Published:Updated:

விருச்சிக ராசிக்காரர்களே... சுபச் செலவுகள் அதிகரிக்கப்போகிறது... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology

விருச்சிக ராசிக்காரர்களே...  சுபச் செலவுகள் அதிகரிக்கப்போகிறது... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology
விருச்சிக ராசிக்காரர்களே... சுபச் செலவுகள் அதிகரிக்கப்போகிறது... விளம்பி தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்! #Astrology

விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் ராசிநாதனான செவ்வாய் 30.4.2018 முதல் 27.10.2018 வரை உச்சம் பெற்று 3-ம் வீட்டில் நிற்பதால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

ங்கள் விருச்சிக ராசிக்கு யோகக்காரனான குரு பகவான், வக்ரமாகி 12-ம் வீட்டிலிருப்பதால், செலவுகள் அதிகமாகும். எனவே, கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சின்னச் சின்ன விவாதங்களெல்லாம் பெரிய வாக்குவாதமாகிவிடுமென்பதால் அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

அக்டோபர் 4-ம் தேதி முதல் குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். `நம் உடல்தான் நன்றாக இருக்கிறதே... நமக்கு என்ன வந்துவிடப் போகிறது' என்று அசட்டையாக இருக்காதீர்கள்.

உங்களுக்கு ஜன்ம சனி வேறு நடந்துகொண்டிருப்பதால், ரத்தப் பரிசோதனை, உடல் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக, எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள்.

அக்டோபர் மாதம் 3-ம் தேதியிலிருந்து மார்ச் 12-ம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே இருக்கிறார். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

மார்ச் 13-ம் தேதியிலிருந்து குரு பகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால், அப்போது முதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. வாரிசுகளில்லாமல் வருந்திய தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் உண்டாகும்.

உங்கள் ராசிநாதனான செவ்வாய் 30.4.2018 முதல் 27.10.2018 வரை உச்சம் பெற்று 3-ம் வீட்டில் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர் வகையில் இருந்துவந்த தொந்தரவுகள் விலகும்.

சொத்து சம்பந்தமான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதே சமயம் செவ்வாயுடன் கேதுவும் சேர்ந்திருப்பதால், சகோதரர்களுடனான பேச்சுவார்த்தையின்போது, மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள். புதிய சொத்துகள் வாங்கும்போது கவனமாக இருங்கள். தாய்ப் பத்திரத்தை வாங்கி, சரிபார்த்துவிட்டு சொத்துகளை வாங்குவது நல்லது.

உங்களுக்கு ஏழரைச் சனியில் இப்போது பாதச்சனி நடைபெறுவதால் சாலைகளைக் கடக்கும்போதும் மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும் கவனமாக இருங்கள்.

உங்கள் ராசிக்கு உரிய களத்திர ஸ்தானதிபதி சுக்கிரன் ராசிக்கு 12-ல் இருக்கிறார். புதிதாக வீடு கட்டி, குடிபுகும் வாய்ப்பு உண்டு. பழைய ரிப்பேரான வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிக ராசிப் பெண்கள் இந்த விளம்பி வருடத்தில் நிறையவே சாதித்துக் காட்டுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் புதிய பதவிகள் பொறுப்புகள் தேடிவரும். இல்லதரசிகளுக்குப் புதிதாக வேலை கிடைக்கும். இல்லாவிட்டால், வீட்டிலிருந்தபடியே அவர்கள் சிறுதொழில் செய்து முன்னேறும் வாய்ப்புண்டு.

மாணவ, மாணவிகளுக்கு கடந்த சில ஆண்டுகளைப்போல அல்லாமல், படிப்பில் ஆர்வமும் உத்வேகமும் பிறக்கும். விடைகளை ஒருமுறைக்கு இரண்டு முறை எழுதிப் பாருங்கள். இந்த ஆண்டு கல்வியில் நீங்கள் மிகப் பெரிய சாதனைகள் படைப்பீர்கள்.

வியாபாரத்தில் இந்த வருடம் மிக அருமையாக இருக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலிருப்பதால், அக்டோபர் வரை சின்னச் சின்ன சச்சரவுகள் இருக்கும். அக்டோபருக்குப் பிறகு சந்திரனும் குருவும் இணைவதால், நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பற்று, வரவு உயரும்.

பொதுவாகவே, ஏழரைச்சனி நடக்கும்போது பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் சின்னச் சின்ன தொல்லைகள் ஏற்படும். இதனால், புதியவர்களை உங்கள் வியாபாரத்தில் சேர்த்துக்கொண்டு முன்னேறுவீர்கள். பங்குதாரர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு அருமையாக அமையும். வேலைப்பளு, பணிச்சுமை இதெல்லாம் அதிகமானாலும் மனதில் நிம்மதி பிறக்கும்.

கலைத்துறையினருக்கு இடையில் ஏற்பட்ட தொய்வு இனி விலகும். புதிய பட வாய்ப்புகள் வீடு தேடி வரும். இதுநாள்வரை வராமலிருந்த சம்பள பாக்கிகள் வசூலாகும்.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு விளைச்சல் நல்லவிதமாக இருந்து, நல்ல லாபம் கிடைக்கும். பூச்சித்தொல்லை, எலித்தொல்லை ஆகியவை இருக்குமென்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டில் சின்னச் சின்ன தடைகளிருந்தாலும், அவற்றை எளிதாகத் தாண்டி வெற்றிபெறுவீர்கள்.

பரிகாரம்

திருச்சி உச்சிப் பிள்ளையாரை சங்கடஹர சதுர்த்தித் திருநாளில் வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.

அடுத்த கட்டுரைக்கு