தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ஜூன் 7 முதல் 20 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்கள் நீங்கள்! லாப வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால், கடினமான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். புது வேலை கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குரு 5-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சின்னச் சின்ன போராட்டம் வந்து போகும்.

15-ம் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால், அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தாலும், சனியுடன் நிற்பதால் முன்கோபம், ரத்த அழுத்தம், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கடையை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சில ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள். கலைத்துறையினரே! மற்றவர்களால் கௌரவிக்கப்படுவீர்கள்.

எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் காலம் இது.

ராசிபலன்

தன்மானமும் தளராத மனசும் கொண்டவர்கள் நீங்கள்! ராசிநாதன் சுக்ரனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும், சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். 4-ல் குருவும், ராகுவும் நீடிப்பதால், உங்கள் திறமையின்மீது அவ்வப்போது சந்தேகம் வரும். ஆன்மிகத்தை மனம் நாடும்.

15-ம் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், பேச்சால் பிரச்னை வரக்கூடும். கண்டகச் சனி தொடர்வதால், வீண் அலைச்சல் வந்து செல்லும். என்றாலும், சப்தமாதிபதி செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத்துறையினரே! உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

 மன உறுதியுடன் போராடி வெல்லும் வேளை இது.

ராசிபலன்

தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறுபவர்கள் நீங்கள்! ராசிநாதன் புதனும், பூர்வ புண்ணியாதிபதி சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்தை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அலைச்சல், காரியத் தாமதம் வந்து செல்லும். சனியும், செவ்வாயும் 6-ல் நிற்பதால், வழக்கு சுமுகமாகும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

கேது 9-ம் இடத்தில் நிற்பதால், தந்தையாருக்கு மருத்துவச் செலவு, அவருக்கு வேலைச்சுமை, டென்ஷன் வந்து போகும். குரு 3-ல் மறைந்திருப்பதால், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வரக்கூடும். கோயில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்வார். சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும்.

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.

ராசிபலன்

பிறர் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள்! 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனதுக்கு இதமான செய்திகள் வரும். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, மனை அமையும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால், திடீர் பயணங்கள் ஏற்படும்.  5-ல் சனி தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.

2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால், வீண் வறட்டுக் கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் வந்து போகும். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

புயலாய் இருந்த நிலை மாறி, தென்றல் வீசும் தருணம் இது.

ராசிபலன்

தனக்குத் தானே நீதிபதியாக இருப்பவர்கள் நீங்கள்! 15-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் அமர்வதால், உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், சிறுகச் சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது வாங்க நினைப்பீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், அசதி, சோர்வு, படபடப்பு வந்து செல்லும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். ராசிக்குள் குருவும் ராகுவும் நீடிப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும்.

செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் காலம் இது.

ராசிபலன்

வாழ்க்கை வாழ்வதற்கே என நினைப்பவர்கள் நீங்கள்! சனிபகவான் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மகனை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புது வேலை கிடைக்கும்.15-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால், புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும்.

குருவும் ராகுவும் 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். கேது 6-ம் இடத்தில் தொடர்வதால், எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் வேளை இது.

ராசிபலன்

படிப்பறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே! லாப வீட்டில் குருவும், ராகுவும் தொடர்வதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வழக்கில் வெற்றி கிட்டும். 13-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்ரன் 9-ம் வீட்டுக்குள் நுழைவதால், உற்சாகமடைவீர்கள். பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியும், நண்பர்களால் ஆதாயமும் உண்டு. தந்தை வழியில் ஆதரவு பெருகும்.

பாதச் சனி தொடர்வதால் பகை, விவாதங்கள் வந்து போகும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

திடீர் திருப்பங்கள் உண்டாகும் நேரம் இது.

ராசிபலன்

முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள் நீங்கள்! ராசிக்கு 7-ம் வீட்டில் புதன் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் உண்டு. கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். ராசிக்குள் சனியும், 10-ல் ராகுவும் குருவும் தொடர்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். தூக்கம் கெடும்.

மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். திடீரென்று அறிமுகமாகும் நபர்களை நம்பி ஒப்பந்தங்கள் செய்துகொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைத்துறையினரே! நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் காலம் இது.

ராசிபலன்

சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கத் தயங்காதவர்கள் நீங்கள்! கேது வலுவாக 3-ம் வீட்டில் தொடர்வதால், வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால், சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வீண் சந்தேகம், தற்பெருமை போன்ற பிரச்னைகளால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். உறவினர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். ஏழரைச் சனி தொடர்ந்து கொண்டிருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

15-ம் தேதி முதல் சூரியன் 7-ல் நுழைவதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி பாராட்டுவார். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் தருணம் இது.    

ராசிபலன்

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர்களே! லாப வீட்டில் செவ்வாயும் சனியும் நிற்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 15-ம் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புதன் சாதகமாக இருப்பதால், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

13-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், வீண் செலவுகள் வந்து போகும். வாழ்க்ைகத்துணையோடு விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி செயல்பட வேண்டாம். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும்.

திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய வேளை இது.

ராசிபலன்

கலாசாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் நீங்கள்! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உறவினர், நண்பர்களால் இருந்து வந்த அன்புத்தொல்லை குறையும். குரு சாதகமாக இருப்பதால், திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள்.

கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும்.
15-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால், மன உளைச்சல், வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வந்து செல்லும். பிள்ளைகளை அன்பாகச் சொல்லி திருத்தவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். பங்குதாரர்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சின்னச் சின்ன சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினரே! அறிமுக கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.


உழைப்பால் உயரும் காலம் இது.

ராசிபலன்

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று இருப்பவர்கள் நீங்கள்! ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடி மனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் வழியில் ஆதரவாக இருப்பார்கள். புதிதாக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீட்டைக் கட்டி முடிக்க எதிர் பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால், உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் வாங்க பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணம் இது.