குரு மறைந் திருப்பதால்... வேலைச்சுமை, வீண் அலைச்சல் வந்து போகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.

வெற்றி மீது வெற்றி!

ராசி பலன்கள்

கடகம்: மனதில் பட்டதை மறைக்காதவர்களே! குரு 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி கிட்டும். பணபலம் உயரும். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து அதிகரிக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்... திடீர் செலவுகள், உடல்நலக்கோளாறு ஏற்படலாம். சனி 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் குறித்த கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர் கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக்காட்டுவீர்கள்.

நட்பு வட்டம் விரியும்!

ராசி பலன்கள்

சிம்மம்: தன்மானத்தை விட்டுக்கொடுக்காதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், நட்பு வட்டம் விரியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. 4-ல் சனியும், ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்வதால்,  மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில், கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

புகழ், கௌரவம் கூடும்!

ராசி பலன்கள்

கன்னி: பாகுபாடு இல்லாமல் பழகுபவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக 3-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். ராசிக்கு 12-ல் குருவும், ராகுவும் தொடர்வதால், உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.  

பதவி உயரும்!

ராசி பலன்கள்

துலாம்: மூடநம்பிக்கை இல்லா தவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாழ்க்கைத் துணைவர் உங்களுடைய நிர்வாகத் திறமையை மதிப்பார். உறவினர்கள் வீடு தேடி வந்து அன்பாக பழகு வார்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். பாதச் சனி தொடர்வதால், யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு உண்டு. இடமாற்றமும் ஏற்படக்கூடும்.

பூசல்கள் விலகும்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: ஆணவத்துக்கு அடி பணியாதவர்களே! 12-ம் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 7-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர்கள். 3-ம் தேதி முதல் புதன் ராசிக்கு 7-ல் அமர்ந்து, உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதால்... உறவினர்கள், தோழிகளுடனான  பூசல்கள் விலகும். 10-ல் குருவும், ராகுவும் தொடர்வதால், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவு படுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு மனவருத்தம் இருக்கும். 

சாமர்த்தியம் துணை நிற்கும்!

ராசி பலன்கள்

தனுசு: எதையும் நேருக்கு நேராக பேசுபவர்களே! ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்ப தால், பிரச்னைகளுக்கு சாமர்த்திய மாக தீர்வு காண்பீர்கள். 12-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப் பதால், வாழ்க்கைத் துணைவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். 3-ம் தேதி முதல் புதனும் 6-ல் மறைவதால், உடல்நலக்கோளாறு வந்து செல்லும். ஏழரைச் சனி தொடர்வதால் யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள்.

கொடுத்த கடன் திரும்பி வரும்!

ராசி பலன்கள்

மகரம்: அலட்டிக்கொள்ளாமல் அதிகாரத்தை நிலைநாட்டுபவர்களே! லாப வீட்டில் செவ்வாயும், சனியும் தொடர்வதால், கொடுத்த கடன் திரும்பி வரும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 5-ல் சூரியன் தொடர்வதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால்... வீண் செலவுகள், வாகனப் பழுது  வந்து போகும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் சவால்களை சந்திக்க வேண்டிவரும்.

நல்ல செய்திகள் வரும்!

ராசி பலன்கள்

கும்பம்: தயாள குணம் கொண்டவர்களே! புதனும், சுக்கிரனும் சாதக மான நட்சத்திரங்களில் செல்வதால், வாழ்க்கைத் துணைவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டு, மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். நீங்கள் கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், முன்யோசனையில்லாமல் செயல்படாதீர் கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்கள் தலைதூக்கும்.

மறுக்கப்பட்ட உரிமை கிடைக்கும்!

ராசி பலன்கள்

மீனம்: லட்சிய கனவுடன் வாழ்பவர் களே! ராகு வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால், எதிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ராசிநாதன் குரு 6-ல் மறைந்திருப்பதால், ஏமாற்றம், வீண் விரயம், மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism