Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

ராசிபலன் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

திர்பார்ப்புகள் இன்றி எதிரிகளுக்கும் உதவும் பண்பாளர்களே!

லாப வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால், பெரிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  வழக்கு சாதகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புது வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சூரியன் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு 6-ல் மறைவதால், சில நேரங்களில் நிம்மதியில்லாமல் போகும். வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். எந்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், எவரையும் நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் மீது சிலர் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை. வியாபாரத்தில், பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பண்பான பேச்சால் காரியம் சாதிக்கும் தருணம் இது.

ராசிபலன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர்களே!

குருபகவான் இப்போது 5-ம் வீட்டில் அமர்வதால், இழுபறியான வேலைகள் முடியும். குடும்பத்தில் குழப்பம் விலகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்பாராத வகையில் பணம் வரும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

சூரியன் 3-ல் நிற்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும். கண்டகச் சனி தொடர்வதால், வாழ்கைத் துனையுடன் கருத்துமோதல்கள், சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள், பணப் பற்றாக்குறை வந்து செல்லும். ஒரு சொத்தை விற்று வேறு சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், உங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். ஆனால், கேது 10-ல் நிற்பதால், மறைமுக எதிர்ப்புகளும் வரக்கூடும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்கு பிரபலமாவீர்கள்.

சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் நேரம் இது. 

ராசிபலன்

தார்த்தமான பேச்சால் காரியம் சாதிப்பவர்களே!

சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை கூடும் வி.ஐ.பி-களின் தொடர்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். சிலருக்கு, அண்டை மாநிலத்தில் வேலை அமையும். புறநகரில் வீட்டு மனை வாங்குவீர்கள். ராசிநாதன் புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், காரியங்கள் தடையின்றி முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

குருபகவான் 4-ம் வீட்டில் இருப்பதால், தாயாருடன் மோதல்கள், அவருக்கு ஆரோக்கியக் குறைவு வந்து செல்லும். சொத்து விற்கும்போது ஒரே தவணையாக பணத்தைக் கேட்டு வாங்குங்கள். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். 6-ல் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் உதவி, வீடு- மனை வாங்கும் யோகம், வழக்கில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில், சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகதில் வேலை அதிகரித்தாலும், புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

புதிய பாதையில் பயணித்து வெல்லும் வேளை இது. 

ராசிபலன்

ல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்று நினைப்பவர்களே!

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், தடைகள் நீங்கும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். செவ்வாய் 5-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

5-ம் இடத்தில் சனி தொடர்வதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். குரு 3-ம் வீட்டில் நுழைவதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். சூரியன் சாதகமாக இல்லாததால், தலைவலி, கண் எரிச்சல், உடல் உஷ்ணம் வந்து நீங்கும். ராகு, கேது சாதகமாக இல்லாததால், மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி, செலவுகள், தர்ம சங்கடமான சூழ்நிலை, ஏமாற்றங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

தடைகளைத் தாண்டி முன்னேறும் காலம் இது.

ராசிபலன்

டுத்த முடிவிலிருந்து எப்போதும் மாறாதவர்களே!

குருபகவான் ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்வதால், வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். வழக்கு சாதகமாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். விலகிச் சென்ற சொந்தங்கள் தேடி வருவார்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சோர்வு நீங்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

செவ்வாய் 4-ல் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன் பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவர். அர்த்தாஷ்டமச் சனியும், ராசிக்குள் ராகுவும் தொடர்வதால், மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். சோர்வு, கை- கால் வலி, நெஞ்சு எரிச்சல் வந்து போகும். வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் உங்களுடைய கடின உழைப்பைப் புரிந்துகொள்வர். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.

பிரச்னைகள் விலகும் தருணம் இது.

ராசிபலன்

தோல்வியைக் கண்டு துவளாதவர்களே!

குரு அமர்ந்து ஜன்ம குருவாக வருவதால், குடும்பத்தில் பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். சிறுநீர் பாதையில் அலர்ஜி, காய்ச்சல், செரிமானக் கோளாறு வந்துபோகும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்துவர வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால், அரசாங்க அதிகாரிகளின் உதவியால் காரியம் சாதிப்பீர்கள். வீட்டு லோன் கிடைக்கும். புது வேலை அமையும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சேமிக்கும் எண்ணம் வலுக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவு பெருகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். செவ்வாயும், சனியும் 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், எதையும் தாங்கும் வலிமை கிடைக்கும். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய காலி மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். வியாபாரம் விறுவிறுப்பு அடையும். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், பிரச்னைகளும் வந்து போகும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

அனுபவத்தால் படிப்பினை பெறும் காலம் இது. 

ராசிபலன்

காத்திருந்து காய் நகர்த்தி சாதிப்பவர்களே!

சூரியனும், புதனும் வலுவாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். பொது விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ராசிநாதன் சுக்கிரனும் லாப வீட்டில் தொடர்வதால், பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

2-ல் சனியும் செவ்வாயும் தொடர்வதால், வீண் டென்ஷன், பேச்சால் பிரச்னை, சகோதரர்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். ராசிக்கு 12-ல் குரு மறைவதால், மறைமுக எதிர்ப்புகள், வீண் கவலை, பழைய கடனை நினைத்து கலக்கம், தூக்கமின்மை வந்து செல்லும். ராகு லாப வீட்டில் தொடர்வதால், வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

தன்னம்பிக்கை துளிர்க்கும் வேளை இது. 

ராசிபலன்

நேர்வழியிலேயே சென்று லட்சியத்தை அடைபவர்களே!

குரு பகவான் 11-ம் இடத்தில் அமர்வதால், தடைகள் விலகும். தொட்டது துலங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வராது என்றிருந்த பணம் வரும்.
ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஆனால், ராசியிலேயே சனியும் தொடர்வதால், சில நாட்களில் தூக்கம் குறையும். மூச்சுப் பிடிப்பு, செரிமானக் கோளாறு, அலர்ஜி வந்து போகும். செலவுகள் துரத்தும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால், நம்பிக்கையின்மை, தாழ்வுமனப் பான்மை, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்தியோகத் தில், தலைமைக்கு நெருக்கமாவீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத் துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

குழப்பத்தில் இருந்து தெளிவுக்கு வரும் நேரம் இது.

ராசிபலன்

பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர்களே!

கேது வலுவாக இருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், பழைய உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகன வசதி பெருகும்.

சூரியனின் போக்கு சரியில்லாததால் வீண் டென்ஷன், அலைச்சல், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். ராசிநாதன் குருபகவான் 10-ம் வீட்டில் அமர்வதால், வேலைச்சுமை, மரியாதைக் குறைவான சம்பவங்கள் வந்து போகும். மற்றவர்களுக்காக எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கால நேரம் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! புதுமையான படைப்புகளால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

எதையும் சாதிக்க முயற்சிக்கும் காலம் இது. 

ராசிபலன்

ங்கும் எதிலும் வெற்றியை விரும்புபவர்களே!

குருபகவான் இப்போது 9-ம் வீட்டில் நுழைவதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தேறும். கணவன்-மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

செவ்வாயும் சனியும் லாப வீட்டில் தொடர்வதால், புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். ஷேர் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். கடனை அடைப்பீர்கள். பழைய வழக்கில் வெற்றி கிட்டும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், புது அதிகாரி உங்களை மதிப்பார். சக ஊழியர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத் துறையினரே! புது வாய்ப்புகள் கைகூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

தடைகள் நீங்கி ஏற்றம் பெறும் வேளை இது. 

ராசிபலன்

னுபவ அறிவு அதிகம் கொண்டவர்களே!

புதனும், சுக்கிரனும் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஓரளவு பணம் வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சூரியன் 6-ல் நிற்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும்.

செவ்வாய் 10-ம் இடத்தில் தொடர்வதால், புது வேலை அமையும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குரு 8-ல் மறைவதால், தாழ்வுமனப்பான்மை, திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டு. பழைய கடனை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும். காசோலை தரும்போது கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். வியாபாரத்தில், மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

துணிவே துணை என்று நினைக்கும் தருணம் இது.  

ராசிபலன்

ன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களே!

உங்களுடைய ராசிநாதன் குருபகவான் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. தடைப்பட்ட திருமணம் கூடி வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஈகோவால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும், இங்கிதமாகப் பேசி சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் உதவிகள் கிடைக்கும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள்.

ராகு 6-ல் அமர்ந்திருப்பதால், வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். ஷேர் மூலம் பணம் வரும். சுக்கிரனும், புதனும் 6-ல் மறைந்திருப்பதால், பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம். உறவினர்கள், நண்பர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வியாபாரம் செழிக்கும். புது முதலீடு செய்யலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் மத்தியில் மதிப்பு கூடும். கலைத் துறையினரே! போட்டிகள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் வரக்கூடும்.

நீண்ட கால சிக்கல்கள் தீரும் வேளை இது.