தன்னம்பிக்கை
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூன் 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா

பிள்ளைகளால் நிம்மதி!

ராசி பலன்கள்

மேஷம்: முற்போக்குவாதிகளே! சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால், உங்களுக்கு திடீர் பணவரவு உண்டு. குரு 5-ம் வீட்டில் நீடிப்பதால், பிள்ளைகள் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். ராசிநாதன் செவ்வாய் 19-ம் தேதி முதல் சனியை விட்டு விலகுவதால், உடல் உபாதை நீங்கும். 7-ல் செவ்வாய் வக்ரமாகி அமர்வதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவீர்கள்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: கலாரசிகர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வ தால், எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும். நீண்ட காலமாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இடத்துக்கு சென்று வருவீர்கள். ராகு, கேது மற்றும் சனியின் போக்கு உங்களுக்கு சாதகமாக இல்லாததால்... கவலை கள், ஏமாற்றம், மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் தவறுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினால், அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

உத்யோகத்தில் முன்னேற்றம்!

ராசி பலன்கள்

மிதுனம்: கொடுக்கும் குணம் கொண்டவர்களே! 20-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்வதால், அழகு, ஆரோக்கியம் கூடும். சனி 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், சிலர் அயல்நாடு செல்வீர்கள். ராசியிலேயே சூரியன் அமர்வதால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 5-ல் வக்ரமாகி அமர்வதால், பிள்ளைகளால் அலைச் சல், செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வாகன வசதி பெருகும்!

ராசி பலன்கள்

கடகம்: சிரிக்க பேசி சிந்திக்க வைப்பவர்களே! குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், திடீர் பணவரவு உண்டு. வாகன வசதி பெருகும். 5-ம் வீட்டில் சனி நிற்பதால், பிள்ளைகளை கண்டிப்பு என்ற பெயரில் கஷ்டப்படுத்தாதீர்கள். ராசிக்கு 12-ல் சூரியன் மறைவதால், வேலைச்சுமை, தூக்கமின்மை வந்து போகும். செவ்வாய் 19-ம் தேதி முதல் வக்ரமாகி 4-ல் அமர்வதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும் வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்யோகத் தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

உறவுகள் கைகொடுக்கும்!

ராசி பலன்கள்

சிம்மம்: எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாதவர்களே! ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் நுழைவதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால், மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். செவ்வாய் 19-ம் தேதி முதல் வக்ரமானாலும், 3-ம் வீட்டில் அமர்வதால், சகோதரருடனான மனவருத்தம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்யோகத்தில் சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். 

இல்லத்தில் மதிப்பு கூடும்!

ராசி பலன்கள்

கன்னி: எதையும் திட்டமிட்டு செய்பவர்களே! 20-ம் தேதி முதல் ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சிபெற்று அமர்வதால், கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வாழ்க் கைத் துணைவர் நீங்கள் சொல்வதை செய்வார். சனியும், கேதுவும் வலுவாக இருப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்ரமாகி ராசிக்கு 2-ல் அமர்வதால், பேச்சால் பிரச்னைகள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும்.

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

துலாம்: நன்றி மறவாதவர்களே! குருவும், ராகுவும் லாப வீட்டில் தொடர்வதால், செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். 19-ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் வக்ரமாகி நுழைவதால்...  வீண் டென்ஷன், தூக்கமின்மை வந்து செல்லும். ஏழரைச் சனி தொடர்வதால், யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், அதிகாரிகள் சொன்னதை முடித்துக்காட்டுவீர்கள்.

புதிய பாதையில் பயணம்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: எப்போதும் தடம் மாறாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். தோழிகள், உறவினர் கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். 10-ல் குருவும், ராகுவும் தொடர்வ தால்... நகைகளை இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். 19-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் வக்ரமாகி 12-ல் மறைவதால், அலைச்சல், செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சில நேரங்களில் உயரதிகாரி கோபப்படுவார்.

வாய்ப்புகள் தேடி வரும்!

ராசி பலன்கள்

தனுசு: எதையும் ஆழமாக சிந்திப்பவர்களே! 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்ரமாகி லாப வீட்டில் அமர்வதால், புது வாய்ப்புகள் தேடி வரும். கேது 3-ல் நிற்பதால், திருமணம் தாமதமானவர்களுக்கு விரைவில் கூடி வரும். 19-ம் தேதி வரை புதன் 6-ல் மறைந்திருப்பதால், சோர்வு ஏற்படும். 20-ம் தேதி முதல் புதன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கவிருப்பதால் சுறுசுறுப்பாவீர்கள். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.    

எதிர்ப்புகள் அடங்கும்!

ராசி பலன்கள்

மகரம்: சமாதானத்தை விரும்புபவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், எதிர்ப்புகள் அடங்கும். 6-ம் வீட்டில் சுக்கிரன் தொடர்வதுடன், 20-ம் தேதி முதல் புதனும் 6-ல் மறைவதால், உடல்நலக்கோளாறு வந்து நீங்கும். செவ்வாய் வக்கிரமானாலும் சாதகமான வீடுகளில் செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்களை நல்லவிதமாக புரிந்துகொள்வார் கள். வியாபாரத்தில் புது வாடிக்கை யாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள்.

ஆபரண யோகம்!

ராசி பலன்கள்

கும்பம்: நல்லது செய்தே நலிந்த வர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சூரியன் 5-ல் நீடிப்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு 7-ல் தொடர்வதால், விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்... வீண் விரயம், மனஇறுக்கம் வந்து செல்லும். வியாபாரத் தில், முன்னெச்சரிக்கையாக செயல்படுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

வேலைச்சுமை அதிகரிக்கும்!

ராசி பலன்கள்

மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மகளுக்கு தீவிரமாக வரன் தேடுவீர்கள். மகனை விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்ரமாகி 8-ல் மறைவதால், மின் சாதனங்களை மிகவும் கவனமாக கையாளுங்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசு காரியங்கள் நல்ல விதத் தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் நீங்கள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும்.