Published:Updated:

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 16 முதல் 22 வரை.

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 16 முதல் 22 வரை.
இந்த வார ராசிபலன் ஏப்ரல் 16 முதல் 22 வரை.

இந்த ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவிஉயர்வும் சலுகைகளும் கிடைக்கும்.

மேஷராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால்,எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப புதிய பொருள்களை அறிமுகப்படுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். கிடைத்த வாய்ப்புகளையும் சரிவரப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மாணவ மாணவியர்க்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். மேல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான உதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு, குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சற்று சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
அசுவினி: 17, 18, 19, 21, 22; பரணி: 18, 19, 20, 22; கார்த்திகை: 16, 19, 20, 21

அதிர்ஷ்ட எண்கள்:4,7,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அசுவினி: 16, 20; பரணி: 16, 17, 21; கார்த்திகை: 17, 18, 22

வழிபடவேண்டிய தெய்வம்:   முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

ரிஷபராசி அன்பர்களே! பணவரவு ஓரளவுக்கே இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகள் ஏற்படாது என்பது ஆறுதலான விஷயம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அனுகூலம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது சற்று தள்ளிப்போகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவுக்கே கிடைத்தாலும் வாய்ப்புகளைத் தவறவிடவேண்டாம்.

மாணவ மாணவியர் மேற்படிப்பிற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். விரும்பிய பாடப்பிரிவில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
கார்த்திகை: 16, 19, 20, 21; ரோகிணி: 16, 17, 20, 21, 22; மிருகசீரிடம்: 16, 17, 18, 21, 22

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
கார்த்திகை: 17, 18, 22; ரோகிணி: 18, 19; மிருகசீரிடம்: 19, 20

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தோடுடையசெவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடிபூசியென் உள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.

மிதுனராசி அன்பர்களே! வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் சற்று அதிகரிக்கும். கணவன் - மனைவிக்கிடையில் சிறு அளவில் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி மாற்றமோ, இடமாற்றமோ ஏற்பட்டாலும், அதனால் நன்மையே கிடைக்கும்.

வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பதற்குச் சாதகமான வாரம். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியர்க்கு வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். படிப்புக்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய பணம் கிடைக்காததால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
மிருகசீரிடம்: 16, 17, 18, 21, 22; திருவாதிரை: 17, 18, 19, 22; புனர்பூசம்: 16, 18, 19, 20

அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 19, 20; திருவாதிரை: 16, 20, 21; புனர்பூசம்: 17, 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.

கடகராசி அன்பர்களே! பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால், சிறிய அளவில் கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாங்கிய கடனைத் திருப்பித் தருவீர்கள். மற்றவர்களுக்குக் கொடுத்த கடனும் திரும்ப வரும். திருமண முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதி உண்டாகும். சக பணியாளர்களாலும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முதலீடு செய்து கடையை விரிவு படுத்துவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. ஆனால், சக கலைஞர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம்.

மாணவ மாணவியர் மேல் படிப்புக்கு முயற்சி செய்யலாம். வெற்றிகரமாக முடியும். தேவையான உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நாள்கள்:
புனர்பூசம்: 16, 18, 19, 20; பூசம்: 16, 17, 19, 20, 21; ஆயில்யம்: 16, 17, 18, 20, 21, 22

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 17, 21, 22; பூசம்: 18, 22; ஆயில்யம்: 19

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

சிம்மராசி அன்பர்களே! பணவரவு திருப்தியாக இருக்கும். பணம் மற்றும் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரம் தொடங்கவேண்டாம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். 

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். மூத்த கலைஞர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்.

மாணவ மாணவியர் மேற்படிப்புக்கு சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம்தான். உறவினர்கள் வருகையால் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
மகம்: 17, 18, 19, 21, 22; பூரம்: 18, 19, 20, 22; உத்திரம்: 16, 19, 20, 21

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மகம்: 16, 20; பூரம்: 16, 17, 21; உத்திரம்: 17, 18, 22

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் -விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து

கன்னிராசி அன்பர்களே! பணவரவு சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வீட்டில் தேவையற்ற பிரச்னைகளால் மனஅமைதி குறையக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் விரைவிலேயே சரியாகிவிடும். பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலைகளில் தவறு நேரிடக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. சக கலைஞர்களுடன் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
உத்திரம்: 16, 19, 20, 21; அஸ்தம்: 16, 17, 20, 21, 22; சித்திரை: 16, 17, 18, 21, 22

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 17, 18, 22; அஸ்தம்: 18, 19; சித்திரை: 19, 20

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

துலாம்ராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. தாயாரின் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் அன்பும் ஆதரவும் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. எதிர்பார்க்கும் சலுகைகள் எதுவும் இந்த வாரம் கிடைப்பதற்கில்லை. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள்.

கலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு மேற்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும். தேவையான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: 
சித்திரை: 16, 17, 18, 21, 22; சுவாதி: 17, 18, 19, 22; விசாகம்: 16, 18, 19, 20

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 6, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
சித்திரை: 19, 20; சுவாதி: 16, 20, 21; விசாகம்: 17, 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

விருச்சிகராசி அன்பர்களே! பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிட முடியும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் - மனைவிக் கிடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது அவசியம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். 
மாணவ மாணவியர் தேர்வுகளை நன்றாக எழுதியிருப்பதால், உற்சாகமாகக் காணப்படுவீர்கள். படிப்பு முடித்து வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதற்கில்லை.

அதிர்ஷ்ட நாள்கள்:
விசாகம்: 16, 18, 19, 20; அனுஷம்: 16, 17, 19, 20, 21; கேட்டை: 16, 17, 18, 20, 21, 22 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விசாகம்: 17, 21, 22; அனுஷம்: 18, 22; கேட்டை: 19

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மூவிரு முகங்கள் போற்றி! முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! போற்றி!

தனுசுராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவில்லை. குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். ஒரு சிலருக்கு மட்டும் சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு, உடனுக்குடன் சரியாகிவிடும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு இடமாற்றம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். சாதகமாக முடியும். கொடுக்கல் வாங்கல் நல்லபடி நடக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும்.

மாணவ மாணவியருக்கு மேற்படிப்புக்கான உதவிகள் தடையின்றி கிடைப்பதால் உற்சாகம் ஏற்படும். விருப்பப்பட்ட பாடப் பிரிவிலேயே சேருவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
மூலம்: 17, 18, 19, 21, 22; பூராடம்: 18, 19, 20, 22; உத்திராடம்: 16, 19, 20, 21

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3, 4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 16, 20; பூராடம்: 16, 17, 21; உத்திராடம்: 17, 18, 22

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

மகரராசி அன்பர்களே! பணவரவு நல்லபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த நண்பர்கள், உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நட்பு பாராட்டுவார்கள். சகோதர வகையில் மனக் கசப்பு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப் படும். சக பணியாளர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும்.

வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு சற்று சுமாரான வாரம்தான். வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் நன்மை தரும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படித்து முடித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
உத்திராடம்: 16, 19, 20, 21; திருவோணம்: 16, 17, 20, 21, 22; அவிட்டம்: 16, 17, 18, 21, 22 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 17, 18, 22; திருவோணம்: 18, 19; அவிட்டம்: 19, 20

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

கும்பராசி அன்பர்களே! பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு கண்களில் பிரச்னை ஏற்படக்கூடும். உடனே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு பதவிஉயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். மகிழ்ச்சி தரும் வாரம்.

வியாபாரத்தில் மந்தமான நிலையே காணப்படும். அதன் காரணமாக மனதில் நிம்மதிக்குறைவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு வெளிநாடு சென்று படிக்க நினைத்த விருப்பம் நிறைவேறும். படிப்புக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகளும் பதவிஉயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
அவிட்டம்: 16, 17, 18, 21, 22; சதயம்: 17, 18, 19, 22; பூரட்டாதி: 16, 18, 19, 20

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1,2,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 19, 20; சதயம்: 16, 20, 21; பூரட்டாதி: 17, 21, 22

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தை இணையடி நீழலே

மீனராசி அன்பர்களே! பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. தேவைகளுக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். பொருள்களும், பணமும் களவு போகக்கூடும் என்பதால், வீட்டிலும் வெளியிலும் கவனமாக இருக்கவும். ஒரு சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடவேண்டாம்.

அலுவலகத்தில் அடிக்கடி கோபம் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்படும். எனவே மிகவும் பொறுமையாக இருப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளால் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், சில வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியாது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுடன் பேசும்போது நிதானம் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
பூரட்டாதி: 16, 18, 19, 20; உத்திரட்டாதி: 16, 17, 19, 20, 21; ரேவதி: 16, 17, 18, 20, 21

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 4, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 17, 21, 22; உத்திரட்டாதி: 18, 22; ரேவதி: 19, 22

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

 

அடுத்த கட்டுரைக்கு