மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

பணப்புழக்கம் உயரும்!

மேஷம்:
தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்களே! பூர்வ புண்யாதிபதி சூரியன் ஆட்சிபெற்று வலுவாக நிற்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், உடல் உபாதை வந்து நீங்கும். 5-ம் இடத்திலேயே ராகு தொடர்வதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். 6-ல் குருவும் மறைந்திருப்பதால்... டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் சிலர் கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

ரசனைக்கேற்ற வீடு அமையும்!

ரிஷபம்:
எதையும் ஆழமாக அலசி ஆராய்பவர்களே! குரு வலுவாக இருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சனி மற்றும் ராகு, கேது சாதகமாக இல்லாததால், பணப் பட்டுவாடா விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகக்தில் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

துணிச்சல் பிறக்கும்!

மிதுனம்:
விவாதத்தை விரும்பாத வர்களே! தைரிய வீட்டில் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 4-ல் குரு தொடர்வதால், வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் சிலர் அதிருப்தியுடன் பேசுவார்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் நீங்கள் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.    

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

முன்னேற்றம் உண்டு!

கடகம்:
மண்ணின் மாண்பை மதிப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், போராடி முன்னேறுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களுடைய கருத்துகளை ஏற்றுக்கொள்வர். குரு, சனி மற்றும் ராகு, கேது ஆகிய கிரகங்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவதால், மனஉளைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்காதீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

வர வேண்டிய தொகை வரும்!

சிம்மம்:
பட்டறிவு மிகுதியாக உள்ளவர்களே! ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களுக்கு வர வேண்டிய தொகை கைக்கு வரும். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதுடன், குருவும் 2-ல் நிற்பதால், பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். ராசியிலேயே ராகுவும், அர்த்தாஷ்டமச் சனியும் தொடர்வதால், உடல் உபாதை வந்து போகும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

முதல் மரியாதை கிடைக்கும்!

கன்னி:
கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறவாதவர்களே! சனி, செவ்வாய் மற்றும் கேது உங்களுக்கு தொடர்ந்து சாதகமாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். ஜென்ம குரு நடைபெறுவதால் மனஇறுக்கம், உடல் உபாதை  ஏற்படும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

சிக்கல்கள் தீரும்!

துலாம்:
போராட்ட குணம் கொண்டவர்களே! ராகுவும், சூரியனும் லாப வீட்டில் நிற்பதால், வருமானம் உயரும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளியூர் பயணம் உண்டு. 12-ல் குரு மறைந் திருப்பதால், அவ்வப்போது தூக்கம் குறையும். கடந்த காலத்தில் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட நல்ல வாய்ப்புகளை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்தைவிட லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

ஆளுமைத் திறன் அதிகரிக்கும்!

விருச்சிகம்:
துயரங்களைக் கண்டு துவளாதவர்களே! சூரியன் 10-ம் வீட்டில் ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குரு லாப வீட்டில் நிற்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் நல்லபடியாக நடந்துகொள்வார். ஜென்மச் சனி தொடர்வதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும்.  வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள், சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

எதிர்காலம் வளமாகும்!

தனுசு:
நெருக்கடி நேரத்திலும் நேர்மை தவறாதவர்களே! உங்களின் பாக்யாதிபதி சூரியன் 9-ம் வீட்டிலேயே ஆட்சிபெற்று வலுவாக அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி யைத் தொடங்க பணம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிப்பீர்கள். ராசிநாதன் குரு 10-ல் நிற்பதாலும், 12-ல் சனி இருப்பதாலும் வீண் அலைக்கழிப்பு, விரயங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மற்ற வர்களின் வேலையையும் இழுத்துப்போட்டு செய்வீர்கள்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

உத்யோகத்தில் மேன்மை!

மகரம்:
பகையாளிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்களே! குரு 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை அதிகமாகும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் தொடர்வதால், அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கூடும். வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் ஆதரிப்பார்கள்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

கௌரவம் உயரும்!

கும்பம்:
கொள்கை கோட்பாடு களுடன் வாழ்பவர்களே! செவ்வாய் 10-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால், உடன்பிறந்தவர்கள், உறவினர்  வகையில் பயனடைவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கௌரவம் உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். ராகு, கேது மற்றும் குருவின் போக்கு சரியில்லாததால், உங்களை சிலர் விமர்சிப்பார்கள். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை

தொட்டது துலங்கும் வேளை!

மீனம்:
மனசாட்சியுடன் நடந்து கொள்பவர்களே! குருபகவான், சூரியன் மற்றும் ராகு உங்களுக்கு வலுவாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும்.  அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ல் நுழைந்து, உங்களுடைய ராசியைப் பார்க்கவிருப்பதால், உற்சாகமடைவீர்கள்.  புதன் 6-ல் மறைந்திருப்பதால், உறவினர், நண்பர்களுடன் விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் அதிகாரிகளை வியக்கவைப்பீர்கள்.