Published:Updated:

தனுசு

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
தனுசு

தவும் மனம் கொண்டவர் நீங்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, லாப வீட்டில் அமர்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. சேமிக்கும் எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

கணவன்-மனைவிக்குள் கலந்து பேசி குடும்பச் செலவு களைக் குறைக்க முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றிவிட்டு, ரசனைக்கேற்ற புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல் நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்பக்கத்தாரின் ஆதரவு பெருகும். தாய் வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அத்தை- மாமன் வழியிலான பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், உத்தியோகத்தில் வேலைச் சுமை, மறைமுக அவமானம், ஏமாற்றம் வந்து செல்லும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரயாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்கிறார். இந்த காலகட்டத்தில், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். உங்களை எதிரியாக நினைத்த பலரும், இனி உங்களின்

நல்ல மனசைப் புரிந்துகொள்வர். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால்... பிள்ளைகளால் அலைச்சல், உறவினர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்கு வீர்கள். தூரத்துச் சொந்தங்கள் தேடி வரும். 12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல் 16.12.14 வரை, உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வி.ஐ.பி-கள் உதவுவர். அரசாங்க நெருக்கடிகள் நீங்கும். பெரிய பதவிகள் தேடி வரும்.

சனி பகவான் ராசியைப் பார்ப்பதால், டென்ஷன், அலர்ஜி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.      

வியாபாரத்தில், தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்திய மாக விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களால், புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள், உங்கள் கோரிக்கையை ஏற்பர்.  உத்தியோகத்தில், உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

தனுசு

கன்னிப் பெண்களுக்கு, நல்ல கணவன் வாய்ப்பார். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு, மதிப்பெண் உயரும். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைஞர்களே, புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி வந்துசேரும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதாக அமையும்.