லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

வீடு கட்டும் வேளை!

மேஷம்:
மனசாட்சிக்கு விரோதமாக நடந்துகொள்ளாதவர்களே!  கேது வலுவாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். புது வீடு கட்டுவீர்கள். 18-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், சாதாரண விஷயத்துக்கே வாழ்க்கைத் துணையோடு சண்டை உருவாகக்கூடும். சகட குருவும் அஷ்டமத்துச் சனியும் நீடிப்பதால், வளைந்துகொடுத்துப் போக கற்றுக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

சொந்தங்கள் மதிக்கும்!

ரிஷபம்:
சுயஉழைப்பில் வாழ விரும்புபவர்களே! குரு 5-ல் நிற்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார் கள். மனை வாங்க முயற்சிப்பீர்கள். 9-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால், மன இறுக்கம், சகோதர வகையில் சங்கடங்கள் வந்துபோகும். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் வீட்டில் நுழைவதால், அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.             

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

காரிய வெற்றி!

மிதுனம்:
எல்லோரிடமும் சமமாகப் பழகுபவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதுவேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குருவின் போக்கு சரியில்லாததால்... வேலைச்சுமை, வருங்காலம் குறித்த பயம் வந்து செல்லும். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை யாராவது தாக்கிப் பேசினால் பதற்றப்படாதீர்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

உடன்பிறப்புகள் கைகொடுக்கும்!

கடகம்:
எதிரிகளும் பாராட்டும் செயல்திறன் கொண்டவர்களே!  6-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் வீட்டில் அமர்வதால், வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதர, சகோதரிகளால் பயனடைவீர்கள். 5-ல் சனி தொடர்வதால், பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்... பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

ஆபரண யோகம்!

சிம்மம்:
எப்போதும் நியாயத்துக்காக போராடுபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக்கு மதிப்பு கிடைக்கும். ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், அரசு காரியங்கள் சாதகமாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 2-ல் அமர்வதால், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உதவுவார்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

புதிய முயற்சிகள் வெற்றியடையும்!

கன்னி: 
எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்களே! சனி பகவான் 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், மன தைரியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளின் பயம், தயக்கத்தைப் போக்குவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால், அவ்வப்போது கசப்பான நினைவுகள் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து போகும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

கைநிறைய காசு!

துலாம்:
விட்டுக்கொடுக்கும் மனசு கொண்டவர்களே! 9-ம் தேதி முதல் செவ் வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், பணப்புழக்கம் அதிகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உறவினர் மத்தி யில் அந்தஸ்து உயரும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். புதிய நட்பால் நீங்கள் உற்சாகமடைவீர்கள். ராசிக்கு 12-ல் குரு மறைந்திருப்பதால், எதிர்பாராத பயணங்கள் செய்யவேண்டி வரலாம். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

பேச்சில் காரம் வேண்டாம்!

விருச்சிகம்:
`தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருப்பவர்களே! சூரியன், சுக்கிரனின் போக்கு சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டத் திட்டமிடுவீர்கள். விலை உயர்ந்த சமைய லறை சாதனங்கள் வாங்குவீர்கள். 9-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 2-ல் அமர்வதாலும், ஜென்ம சனி தொடர்வ தாலும், பேச்சில் காரம் வேண்டாம். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

உறுதிமொழி தர வேண்டாம்!

தனுசு:
போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதவர் களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 9-ம்தேதி முதல் செவ்வாய் ராசிக்குள் அமர்வதால், உடல் உபாதை வந்து போகும். 10-ல் குரு தொடர்வதால், மற்றவர்களுக்காக எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் தேங்கிக்கிடக்கும் சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மனஉளைச்சல் ஏற்படும்

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

வீடு களைகட்டும்!

மகரம்:
மற்றவர்களின் துன்பம் கண்டு பொறுக்காதவர்களே! குரு வலுவாகத் தொடர்வதால், தொட்டது துலங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.  உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் ஆதாயம் அடைவீர்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால்... மனஉளைச்சல், பொறுமையின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

கனவுகள் நனவாகும்!

கும்பம்:
சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களே! சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்டகால கனவுகள் நனவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். 9-ம் தேதி முதல் செவ்வாய் லாப வீட்டில் நுழைவதால், வாழ்க்கைத் துணையின் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வழிசெய்வீர்கள். கேது ராசிக்குள் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

நல்லவை  நடக்கும் நேரம்! 
     
மீனம்:
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்பவர்களே! 9-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்வதால், உங்களைப் பற்றிய இமேஜ் ஒரு படி உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். ராசிநாதன் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி, குடிபுகுவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால்... உறவினர், தோழிகளுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.