Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

தன்மானம் மிக்கவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகளை முடிப்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் உதவிகளும் கிடைக் கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். வெளியில் இருந்து நல்ல செய்தி வரும். பயணங்களால் பயனடைவீர்கள்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், சிறு சிறு வாகன விபத்துகள் வந்து போகும். தம்பதிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை தவிர்க்கவும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதாலும், 6-ல் குரு மறைந்திருப்பதாலும் சோர்வு வந்து போகும். 9-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், சனியை விட்டு விலகுவதால் கோபம் குறையும். வியாபாரத்தில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் தலைமையுடன் மோதல் ஏற்படலாம். ஒருதலைபட்சமாக மூத்த அதிகாரி நடந்துகொள்கிறார் என்று நினைப்பீர்கள். கலைத் துறையினரே! உங்களின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பது, கடினமாகும்.

தடைகளைக் கடந்து  முன்னேறும் தருணம் இது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன்

கடந்த காலத்தை மறவாதவர்களே!

உங்களுடைய சுகாதிபதி சூரியன் 4-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், திடீர் பண வரவு உண்டு. சிலர், பூர்வீகச் சொத்தை விரிவு படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வழக்கு சாதகமாகும்.

9-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால், வாழ்க்கைத் துணைக்கு கை- கால், மூட்டு வலி, சகோதர வகையில் சச்சரவுகள், வீண் செலவுகள், சொத்து விஷயத்தில் சிக்கல்கள் வந்து போகும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும், சனியின் போக்கும் சரியில்லாததால், சில தருணங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் மனத்தாங்கல் வரும். உத்தியோகத்தில், மேல்மட்ட அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். கலைத் துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும்.

விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் வேளை இது.

ராசிபலன்

கனவை நனவாக்குவதில் வல்லவர்களே!

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உற்சாகம் அடைவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

சூரியன் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், மனோபலம் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ராகு வலுவாக இருப்பதால், புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். சனி பகவான் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குரு 4-ல் நிற்பதால், தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு உடல்நலக் குறைபாடு வந்துபோகும். வியாபாரத்தில், சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். உத்தியோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.

சமயோசிதமாகப் பேசி சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

மனிதாபிமானம் உள்ளவர்களே!

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், நெருக்கடி களை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பணப் பற்றாக்குறை ஒரளவு குறையும். ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.

9-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்வதால், வீடு- மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். வழக்கில் இழுபறி நிலை மாறும். சூரியன் 2-ல் ஆட்சி பெற்று நிற்பதால், அரசு காரியங்கள் சாதகமாகும். 5-ல் சனி தொடர்வதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். பூர்வீகச் சொத்து விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், எவரையும் எவருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில், போட்டிகள் இருக்கும். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில், அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைத் துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும்.

சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் குறையும் வேளை இது. 

ராசிபலன்

அதிரடி முடிவுகளை அசராமல் எடுப்பவர்களே!

குரு வலுவாக 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். திடீர் பணவரவு உண்டு. கனிவான பேச்சால் சாதிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய வீட்டுக்கு மீதிப் பணத்தையும் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருப்பதால், எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். சிலருக்கு, புது வேலை அமையும். ஆனால் ராகு- கேது சாதகமாக இல்லாததால், உங்களைப் பற்றிய அவதூறு எழும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்களால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில், எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகள் ஆதரிப்பார்கள். சக ஊழியர்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். கலைத் துறையினரே! வித்தியாசமான படைப்புகளால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

நினைத்ததை முடித்துக் காட்டும் காலம் இது. 

ராசிபலன்

நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்களே!

சனி 3-ம் விட்டில் வலுவாக அமர்ந்திருப்பதுடன், 6-ல் கேதுவும் நிற்பதால், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். வி.ஐ.பி-கள் நண்பர்களாவார்கள். சிலர் பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்து கிடைக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

ஜன்ம குரு தொடர்வதால், எவருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். அல்சர், மஞ்சள் காமாலை, காய்ச்சல், நெஞ்சு வலி, வீண் செலவுகள் வந்து போகும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், எதிர்பாராத பயணங்கள் உண்டு. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில், புது யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்தியோகத் தில், மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினரே! உங்களுக்கு பட்டதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

மன உறுதியால் வெற்றி பெறும் தருணம் இது.

ராசிபலன்

வந்தாரை வாழ வைப்பவர்களே!

உங்களின் பிரபல யோகாதிபதியான புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சுபச் செலவுகளும் அதிகமாகும். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.

லாப வீட்டில் சூரியன் நிற்பதால், புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். மூத்த சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். 9-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்வதால், சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். பாதச் சனி தொடர்வதால், வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். ராகு லாப வீட்டில் நீடிப்பதால், ஷேர் மூலம் பணம் வரும். சிலருக்கு அயல்நாட்டில் அல்லது அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டா லும், மேலதிகாரி குறை கூறவே செய்வார். கலைத் துறையினரே! வேற்றுமொழி வாய்ப்பு களால் லாபமடைவீர்கள்.

புகழ், கௌரவம்  உயரும் காலம் இது.

ராசிபலன்

ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர்களே!

பிரபல யோகாதிபதி சூரியன் 10-ல் தொடர்வதால், வேலை கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், வீட்டை விரிவுப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களால் அதிரடி மாற்றங்கள் உண்டாகும்.

குரு சாதகமாக இருப்பதால், எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஜன்மச் சனி தொடர்வதால் எதிலும் அவசரம் வேண்டாம். 9-ம் தேதி முதல் ராசி நாதன் செவ்வாய், சனியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், அலர்ஜி, காரியத் தடங்கல்கள் யாவும் நீங்கும். ஆனால், பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக் கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்களுடைய கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரம் இது.   

ராசிபலன்

அநீதிக்கு அடிபணியாதவர்களே!

கேது வலுவாக இருப்பதால், முடியாது என்று நினைத்த காரியத்தையும்  முடித்துக் காட்டும் வல்லமை உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். அனுபவம் மிகுந்த பேச்சால் சாதிப்பீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவும் உண்டு.

பிரபல யோகாதிபதி சூரியன் 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வேலை கிடைக்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புதன் வலுவாக இருப்பதால் பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். வாழ்க்கைத் துணை வழியில் உதவிகள் கிடைக்கும். செவ்வாய் 9-ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அலர்ஜி, சகோதர வகையில் சங்கடங்கள் வந்து போகும். ராசிநாதன் குரு 10-ல் தொடர்வதால், காரியங்களில் தாமதம், மனக்கசப்புகள் வந்துபோகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளின் ஆதரவு மனதுக்கு இதமாக இருக்கும். கலைத் துறையினரே! புது வாய்ப்புகளால் அதிகம் சம்பாதிப்பீர்கள். ]

கடின உழைப்பால் முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களே!

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், காரியத் தடைகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும். சூரியன் வலுவாக இருப்பதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தந்தை வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும்.

உங்கள் பிரபல யோகாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். ஷேர் மூலம் பணம் வரும். நண்பர்களின் ஆதரவு பெருகும். உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும். குரு சாதகமாக இருப்பதால், எங்கும், எதிலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க் கலாம். ராகு, கேது சாதகமாக இல்லாததால், எவரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில், புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியத்துவம் பெறுவீர்கள். கலைத் துறையினரே! உங்களுடைய கலைத் திறன் வளரும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலம் இது.    

ராசிபலன்

பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே!

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும்.

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும்.

8-ல் குரு, ராசிக்குள் கேது மற்றும் 7-ல் ராகுவும் தொடர்வதால், அலைச்சல் களும், வேலைச்சுமையும் இருக்கும். அனைத்து விஷயங்களையும் வெளிப்படையா கப் பேசவேண்டாம். சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில், போட்டி களையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். கலைத் துறையினரே! உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

சின்னச் சின்ன சவால்களைச் சந்திக்கும் தருணம் இது.    

ராசிபலன்

எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் பண்பாளர்களே!

6-ல் அமர்ந்திருக்கும் ராகுவும், சூரியனும் உங்கள் தகுதியை உயர்த்துவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். புதுக் கடன் வாங்கி பழைய கடனை தந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாகும். சுற்றியிருப்பவர்களால் அவ்வப் போது பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்து வருவீர்கள்.

7-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால், வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் லோன் கிடைக்கும். ராசிநாதன் குரு பகவான் வலுவாக இருப்பதால், புதிய பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பழைய நட்பு ஒன்றை இழக்க நேரிடும். நெருங்கிய உறவின ருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில், வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத் துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

பலராலும் பாராட்டப்படும் தருணம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism