Published:Updated:

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை

இந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை
இந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை

தனுசு ராசி அன்பர்களுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

மேஷராசி அன்பர்களே! பண வரவு திருப்தி தரும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதர வகையில் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு கள் நீங்கி, சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், தீர்ப்பு தங்க ளுக்குச் சாதகமாக முடியும். கணவன் - மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பளஉயர்வு, பதவிஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும் என்பதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரும்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வெளி நாடுகளுக்குச் சென்று படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
அசுவினி: 23,  26,  27,  28; பரணி: 23,  24,  27,  28,  29; கார்த்திகை: 23,  24,  25,  28,  29

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்: 
அசுவினி: 24,  25,  29; பரணி: 25,  26; கார்த்திகை: 26,  27

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

ரிஷபராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விடவும் பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கடனாகக் கொடுத்து வராது என்று நினைத்த பணம் திரும்பக் கிடைக்கும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழு பறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து வந்த பதவிஉயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தியாக இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் அடுத்தடுத்து கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப் பிரிவிலேயே இடம் கிடைக்கும். மேற்படிப்புக்குத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடைபெறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நாள்:
கார்த்திகை: 23,  24,  25,  28,  29; ரோகிணி: 24,  25,  26,  29; மிருகசீரிடம்: 23,  25,  26,  27

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்: 
கார்த்திகை: 26,  27; ரோகிணி: 23,  27,  28; மிருகசீரிடம்: 24,  28,  29

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே

மிதுனராசி அன்பர்களே! பணவரவு தேவையான அளவுக்கு இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும்.சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச்  சென்று வழிபடும் வாய்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தைப் பொறுத்தவரை ஓரளவு திருப்தி தருவதாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற சற்று கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
மிருகசீரிடம்: 23,  25,  26,  27; திருவாதிரை: 23,  24,  26,  27,  28; புனர்பூசம்: 23,  24,  25,  27,  28,  29

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மிருகசீரிடம்: 24,  28,  29; திருவாதிரை: 25,  29; புனர்பூசம்: 26

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண் செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கம் துயரம் இல்லையே

கடகராசி அன்பர்களே! பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கருத்துவேறுபாடு காரணமாக விலகிச் சென்ற உறவினர்கள், உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. கண்களில் சிறிய அளவில் பிரச்னை ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடும்.

மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. போட்டிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
புனர்பூசம்: 23,  24,  25,  27,  28,  29; பூசம்: 24,  25,  26,  28,  29; ஆயில்யம்: 25,  26,  27,  29

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5 

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
புனர்பூசம்: 26; பூசம்: 23,  27; ஆயில்யம்: 23,  24,  28

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

சிம்மராசி அன்பர்களே! தேவையான அளவுக்கு பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவுகள் ஏற்படும்.  சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில்  விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: 
மகம்: 23,  26,  27,  28; பூரம்: 23,  24,  27,  28,  29; உத்திரம்: 23,  24,  25,  28,  29

அதிர்ஷ்ட எண்கள்: 5,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்: 
மகம்: 24,  25,  29; பூரம்: 25,  26; உத்திரம்: 26,  27

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

கன்னிராசி அன்பர்களே! பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக்கிடையில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவிஉயர்வு மற்றும் சம்பளஉயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவ மாணவியர்க்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
உத்திரம்: 23,  24,  25,  28,  29; அஸ்தம்: 24,  25,  26,  29; சித்திரை: 23,  25,  26,  27 

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திரம்: 26, 27; அஸ்தம்: 23,  27,  28; சித்திரை: 24,  28,  29

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

துலாம்ராசி அன்பர்களே! வருமானம் திருப்தி தரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப் பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்குத் தேவையான உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:
சித்திரை: 23,  25,  26,  27; சுவாதி: 23,  24,  26,  27,  28; விசாகம்: 23,  24,  25,  27,  28,  29

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
சித்திரை: 24,  28,  29; சுவாதி: 25,  29; விசாகம்: 26

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு
உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

விருச்சிகராசி அன்பர்களே! பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட  இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பால்ய நண்பர்கள் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும்  தேவை

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

மாணவ மாணவியர் மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும். போட்டித் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம்தான். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:
விசாகம்: 23,  24,  25,  27,  28,  29; அனுஷம்: 24,  25,  26,  28,  29; கேட்டை: 25,  26,  27,  29 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 2, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
விசாகம்: 26; அனுஷம்: 23,  27; கேட்டை: 23,  24,  28

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

தனுசுராசி அன்பர்களே! பண வரவுக்குக் குறைவில்லை. தேவையற்ற செலவுகளும் ஏற்படாது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையில் சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். குருபகவான் அனுகிரகத்தால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத் துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மாணவ மாணவியர்க்கு போட்டித் தேர்வுகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதுடன், சிறப்பான முறையில் தேர்ச்சி பெறவும் முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 
மூலம்: 23,  26,  27,  28; பூராடம்: 23,  24,  27,  28,  29; உத்திராடம்: 23,  24,  25,  28,  29

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  2, 3, 4  

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
மூலம்: 24,  25,  29; பூராடம்: 25,  26; உத்திராடம்: 26,  27

வழிபடவேண்டிய தெய்வம்:   அம்பிகை

பரிகாரம்:  தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே!

மகரராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடன் நிவாரணமும் கிடைக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.

மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
உத்திராடம்: 23,  24,  25,  28,  29; திருவோணம்: 24,  25,  26,  29; அவிட்டம்: 23,  25,  26,  27

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 3, 6

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
உத்திராடம்: 26,  27; திருவோணம்: 23,  27,  28; அவிட்டம்: 24,  28,  29

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

கும்பராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில் சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு மேற்படிப்புகள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  அதேசமயம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
அவிட்டம்: 23,  25,  26,  27; சதயம்:  23,  24,  26,  27,  28; பூரட்டாதி: 23,  24,  25,  27,  28,  29

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:  1, 2, 5

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
அவிட்டம்: 24,  28,  29; சதயம்: 25,  29; பூரட்டாதி: 26

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன்.

மீனராசி அன்பர்களே! பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாது என்பது ஆறுதலாக இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறமுடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 
பூரட்டாதி: 23,  24,  25,  27,  28,  29; உத்திரட்டாதி: 24,  25,  26,  28,  29; ரேவதி: 25,  26,  27,  29 

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 7

தவிர்க்க வேண்டிய நாள்கள்:
பூரட்டாதி: 26; உத்திரட்டாதி: 23, 27; ரேவதி: 23,  24,  28

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, 
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின் 
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து 
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

அடுத்த கட்டுரைக்கு