Published:Updated:

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

Published:Updated:
திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!
திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

ர வருடம், மார்கழி மாதம், 5-ம் தேதி புதன்கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திர நாளில்... சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்த யோகத்தில், சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2:17-க்கு நேத்திரம், ஜீவனும் நிறைந்த பஞ்ச பட்சியில், காகம் நடைபயிலும் நேரத்தில், புதன் ஓரையில், சரியாக காலை 6:55 மணிக்கு, கன்னி ராசியில் இருந்து தன்னுடைய உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார் சனி பகவான். ஏறக்குறைய 16.12.14 வரை, துலாம் ராசியிலேயே அமர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகு, ஆடம்பரம், கலை, காவியம் ஆகியவற்றுக்கு சொந்தக்காரரான புதனின் வீட்டில் சனி அமர்கிறார். எனவே, மக்களிடையே எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்; ஆடம்பர மோகம் அதிகரிக்கும். சுற்றுலாத் துறை மேம்படும். நவீன டிசைன்களில் ஆபரணங்கள் வெளியாகும். ஜவுளித் துறையில் புதுமை பிறக்கும். துணிமணிகளின் விலை குறையும். விளையாட்டு வீரர்கள், சினிமா மற்றும் சின்னத் திரை கலைஞர்கள், அரசாங்கத்தால் சில சலுகைகள் பெறுவர்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியாவில் நவீன வகை வாகனத் தயாரிப்பு தொழிற்கூடங்கள் அமையும். கிராமங்கள் அசுர வளர்ச்சி அடையும். மறுமணம் செய்வோரது எண்ணிக்கை அதிகமாகும். வேலையாட்களின் தினக் கூலியும், மாதச் சம்பளமும் உயரும். பணியாட்கள் பற்றாக்குறையாலும் வேலை நிறுத்தத்தாலும் புகழ்பெற்ற தொழிற்கூடங்கள் பாதிப்படையும். விமானம், கப்பல் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும். பிரபலங்களும் வாகன விபத்துக்கு ஆளாவார்கள்.

நீதிபதிகளின் கை ஓங்கும். வழக்கறிஞர்களின் வருமானம் அதிகரிக்கும். ஊழல்வாதிகள் பெரிய பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஜனநாயகம் தழைக்கும். பெயரில் M, R, P, T, V, ஆகிய எழுத்துக்களில் ஒன்றை முதலெழுத்தாகக் கொண்டவர்கள் பிரபலம் ஆவார்கள்.

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!
##~##
26.3.12 முதல் 11.9.12 வரை சனி பகவான் வக்ரகதியில் கன்னி ராசியில் வந்து அமர்வதால், இந்த காலகட்டத்தில் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் பாதிப்படைவார்கள். அரசாங்கத்துக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கும் பனிப்போர் அதிகரிக்கும். தேர்வு முறையில் குளறுபடிகள், வினாத் தாள்கள் முன்னரே வெளியாகுதல் போன்ற நிலை ஏற்படும்.

தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரிக்கும். சனி பகவான் உச்சம் பெற்று அமர்வதால் சி.ஏ., கேட்டரிங், ஷிப்பிங், சிவில் மெக்கானிக்கல், டிசைனிங், விஷ§வல் கம்யூனிகேஷன், சுற்றுலா, சட்டம் போன்ற கல்வி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். வணிகவியல், ஐ.ஏ.எஸ் துறை பாடங்கள் மாற்றியமைக்கப்படும். கணினித் துறை மேலும் வளர்ச்சி பெறும். ஆனால் 2014-ன் தொடக்கத்திலிருந்து சரிவை சந்திக்கும்.

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

இந்தியாவின் கடக ராசிக்கு 4-ம் வீட்டில் சனி அமர்வதால், இங்கே தொழில் துவங்க உலகநாடுகள் போட்டி போடும். எனினும், அந்நிய நாடுகள் சிலவற்றின் ராஜதந்திரத்தால், நமது பொருளாதாரம் பாதிப்படையலாம்.

நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க, அதிநவீன ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்யும். நவீன செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்படும். மத்திய அரசு கவிழும் அபாயம் உண்டு. தலைவர்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.  சுவிஸ் உட்பட மேலை நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி வெளியாகும்.

பசு, ஆடுகள், குதிரை மற்றும் யானைகளின் எண்ணிக்கை குறையும். வன விலங்குகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்றவற்றின் விலை குறையும். ஆனால் மணல், சிமென்ட், கம்பி, செங்கல் போன்றவற்றின் விலை உயரும். புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும். சுரங்கத் தொழிலும் பாதிப்பு அடையலாம்.

பேருந்து, ரயில் மற்றும் விமானக் கட்டணங்களும், சமையல் எரிவாயு விலையும் உயரும். தங்கம் விலை சற்று குறைந்து, 2012 மத்தியிலிருந்து உயரும். மின் பற்றாக்குறை 2012-ன் பிற்பகுதியில் சரியாகும். பெட்ரோலின் மதிப்பு உயரும்.

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!

கண், பிறப்புறுப்புகள், விந்தணுக்கள் மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கும் கிருமிகள் வளரும். பருவம் தப்பி மழை பொழிந்தாலும், நீர்நிலைகள் நிரம்பி வழியும். வெள்ளப் பெருக்கால் நிலச் சரிவு, நில அரிப்பு ஏற்படலாம். அரிய வகை வைரங்கள் கண்டறியப்படும். நிழல் உலக தாதாக்கள் மற்றும் மோசடி பேர்வழிகளால் பரம்பரை பணக்காரர்கள் பாதிப்படைவார்கள். சிறுபான்மையின மக்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும். வங்கிகளில் வாராக் கடன் அதிகரிக்கும். புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும். விளை நிலங்கள், நீர் நிலைகளைப் பாதுகாக்க புது சட்டம் வரும்.

ரிஷபம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக் காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி திடீர் யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும். மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு மத்திம பலன்கள் உண்டாகும்.

மேஷம், கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு காரியத் தடைகளும், சிறு சிறு பாதிப்புகளும் வந்து நீங்கும்.

திடீர் யோகமும் அதிர்ஷ்டமும் தரப்போகும் சனிப்பெயர்ச்சி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism