Published:Updated:

விருச்சிகம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
விருச்சிகம்

னசாட்சிப்படி செயல்படுபவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி, ராசிக்கு 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும்.

தற்போது விரய வீட்டில் வந்தமரும் சனி, யோக பலனையே தருவார். ஆனாலும், வீண் செலவுகள் வேண்டாம். தீர்க்க முடியாத பிரச்னைக்கும் தீர்வு காண்பீர்கள். தம்பதிக்குள் பனிப்போர் விலகும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மகான்களின் ஆசி கிட்டும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கவனமாக கையாளுங்கள். சனி வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், திடீர் யோகம், பண வரவு, வீடு- வாகன வசதி, வி.ஐ.பி-களின் அறிமுகம் எல்லாம் உண்டாகும்.            

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். ஆரோக் கியத்தில் கவனம் தேவை. எனினும் தன்னம்பிக்கை பிறக்கும். பூமி சேர்க்கை உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். பண வரவு உண்டு. தாய்வழி சொத்து கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி பகவான் வக்ரம் அடைவ தால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்கிறார். புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.  

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-தனாதிபதியு மான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, தொட்டது துலங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.          

சனி 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் துரத்தும். சனி 6-ம் வீட்டைப் பார்ப்பதால், வழக்கு சாதகமாகும். நோய் விலகும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், தந்தைக்கு நெஞ்சு வலி வந்து நீங்கும்.    

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள்.  மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர் கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்தி யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு.  

விருச்சிகம்

கன்னிப் பெண்களுக்கு, திருமண முயற்சி பலிதமாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். எனினும் உங்களின் படைப்புகளுக்கு, சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.  

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, யதார்த்தமான முடிவு களால் முன்னேற்றத்தையும், விட்டுக்கொடுக்கும் போக்கால் வெற்றியையும் தருவதாக அமையும்.