Published:Updated:

ரிஷபம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
ரிஷபம்

டும் உழைப்பாளி நீங்கள். 21.12.2011 முதல் 16.12.2014 வரை சனி பகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். பக்குவமான பேச்சால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். நிம்மதி தேடி வரும். அறிவும், அழகும் வாய்ந்த குழந்தை பிறக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

பிள்ளைகள், உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வர். சிலர், சொந்த வீடு கட்டி குடிபுகுவீர்கள். கையில் பணம் தங்கும்; சேமிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளை, அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில், புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடனான மனக்கசப்புகள் நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளால் செலவு, பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் வந்து நீங்கும். கர்ப்பிணிகள் எடை மிகுந்த பொருட்களை கையாள வேண்டாம்.    

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
உங்கள் சப்தம- விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். வீடு- மனை சேரும். அரசால் ஆதாயம் உண்டு. மனைவி வழியிலும் சகோதர வகையிலும் உதவிகள் கிடைக்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை... ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், திடீர் பண வரவும், யோகமும் உண்டாகும். அயல்நாடு சென்று வருவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும்.

12.12.13 முதல் 18.5.14 வரை மற்றும் 11.9.14 முதல் 16.12.14 வரையிலும் உங்கள் அஷ்டம- லாபாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். கொஞ்சம் அலைச்சல், செலவுகள், மூத்த சகோதரர் வகையில் மனத்தாங்கல் ஏற்பட்டாலும், மற்றொரு பக்கம் செல்வாக்கும், பணப் புழக்கமும், ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். அரசாங்கத்தால் ஆதாயம் அடைவீர்கள்.

சனி 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கௌரவம் கூடும். எனினும், கூடாப் பழக்கவழக்கங்களையும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளையும் தவிர்க்கவும். சனி 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வாகனங் களை இயக்கும்போது கவனம் தேவை. எவருக்கும் ஜாமீன் போடவேண்டாம். சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணமும் வந்து சேரும். உறவினர்- நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிஷபம்

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பாக்கிகள் எளிதில் வசூலாகும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில், பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சியடையும். பங்குதாரர்கள், வேலை ஆட்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில், பதவி- சம்பள உயர்வு உண்டு. மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நலமாகும். மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு. கலைஞர்கள், வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவர்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி ராஜ யோகத்தைத் தருவதுடன், எதிலும் வெற்றி வாகை சூடவைக்கும்.