Published:Updated:

கன்னி

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
கன்னி

னிதநேயம் மிகுந்தவர் நீங்கள். சனி பகவான், 21.12.2011 முதல் 16.12.2014 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் உச்சம் அடைந்து வலுவாக அமர்வதால், பணப் புழக்கம் அதிகரிக்கும் எதிர்மறை எண்ணங்கள், வீண் பயம் ஆகியன நீங்கும்.

மதிப்பு உயரும். தவறான முடிவுகளால் பிரச்னைகள் சூழ்ந்த நிலை மாறும். உடல் நிலையும் சீராகும். எனினும் எளிய உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் தேவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுற்றியுள்ளவர்களில் நல்லவர்களை அடையாளம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவியின் மனக் குழப்பங்கள் நீங்கும்; உற்சாகம் மேலோங்கும். எனினும் பாதச் சனியாக அமைவதால், தம்பதிக்குள் ஈகோ பிரச்னை தலை தூக்கலாம். எல்லோரிடமும் கனிவுடன் பேசுங்கள். மற்றவர் பிரச்னையில் தலையிடுவது, சாட்சி கையெழுத்திடுவது  வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க விஷயங்கள்  தாமதமாகி முடியும். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்கிறார். இந்த காலகட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
உங்கள் திருதியஸ்தானாதிபதியும்-அஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மனைவிக்கு மாதவிடாய் பிரச்னை வந்து நீங்கும்.  4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால், பழைய பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகார பதவியில் அமர்வீர்கள்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். உத்தியோகத்தில் சிறுசிறு இடையூறுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். திருமணம் கூடி வரும்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில் தாய் வழியில் செலவுகள் வரும். வீடு மாறுவீர்கள். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கல்யாணம், காதுகுத்து என வீடு களை கட்டும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். சில காரியங்களை போராடி முடிக்கவேண்டி வரும். சனி பகவான் 8-ம் வீட்டை பார்ப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து புலம்புவீர்கள். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பண வரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

கன்னி

வியாபாரத்தில், போட்டியாளர்களைச் சமாளிக்கும் வகையில் உங்கள் அணுகுமுறை மாறும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்தியோகத்தில், உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். சிலருக்கு, அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டிருந்த திருமணம் நல்லவிதமாக நடந்தேறும். மாணவர்களுக்கு, விரும்பிய நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர்வீர்கள். கலைஞர்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஆரோக்கியத்தையும் பண வரவையும் தருவதாக அமையும்.