Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

செப்டம்பர் 13 முதல் 26 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

செப்டம்பர் 13 முதல் 26 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்
ராசிபலன்

தோல்விகளைக் கண்டு அஞ்சாதவர்களே!

17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்தில் அமர்வதால், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது வேலை அமையும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

19-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்களது ராசியைப் பார்ப்பதால், உற்சாகம் பிறக்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்றுசேருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். ராசி நாதன் செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சகோதரர்களால் பலனடைவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதுடன், 6-ல் குருவும் மறைந்திருப்பதால் அலைச்சல், வேலைச்சுமை, உடல்வலி, அலுப்பு, முன்கோபம் ஆகியன வந்து செல்லும். வியாபாரத்தில், அதிரடி அறிவிப் புகள் மூலம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்யவேண்டாம். உத்தியோகத்தில், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணம் இது.

ராசிபலன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே!

குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், சாமர்த்தியமாக எதையும் சமாளிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதன் சாதகமாக இருப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

19-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்ரன் 6-ல் மறைவதால், டென்ஷன், தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால், அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். கர்ப்பிணிகள் பயணங் களைத் தவிர்க்கவும். சனி 7-ல் நிற்பதுடன், சப்தமாதிபதி செவ்வாயும் 8-ல் மறைந்து இருப்பதால், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்தியோகத்தில், சில சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

தடைகள் நீங்கி முன்னேறும் வேளை இது.

ராசிபலன்

ளிமையைக் கடைப்பிடிக்கும் அன்பர்களே!

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். விருந்தினர் வருகையால் உற்சாகம் அடைவீர்கள்.

சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், தாய்வழியில் ஆதரவு பெருகும். அரசால் அனுகூலம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமை யும். சனி 6-ம் வீட்டிலும், ராகு 3-ம் வீட்டிலும் நீடிப்பதால், பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 7-ல் செவ்வாய் நிற்பதால், வீண் விரயம், வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைபாடு வந்து போகும். குரு 4-ல் நிற்பதால் தாயாருடன் மோதல், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், வீண் பழிகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில், புதிய அனுபவங்களை கற்றுக் கொள் வீர்கள். கலைத் துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

எதிலும் வெற்றிபெறும் வேளை இது.

ராசிபலன்

பொதுநலச் சிந்தனை உள்ளவர்களே!

17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் அமர்வதால், தைரியம் கூடும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வராது என்றிருந்த பணம் வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வெளிநாட்டு நண்பர்களால் ஆதாயம் உண்டு. சுக்கிரனும் புதனும் சாதகமாக உள்ளனர். வாழ்க்கைத் துணை வழியில் நல்லது நடக்கும். புது வேலை அமையும்.

6-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், சகோதரர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு- மனையை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். குரு, சனி, ராகு, கேது ஆகியோர்  உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், எதிலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. கண்களில் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசிக்கவும். வியாபாரத்தில், கடையை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி பாரபட்சமாக நடந்துகொள்வதாக நினைப்பீர்கள்.கலைத் துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.  

ராசிபலன்

விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுபவர்களே!

குரு 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் வல்லமை கிட்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

செவ்வாய் 5-ல் நிற்பதால், பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததால், வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு ஆரோக்கிய குறைவு உண்டாகும். சில தருணங்களில் தர்மசங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் இருந்து தொழில் யுக்திகளைக் கற்றுக்கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் உங்களுடைய ஆலோச னைகளை ஏற்றுக்கொள்வார்கள். கலைத் துறையினரே! உங்களின் புதிய முயற்சிக்கு, ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவியும்.

சிந்தித்து முன்னேற்றம் காணும் தருணம் இது. 

ராசிபலன்

லையுணர்வு கொண்ட அன்பர்களே!

சனி 3-ல் வலுவாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். நட்பால் ஆதாயம் உண்டு. சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், வங்கிக் கடன் கிடைக்கும்.

17-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் அமர்வதால் கண் எரிச்சல், அடிவயிற் றில் வலி வந்துபோகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். செவ்வாய் கேந்திரபலம் பெற்று அமர்ந்திருப்பதால், பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். ஜென்ம குரு தொடர்வதால் தன்னம்பிக்கை குறையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில், சிற்சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலை ஆட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்தியோகத் தில், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத் துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

பொறுத்திருந்து வெற்றி பெறும் காலம் இது.

ராசிபலன்

சுயமாக முன்னேற விரும்புபவர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 19-ம் தேதி முதல் ஆட்சி பெற்று ராசியிலேயே அமர்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும்.

செவ்வாய் 3-ல் நிற்பதால், முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புது வேலை அமையும். பூமி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். வழக்கு சாதகமாகும். ராசிக்கு 12-ல் குரு மறைந்திருப்பதால், சில வேலைகளை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். அவ்வப்போது தூக்கம் குறையும். ராகு லாப வீட்டில் தொடர்வதால், அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 17-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில், முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால், பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத் தில், உங்களின் புது முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கலைத் துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

எதையும் திட்டமிட்டு சாதிக்கும் நேரம் இது.

ராசிபலன்

ல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஷேர் லாபம் தரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குருபகவானும் வலுவாக இருப்பதால், அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், ஜென்மச் சனி தொடர்வதால், உடல் உபாதைகள் வந்து செல்லும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார். வியாபாரத்தில் திடீர் லாபம், முன்னேற்றம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புது பொறுப்புகளை எதிர்பார்க்கலாம். கலைத் துறையினரே! அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

அதிரடி மாற்றங்கள் நிகழும் வேளை இது.

ராசிபலன்

நினைத்ததைப் போராடி முடிப்பவர்களே!

உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும், புதனும் சென்று கொண் டிருப்பதால், சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

17-ம் தேதி முதல் உங்களின் பாக்கியாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால், பணவரவு உண்டு. புது வாய்ப்புகளும், பதவிகளும் தேடி வரும். தந்தை உங்களை ஆதரிப்பார். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிநாதன் குரு 10-ல் நிற்பதால், வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், ரத்த சோகை, அசதி, சோர்வு, வீண் டென்ஷன் வந்து போகும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில், மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாக்கியாதிபதி சூரியன் 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். கலைத் துறையினரே! உற்சாகத்துடன் வலம் வருவீர்கள்.

எதிர்பாராத நன்மைகள் சூழும் தருணம் இது.

ராசிபலன்

பிரச்னைக்கு உடனடி தீர்வை விரும்புபவர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், முன்பு சவாலாக தெரிந்த சில விஷயங்கள் இப்போது சாதாரணமாக முடிவடையும். குரு சாதகமாக இருப்பதால், வீடு, மனை வாங்குவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பிதுர்வழிச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.

சூரியன் சாதகமாக இல்லாததால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும். புதன் சாதகமாக இருப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கு வழி பிறக்கும். உறவினர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால் வீண் விரயம், ஏமாற்றம், பொருள் இழப்பு, பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் உங்களின் பரந்த மனதைப் புரிந்துகொள்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத் துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

தைரியமாக முடிவுகள் எடுக்கும் காலம் இது. 

ராசிபலன்

பிறரை எளிதில் கவருபவர்களே!

19-ம் தேதி முதல் சுக்கிரன் ஆட்சி பெற்று 9-ம் வீட்டில் அமர்வதால், உங்களின் ரசனை மாறும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய மனையை விற்றுவிட்டு, புது வீடு வாங்குவீர்கள். குரு சாதகமாக இல்லாததால் சோர்வு அதிகமாகும். கோபத்தைத் தவிர்க்கவும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால், வாழ்க்கைத் துணைக்கு சின்னச் சின்ன ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எனினும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

மன உறுதியால் வெல்லும் நேரம் இது. 

ராசிபலன்

ளிதில் எதையும் நம்பாதவர்களே!

ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் நிழல் கிரகமான ராகு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். வழக்கிலும் சாதகமான தீர்ப்பு வரும்.

செவ்வாய் 10-ல் நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். ஆனால், புதன் 6-ல் மறைந்திருப்பதால், சிக்கனம் அவசியம். 17-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடத்தில் பிரவேசிப்பதால், உடல் உஷ்ணத்தால் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைக்கு ஹார்மோன் பிரச்னைகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில், இரட்டிப்பு லாபம் உண்டாகும். புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். கலைத் துறையினரே! புதுமையான படைப்பு களால் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

அனைவராலும் மதிக்கப்படும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism