Published:Updated:

ராசிபலன்

ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 1 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

னதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே!

உங்களின் பாக்கியாதிபதி குருபகவான் சாதகமாக இருப்பதால், எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். திடீர் பணவரவு உண்டு. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களால் மகிழ்ச்சி உண்டாகும். சூரியன் 4-ம் வீட்டில் நீடிப்பதால், வேலைச்சுமை இருக்கும். தாயாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும்.

8-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், ஒரு வகையில் நல்லது நடக்கும். ஆனால், உங்கள் ராசிநாதன் சனியுடன் இணைந்திருப்பதால், அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். கேது வலுவாக இருப்பதால் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சிந்தனையால் முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

தையும் திட்டமிட்டு செய்பவர்களே!

சூரியன் 3-ம் வீட்டில் இருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சாதுர்யமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். செவ்வாய் 7-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சகோதரர்கள் மதிப்பார்கள். வாழ்க்கைத் துணைக்குள் அந்நியோன்யம் பிறக்கும்.

4-ல் ராகுவும், குருவும் தொடர்வதால், வீட்டை விரிவுபடுத்துவது, புதுப்பிப்பது போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

அனுபவங்களால் சாதிக்கும் வேளை இது. 

ராசிபலன்

யார் உதவி கேட்டாலும் உதவுபவர்களே!

சனியும், செவ்வாயும் வலுவாக 6-ம் வீட்டில் நீடிப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். கௌரவப் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். 

ராசிக்கு 2-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு அயல்நாட்டில் அல்லது வேற்று மாநிலத்தில் வேலை கிடைக்கும். 3-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால், பல வேலையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.  வியாபாரம் செழிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

எங்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் வேளை இது. 

ராசிபலன்

ண்பாட்டை கட்டிக் காப்பவர்களே!

உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நிற்பதால், அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். ஆனால், குரு வலுவாக அமர்ந்திருப்பதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணமும் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர் களால் ஆதாயமடைவீர்கள். மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. 5-ம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

 5-ம் வீட்டிலேயே சனியும் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததால், ஏமாற்றம், இழப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

ராஜ தந்திரத்தால் முன்னேறும் காலம் இது.     

ராசிபலன்

ன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர்களே!

ராசிக்குள் குருவும் ராகுவும் நிற்பதால், சின்னச் சின்ன தொந்தரவுகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களில் அவ்வப்போது சிக்குவீர்கள். எந்த ஒரு வேலையும் முதல் முயற்சியிலேயே முடியாமல் இரண்டாவது, மூன்றாவது கட்டத்தில் முடியும். ஆனால், சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பணவரவு உண்டு. வாழ்க்கைத் துணைக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் சூரியன் 12-வது வீட்டில் மறைந்திருப்பதால், வேலைச்சுமை இருக்கும். எந்தக் காரியத்தை தொட்டாலும் தடங்கலாகி முடியும். சோர்வு, களைப்பு வரும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், நீங்கள் ஒன்று சொல்லப் போய் அதை சிலர் வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள். உங்களின் புகழ், கௌரவம் குறைய வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சின்னச் சின்ன இடர்பாடுகளும், மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

நாசூக்காகப் பேசி சாதிக்கும் நேரம் இது.   

ராசிபலன்

ர்ப்பாட்டம் இல்லாமல் சாதித்துக் காட்டுபவர்களே!

சனியும், செவ்வாயும் 3-ம் இடத்தில் தொடர்வதால், நினைத்தது நிறைவேறும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபல யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், செல்வாக்கு கூடும். சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு.

ராசிக்கு 12-ல் ராகுவும், குருவும் நீடிப்பதால், சுபச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் இருந்தாலும், ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள்.

அச்சம் விலகி அதிகாரம் பெருகும் தருணம் இது. 

ராசிபலன்

ளிவு மறைவு இல்லாமல் பேசுபவர்களே!

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்குள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என நினைத்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். சூரியன் வலுவாக இருப்பதால் புண்ணிய காரியங்கள், சுப காரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளும் வரும். அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும்.

ராசிக்கு 2-ல் சனியும் செவ்வாயும் நீடிப்பதால், சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். வி.ஐ.பி.க்களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! வெகுநாட்களாக தடைப்பட்ட வாய்ப்புகள் கூடி வரும்.

னவுகள் நனவாகும் வேளை இது. 

ராசிபலன்

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்பவர்களே!

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எல்லாப் பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால், திடீர் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். ராசிக்குள் சனி நிற்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

ராகுவும், குருவும் 10-ல் தொடர்வதால், மறைமுக அவமானம், வீண் பழி, தர்மசங்கடமான சூழல்கள் எல்லாம் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலம் இது.

ராசிபலன்

னக்கென தனிப்பாதையில் செல்பவர்களே!

கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். சூரியன் 8-ம் வீட்டில் தொடர்வதால், வீண் செலவுகள், ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிலர் உங்களை குற்றம் சாட்டிப் பேசினாலும் பலர் உங்களை பாராட்டிப் பேசுவார்கள். ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். 

ராசிக்கு 9-ல் ராகு தொடர்வதால், தந்தையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களின் பிரச்னைகள் ஓயும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அனுபவ அறிவால் வெற்றி பெறும் தருணம் இது.

ராசிபலன்

லங்கி வருபவர்களின் கண்ணீரைத் துடைப்பவர்களே!

ராசிநாதன் சனியும், செவ்வாயும் வலுவாக இருப்பதால், உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்.

குருவும், ராகுவும் 8-ல் தொடர்ந்துகொண்டிருப்பதால், வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். சிறிய காரியங்களைக் கூட இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பங்குதாரருடன் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். 

எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும் வேளை இது.

ராசிபலன்

ட்சிய கனவுடன் வாழ்பவர்களே!

சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால், எதிர்ப்புகள் அடங்கும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களின் மனம் மாறும். மனதில் தன்னம்பிக்கை வரும். பழைய கடனைத் தீர்க்க சில வழி கிடைக்கும். 24-ம் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கசப்பு உணர்வுகள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு வலுவாக இருப்பதால், வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் துணைக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்னைகளும் வரக்கூடும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது சின்னச் சின்ன மனக்குழப்பங்கள் வரக்கூடும்.

செவ்வாய் 10-ல் அமர்ந்திருப்பதால், வியாபாரம் தழைக்கும். வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரித்துப் போவார்கள். கலைத்துறையினரே!  வதந்திகளும் கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்து போகும்.

பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய தருணம் இது.

ராசிபலன்

றிந்ததை மற்றவர்களுக்காகப் பயன்படுத்துபவர்களே!

ராகுவின் பலத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக ஆற்றல் கிட்டும். தெய்வ பலம் கூடி வரும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலை அமையும். 24-ம் தேதி முதல் புதன் 6-ம் வீட்டில் மறைவதால், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். உறவினர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்து இருப்பதால், சில தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டி வரும்.

சூரியன் 5-ல் நிற்பதால், மன இறுக்கம் உண்டாகும். பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்து விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

தடைகளையும் தாண்டி முன்னேறும் காலம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு