Published:Updated:

சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்த மாதம் இது - சித்திரை மாத ராசிபலன் துலாம் - மீனம்

அனைத்து ராசியைச் சேர்ந்தவர்களுக்கும் சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்

சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்த மாதம் இது - சித்திரை மாத ராசிபலன் துலாம் - மீனம்
சுபநிகழ்ச்சிகளுக்கு உகந்த மாதம் இது - சித்திரை மாத ராசிபலன் துலாம் - மீனம்

முதல் ஆறு ராசிகளுக்கான சித்திரை மாத ராசிபலன்களைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யவும்

7-ல் சூரியன்; 7,8 -ல் சுக்கிரன்; 10-ல் ராகு; 1-ல் குரு(வ); 3-ல் சனி; 3,4-ல் செவ்வாய்; 4-ல் கேது; 6,7-ல் புதன்
துலாம்ராசி அன்பர்களே! சனி, ஏப்ரல் 20-க்குப் பிறகு சுக்கிரன், ஏப்ரல் 30 வரை செவ்வாய், மே 1 வரை புதன் ஆகியோரால் நற்பலன்கள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிக்கலாம். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் குடிகொள்ளும். குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பழுதான வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மாத முற்பகுதியில் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் சகோதர வகையில் அலைச்சலும் செலவுகளுமே மிஞ்சும். கணவன் - மனைவிக்கிடையில் மாதப் பிற்பகுதியில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். 

வியாபாரிகளுக்கு அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி நிதியுதவி எளிதாகக் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பொருளாதார வளம் மேம்படும். எதிரிகளின் இடையூறுகளை முறியடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.  

அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் செய்யவும். அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். 
கலைஞர்களுக்கு முன்னேற்றத்துக்கான வாய்ப்பு ஏற்படும். விடாமுயற்சியின் மூலம் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் மறைமுகப் போட்டியைச் சந்திக்க நேரிடலாம். 

மாணவர்கள் பிற்போக்கான நிலையிலிருந்து விடுபடுவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். 

பெண்கள் குடும்பத்தினரின் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும்.      

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 16, 22, 23, 25, 27, 30, மே 5, 6, 9, 10, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 18, 19, 20
பரிகாரம்: சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மருக்குத் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

6-ல் சூரியன்; 6,7-ல் சுக்கிரன்; 9-ல் ராகு; 12-ல் குரு(வ); 2-ல் சனி; 2,3-ல் செவ்வாய், 3-ல் கேது; 5,6-ல் புதன்
விருச்சிகராசி அன்பர்களே! சூரியன், கேது மாதம் முழுவதும் ஏப்ரல் 30-க்குப் பிறகு செவ்வாய், மே 1-க்குப் பிறகு புதன் ஆகியோரால் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இந்த மாதம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும், உடனே நீங்கிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு, பிரசித்திப் பெற்ற வெளிமாநிலப் புண்ணியத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. 

தொழிலதிபர்கள், வியாபாரிகள் மாதப் பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் காணலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பண வரவால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டிகள் குறையும். 

பணியாளர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவர். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 

கலைஞர்களுக்குப் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடு மாதக்கடைசியில் மறையும். பொருளாதார வளம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு கிடைக்கும். 

மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அனுகூலமாக இருப்பர். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15, 16, 17, 20, 21, 24, 25, 28, மே 5, 7, 8, 9, 12, 13, 14 
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 20, 21, 22
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் கூடும்.

5-ல் சூரியன்; 5,6-ல் சுக்கிரன்; 8-ல் ராகு; 11-ல் குரு(வ); 1-ல் சனி; 1,2-ல் செவ்வாய்; 2-ல் கேது; 4,5-ல் புதன்
தனுசுராசி அன்பர்களே! குரு மாதம் முழுவதும், ஏப்ரல் 20 வரை சுக்கிரனும், மே 1 வரை புதனும் சாதகமாக உள்ளார்கள். ஓரளவு முன்னேற்றம் தரும் மாதமாக அமையும். எடுத்த செயல் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொருளாதார வளம் கூடும். மாத முற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் இருந்தாலும், மாதப் பிற்பகுதியில் சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண முயற்சிகளிலிருந்து வந்த தடைகள் நீங்கி, சாதகமாக முடியும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.  பணவரவு நன்றாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சல் அதிகரித்தாலும், நல்ல வளார்ச்சியும், பணவரவும் இருக்கும். பங்குதாரர்கள் தக்க சமயத்தில் உதவுவர். சிலநேரங்களில் முயற்சிகளில் தடைகள் வரலாம். 

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சம்பள உயர்வுக்குத் தடையில்லை. வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும். 

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். 

மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடும் வல்லமை கிடைக்கும்.

பெண்களுக்குக் குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16, 19, 21, 28, 29, மே 2, 3, 4,  7, 8, 9, 11, 12, 13
அதிர்ஷ்ட எண்கள்: 2, 8
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 23, 24, 25
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

4-ல் சூரியன்; 4,5-ல் சுக்கிரன்; 7-ல் ராகு; 10-ல் குரு(வ); 12-ல் சனி; 12,1-ல் செவ்வாய்; 1-ல் கேது; 3,4-ல் புதன்
மகரராசி அன்பர்களே! சுக்கிரன் மற்றும் புதன் ஆகியோர் மட்டுமே அனுகூலமாக இருக்கிறார்கள். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பொன் பொருள் சேரும். சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். அவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. சிலருக்குத் தடைபட்ட திருமணம் கூடிவரும். சகோதர வகையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவும். தந்தைவழி உறவினர்களால் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி வரும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் அவசியம். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டியாளர்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கலைஞர்களுக்குப் புகழும் பாராட்டும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாத முடிவில் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். 

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி, பந்தயங்களில் வெற்றி ஏற்படும். முயற்சி செய்து படிப்பவர்களுக்கு மதிப்பெண் உச்சத்தைத் தொடும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 15, 18, 19, 22, 24,  28, 30, மே 6, 7, 8, 11, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 25, 26, 27
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகப் பெருமானுக்குத் தேங்காயெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவும்.

3-ல் சூரியன்; 3,4-ல் சுக்கிரன்; 6-ல் ராகு; 9-ல் குரு(வ); 11-ல் சனி; 11,12-ல் செவ்வாய்; 12-ல் கேது; 2,3-ல் புதன்
கும்பராசி அன்பர்களே! சூரியன், சுக்கிரன், குரு, ராகு, சனி மாதம் முழுவதும், ஏப்ரல் 30 வரை செவ்வாய் மற்றும் புதனும் சுபபலன்களைத் தரவிருக்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். செயலில் வெற்றி, பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தியைக் காணலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு சுமுகமாகக் காணப்படும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்குப் பொன், பொருள் ஆகியவை சேரும். கணவன் - மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும். விருந்து, விழாக்களில் கலந்துகொள்வீர்கள். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உண்டாகும். தந்தையின் ஆலோசனை பயனுள்ளதாக இருப்பதுடன், முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுவதாக அமையும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் இடையூறும், அரசு வகையில் அனுகூலமற்ற போக்கும் மறையும்.  திடீர் பணவரவு இருக்கும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். 

பணியாளர்கள் பணியில் திருப்தி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். மாதத் தொடக்கத்தில் வேலையில் கவனமாக இருக்கவும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் வருமானத்துக்கு வாய்ப்பு உண்டு. 

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். புகழ், பாராட்டு கிடைக்கும். சிலருக்கு அரசிடமிருந்து விருது வரலாம். 

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்குக் குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். 

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 16, 19, 20, 21, 30 மே 8, 9, 10, 11, 13, 14, 15
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 27, 28, 29
பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

2-ல் சூரியன்; 2,3-ல் சுக்கிரன்; 5-ல் ராகு; 8-ல் குரு(வ); 10-ல் சனி; 10,11-ல் செவ்வாய்; 11-ல் கேது; 1,2-ல் புதன் 
சுக்கிரன், செவ்வாய், கேது, மே 2 முதல் புதன்
மீனராசி அன்பர்களே! சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் மாதம் முழுவதும், மே 2 முதல் புதனும் அனுகூலமான பலன்களைத் தரவிருக்கிறார்கள்.பொருளாதார வளம் கூடும். உடல்நலம் மேம்படும். சிலருக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் மறைந்து, செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், குரு 8-ல் மறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். 

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்குப் பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்குகளைச் சரியாக வைத்துக்கொள்ளவும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். 

கலைஞர்களுக்குப் புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம். 

மாணவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது சிரத்தை எடுத்துப் படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்குச் சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 15, 17, 20, 23, 25, 28, மே 2, 4, 6, 8, 9, 10, 15
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 29, 30, மே 1
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, தொல்லைகள் குறையும்.