Published:Updated:

சிம்மம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
சிம்மம்

லைமைப் பண்பு அதிகம் உள்ளவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 3-ம் வீட்டில் அமர்வதால் தொட்டது துலங்கும். முயற்சிகள் வெற்றி பெறும். இழந்த செல்வம், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். பெண்ணுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளை இல்லாமல் வருந்தியவர்களுக்கு, அழகிய வாரிசு உருவாகும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்குவீர்கள். இனி, பேச்சில் கறாராக இருப்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனி பகவான் வக்ரமாகி, 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்வதால், பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம். கேரண்டி கையெழுத்து போட வேண்டாம்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை, சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் சொத்து சேரும். வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

சுப நிகழ்வுகளால் வீடு களை கட்டும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், செலவுகள் கூடும். உறவினர்-நண்பர்களும் குறை கூறுவர். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை, ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும்; கடனை பைசல் செய்வீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வழக்கு சாதகமாகும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் பூர்வ புண்ணியாதி பதியும்-அட்டமாதிபதியுமான குரு பகவானின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்கிறார்.  இந்த காலகட்டத்தில், பிள்ளை பாக்யம் கிட்டும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு; பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம், உத்தியோகத் தில் பதவி உயர்வு உண்டு.

சனி 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர் படிப்பு, திருமணத்துக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.

சனி 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அந்தஸ்து உயரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சனி 12-ம் வீட்டைப் பார்ப்பதால், ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள்- சித்தர்கள் போன்றோரின் தொடர்பு கிடைக்கும்.  

வியாபாரத்தில், கடையை நவீனமயமாக்குவீர்கள். வேலை ஆட்களை மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளால், பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்கு பிரச்னை தந்து வந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வும் இனி கிடைக்கும். சிலருக்கு அதிகச் சம்பளத்துடன் புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும்.

சிம்மம்

கன்னிப் பெண்கள், தடைப்பட்ட கல்வியைத் தொடர்வீர்கள். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் உடனே முடியும். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். கலை- விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள் குறித்த கிசுகிசுத் தொல்லைகள் விலகும். நினைத்தது நிறைவேறும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, வெற்றிக்கனியை பறிக்க வைப்பதுடன், பகட்டான வாழ்வையும் அமைத்துத் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism