Published:Updated:

ராசி பலன்கள்

ராசி பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள்

ஜூலை 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா

உறவுகள் உயர்த்தி வைக்கும்!

ராசி பலன்கள்

மேஷம்: தன்மானம் தவறாதவர்களே! புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். பணவரவு அதிகரிக்கும். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், பிள்ளைகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், நீங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும்.

பயணங்களால் மகிழ்ச்சி!

ராசி பலன்கள்

ரிஷபம்: தொடங்கியதை முடிக்கும் வரை துவளாதவர்களே! 16-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். ராகுவும், குருவும் 4-ல் தொடர்வதால், வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

கௌரவம் உயரும்!

ராசி பலன்கள்

மிதுனம்: சொன்ன சொல்லை நிறைவேற்றப் போராடுபவர்களே! செவ்வாயும், சனியும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 16-ம் தேதி முதல் சூரியன் 2-ல் அமர்வதால், பதற்றப்பட்டு பேச வேண்டாம். குரு 3-ல் மறைந்து கிடப்பதால், அவ்வப்போது சோர்வாக உணருவீர்கள். வியாபாரத்தில் தாமதமான ஒப்பந்தங்கள் இப்போது கையெழுத்தாகும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டி வரும்.

செயல் வேகம் கூடும்!

ராசி பலன்கள்

கடகம்: `எல்லோரும் நல்லவர் கள்' என நினைப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங் களில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழிநடத்துவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால். உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால்... ஏமாற்றம், வீண் விரயம் வந்து போகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய வேலைகளை ஒப்படைப்பார்.

நினைத்ததை முடிக்கும் நேரம்!

ராசி பலன்கள்

சிம்மம்: வேகமாகப் பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். 16-ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 12-ல் மறைவதால், திடீர் செலவுகள் ஏற்படும். அர்த்தாஷ்டமச் சனி நீடிப்பதால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

கேட்டது கிடைக்கும்!

ராசி பலன்கள்

கன்னி: சமயோஜித புத்தி உள்ளவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ராசிக்கு 12-ல்
குருவும், ராகுவும் தொடர்வதால்... வீண் டென்ஷன், செலவினங்கள் வந்து போகும். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் நீங்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

விருப்பங்கள் கைகூடும்!

ராசி பலன்கள்

துலாம்: யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்களே! 16-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவ தால், உங்கள் விருப்பங்கள் கைகூடும். புது வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு நல்ல பதில் வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். செவ்வாயும், சனியும் 2-ல் நிற்பதால், திடீர் செலவினங்கள் வந்துபோகும். யாருக்காகவும் ஜாமீன், கேரன்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அலட்சியம் தவிருங்கள்!

ராசி பலன்கள்

விருச்சிகம்: வருங்காலத்தை வளமாக்க தெரிந்தவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். சூரியன், சர்ப்ப கிரகங்கள், குரு மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இல்லாததால், அவ்வப்போது நிம்மதியற்றப் போக்கு நிலவும், அரசாங்க விஷயங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.   

இல்லறம் இனிக்கும்!

ராசி பலன்கள்

தனுசு: தாராள மனசு கொண்டவர் களே! கேதுவும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வாழ்க்கைத் துணைவர் நேசிப்பார். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால்... மறதி, சின்னச் சின்ன ஏமாற்றம் வந்து செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தை புது முதலீடு செய்து விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். 

முன்னேற்றம் காணும் வேளை!

ராசி பலன்கள்

மகரம்: மனோபலம் அதிகம் உள்ளவர்களே! செவ்வாயும், சனியும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்ப தால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 16-ம் தேதி முதல் 7-ல் சூரியன் நுழைவதால்... வேலைச்சுமை அதிகரிக்கும். உறவினர் வகையில் டென்ஷன் இருக்கும். சர்ப்ப கிரகங்கள் சாதக மாக இல்லாததால், பல வேலைகள் தடைப்பட்டு முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று முடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.

உற்சாகம் ஊற்றெடுக்கும் நேரம்!

ராசி பலன்கள்

கும்பம்: மன்னிக்கும் மனப் பான்மை உள்ளவர்களே! 16-ம் தேதி முதல் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்வதால், வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். செவ்வாயும் சாதகமாக இருப்பதால், சகோதர வகையில் அனுகூலம் உண்டு. சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதுடன், 23-ம் தேதி வரை புதனும் 6-ல் நிற்பதால், வாகனப் பழுது ஏற்படலாம். 24-ம் தேதி முதல் புதன் 7-ல் அமர்வதால், உற்சாகமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.   

பணம் வந்து சேரும் வேளை!

ராசி பலன்கள்

மீனம்: கடந்த காலத்தை மறக் காதவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நினைத்த காரியங்கள் தடையின்றி முடியும். ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பார்த்த பணம் வந்து சேரும். 16-ம் தேதி முதல் 5-ல் சூரியன் அமர்வ தால், பிள்ளைகள் கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார்கள். 24-ம் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால், உடல் உபாதை வந்து நீங்கும். குரு சாதகமாக இல்லாததால், கவலைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.