Published:Updated:

மகரம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

மகரம்

12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Published:Updated:
மகரம்

திப்பவரை மதிக்கும் நீங்கள், மீறுபவர்களை மிதிக்கத் தயங்கமாட்டீர்கள். சனி பகவான் 21.12.2011 முதல் 16.12.2014 வரை, 10-ம் வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான சனி உச்சமாகி யோகாதிபதியான சுக்ரனின் வீட்டில் அமர்வதால், விஸ்வரூபம் எடுப்பீர்கள்.

தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும். பிள்ளைகள், உங்களைப் புரிந்து கொள்வர். தந்தையுடனான மோதல்கள் விலகும். பிதுர் வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் கிடைக்கும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபம் நீங்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாகும். வழக்கில் வெற்றியுண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சனி பகவான் வக்ரமாகி 26.3.12 முதல் 11.9.12 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால், வீண் விரயம், பணப் பற்றாக்குறை, தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

##~##
உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில், 21.12.11 முதல் 8.11.12 வரை சனி செல்வதால், பண வரவு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். புது வேலை கிடைக்கும். ஆனால், செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடிவயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். கார உணவுகளைத் தவிர்க்கவும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். 4.2.12 முதல் 22.6.12 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனி வக்ரம் அடைவதால் ஒரு சொத்தை விற்று, வேறு சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

9.11.12 முதல் 11.12.13 வரை; 19.5.14 முதல் 10.9.14 வரை ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் சனி செல்வதால், கடன் குறையும். நாடாளுபவர்கள் அறிமுகமாவர். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின் சாதனங்கள் வாங்குவீர்கள். சிலர், வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள்.

12.12.13 முதல் 18.5.14 வரை; 11.9.14 முதல்

16.12.14 வரை உங்கள் திருதியாதிபதியும்- விரயாதிபதியுமான குருவின் விசாக நட்சத்திரத்தில் சனி செல்வதால், தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சேர்க்கை உண்டு. திடீர் பயணம், செலவுகள் உண்டு. எவருக்கும் பணம், நகை வாங்கித் தர வேண்டாம்.

சனி 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். சனி 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, சிறு சிறு அறுவை சிகிச்சை, அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சனி 12-ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.

மகரம்

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் தேடி வரும். கண்ணாடி, துணி, பெட்ரோல் வகைகளால் லாபம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவர். 10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில வேலைகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். திடீர் இடமாற்றமும் சாதகமாக அமையும்.     கன்னிப் பெண்களுக்கு, வீட்டில் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்கள், பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை குன்றிலிட்ட விளக்காய் பிரகாசிக்க வைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism