மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை

`ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

தடைகள் நீங்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: எதையும் வித்தியாசமாக யோசிப்பவர்களே! சுக்கிரனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். பணபலம் உயரும். ஆடை, ஆபரணம் சேரும். அரசால் அனுகூலம் உண்டு. ஜூலை 1-ம் தேதி முதல் 8-ல் நிற்கும் சனியுடன் ராசிநாதன் செவ்வாய் இணைவதால்... சலிப்பு, சோர்வு வந்து போகும். வியாபாரத்தில் நீங்கள் புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

ராசி பலன்கள்

புதன், சுக்கிரன் சாதகம்!

ரிஷபம்:
நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். சனி, குரு மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், நெருக்கமாக பழகியவர்கள்கூட உங்களைக் குறை கூற நேரிடலாம். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.

ராசி பலன்கள்

ரியல் எஸ்டேட்... லாபகரம்!

மிதுனம்:
இலவசங்களை விரும்பாதவர்களே! சூரியன் ராசிக்குள்ளேயே தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் போகும். என்றாலும் ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், நல்லவர்கள் நட்பால் முன்னேறுவீர்கள். ஜூலை 1-ம் தேதி முதல் செவ்வாய் ஆட்சிபெற்று 6-ம் இடத்திலேயே அமர்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

ராசி பலன்கள்

குடும்ப வருமானம் உயரும்!

கடகம்:
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடந்துகொள்பவர்களே! குரு வலுவாக இருப்பதால், நீங்கள் சாமர்த்தியமாக காரியம் சாதிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். சுபச் செலவுகளும் அதிகமாகும். சனி 5-ல் நிற்பதுடன், ஜூலை 1-ம் தேதி முதல் செவ்வாயும் 5-ல் நுழைவதால், சகோதர வகையில் மனத்தாங்கல் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார்.

ராசி பலன்கள்

வாகனம் செலவு வைக்கும்!

சிம்மம்:
தயாள குணம் உள்ளவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக இருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வார்கள். அர்த்தாஷ்டமச் சனி
தொடர்வதால், வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். ஜென்ம ராசியிலேயே ராகுவும், குருவும் நீடிப்ப தால், அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும்.

ராசி பலன்கள்

தைரியம் அதிகரிக்கும்!

கன்னி:
சிரிக்கப் பேசி சிந்திக்க வைப்பவர்களே! ஜூலை 1-ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் நுழைவதால், உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும். பணவரவும் அதிகரிக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத் தில் புகழ், கௌரவம் உயரும். ராகுவும், குருவும் 12-ம் வீட்டில் நிற்பதால், உங்களுக்கு மன சஞ்சலம் ஏற்படலாம். கசப்பான பழைய சம்பவங்களை நினைத்து டென்ஷனாகாதீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

ராசி பலன்கள்

திறமை வெளிப்படும்!

துலாம்:
கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். ஜூலை 1-ம் தேதி முதல் செவ்வாய் உங்களுடைய ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால்,  உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்வார்கள். பாதச் சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து போகும்.  வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கிடைக் கும். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.       

ராசி பலன்கள்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்!

விருச்சிகம்:
முற்போக்கு சிந்தனையாளர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சனி உங்கள் ராசியிலேயே தொடர்ந்துகொண்டிருப்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங் கள். ராசிநாதன் செவ்வாய் ஜூலை 1-ம் தேதி முதல் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே அமர்வதால், அலைச்சல் குறையும். என்றாலும் சனியுடன் சேர்வதால், உடல்நலக் கோளாறு வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு களை தவிர்க்கவும். உத்யோகத்தில் தடுமாற்றங்கள் இருக்கும்.

ராசி பலன்கள்

மகன், மகள் உள்ளம் மகிழும்!

தனுசு:
சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதவர்களே! கேது 3-ம் இடத்திலேயே முகாமிட்டிருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஜூலை 1-ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 12-ல் நிற்கும் சனியுடன் சேர்வதால், அவ்வப்போது தூக்கம் குறையும். எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார்.

ராசி பலன்கள்

பணப்பற்றாக்குறை நீங்கும்!

மகரம்:
புதுமை விரும்பிகளே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணப்பற்றாக் குறை நீங்கும். ஜூலை 6-ம் தேதி முதல் புதனும், 8-ம் தேதி முதல் சுக்கிரனும் ராசிக்கு 7-ல் நுழைந்து உங்களைப் பார்க்கவிருப்பதால், சோர்வு நீங்கும். சனி லாப வீட்டில் நிற்பதுடன், செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். குரு மற்றும் ராகு, கேது சாதகமாக இல்லாததால், வீண் டென்ஷன் வந்து செல்லும். உத்யோகத்தில் காரிய தாமதம் வந்து போகும்.

ராசி பலன்கள்

நல்ல வேலை அமையும்!

கும்பம்:
எதையும் ஆழமாக சிந்திப்பவர்களே! குரு வலுவாக அமர்ந்திருப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். 6-ம் தேதி முதல் புதனும், 8-ம் தேதி முதல் சுக்கிரனும் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால், உடல் உபாதை ஏற்படும். சூரியன் 5-ல் தொடர்வதால், பிள்ளைகளின் படிப்பில் அதிக கவனம் செலுத்துங் கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் உங்களுக்கு எதிரான உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.

ராசி பலன்கள்

மனவருத்தம் விலகும்!

மீனம்:
குலப்பெருமை காப்பவர்களே! ராகு வலுவாக 6-ம் இடத்திலேயே தொடர்வதால், வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஜூலை 1-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைவதால், உடன் பிறந்தவர்களுடனான மனவருத்தம் விலகும். குரு சாதகமாக இல்லாத தால், எதிர்காலம் பற்றிய பயம் வந்து செல்லும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும்.