Published:Updated:

மிதுனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
மிதுனம்

ங்கிதமான பேச்சுக்கு சொந்தக்காரர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 5-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் உச்சமாகி வலுவடைவதால், கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் பொங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி விரைவில் பூர்த்தியாகும். உங்களின் செல்வாக்கு கூடும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5-ம் இடத்தில் சனி அமர்வதால், குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனினும் கர்ப்பிணிகள் நெடுந்தூர பயணத்தைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் நட்பு வட்டாரத்தையும் கண்காணிப்பது நல்லது. அவர்கள் விரும்பும் பாடப் பிரிவில், உயர்கல்வி பெற அனுமதியுங்கள். அவ்வப்போது மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை, யோகா மற்றும் தியானத்தால் போக்கலாம். தேக வலிமை கூடும். சொத்து வாங்குவீர்கள். சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் வேலைப்பளு, வீடு-வாகன பராமரிப்புச் செலவுகள், தாயாருக்கு உடல்நலக் குறைபாடு, பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
சனி பகவான் 21.12.11 முதல் 8.11.12 வரை, உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டதிபதியும் - லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் செல்கிறார். பழைய கடனை அடைக்க புது வழி பிறக்கும். சகோதரியின் திருமணம் முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். இருமல், யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைகிறார்; பயணங்கள் அதிகரிக்கும். எதிர்த்துப் பேசியவர்களும் வலிய வந்து உங்களை ஆதரிப்பர்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை... ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டு விசேஷங்களை எடுத்துக் கட்டி செய்வீர்கள். புது டி.வி., ஃப்ரிஜ் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் சப்தம - ஜீவனாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில், மனைவி வழி உறவினர்கள் உதவுவர். எனினும், அவர்களால் செலவுகளும் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

சனி 2-ம் வீட்டைப் பார்ப்பதால், கண் பரிசோதனை அவசியம். எவருக்கும் எதற்காகவும் வாக்குறுதி தர வேண்டாம். சனி பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வந்து நீங்கும். சனி லாப வீட்டைப் பார்ப்பதால், ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். விளம்பரங்களால் விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உங்களின் வாடிக்கையாளர் ஆவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.   உத்தியோகத்தில், கடின வேலைகளையும் எளிதில் முடிப்பீர்கள். செல்வாக்கு கூடும். கேட்ட இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும்.

மிதுனம்

கன்னிப் பெண்களுக்கு, உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடிவரும். மாணவர்களுக்கு அலட்சியம் நீங்கும். விளையாட்டில் பதக்கங்கள் உண்டு.கலைஞர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவதுடன், எதிலும் விவேகமாகச் செயல்பட்டு, சாதிக்க வைப்பதாக அமையும்.