தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

பணவரவு அதிகரிக்கும்!

மேஷம்: 
பரந்த மனதுக்கு சொந்தக் காரர்களே! தன சப்தமாதிபதி சுக்கிரன் 7-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், தடைப்பட்ட வேலைகளை உற்சாகமாக விரைந்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை  நீங்கள் வாங்கித் தருவீர்கள். அஷ்டமத்துச் சனியும், சகட குருவும் தொடர்வதால்... வேலைச்சுமை, உடல் உபாதை வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

உதவிகள் கிடைக்கும்!

ரிஷபம்: 
எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! குரு 5-ல் நீடிப்பதால், பழைய சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும்.சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதாலும், செவ்வாய் 8-ல் நிற்பதாலும் வீண் டென்ஷன் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புதிய சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் தொந்தரவுகள் இருக்கும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

இல்லறத்தில் இனிமை!

மிதுனம்:
எதையும் ஆழமாக யோசிப்பவர்களே! ராகுவும், சனியும் வலுவாக இருப்பதால், நினைத்த காரியம் நிறைவேறும். வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். 7-ல் செவ்வாய் நிற்பதால், வாழ்க்கைத் துணைவர் பாசமாக இருப்பார். குருவின் போக்கு சரியில்லாததால், வேலைச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

தடைகள் நீங்கும்!

கடகம்: 
வெட்டிப் பேச்சை விரும்பாதவர்களே! செவ்வாய் 6-ம் வீட்டிலும், 3-ல் சூரியனும் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். உடன்பிறந்தவர்களால் பலனடைவீர்கள். பழைய உறவினர்கள், தோழிகளை சந்திப்பீர்கள். 3-ல் குருவும், 5-ல் சனியும் தொடர்வதால்... எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்காதீர்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

வருமானம் உயரும்!

சிம்மம்:
தர்மத்துக்குத் தலைவணங்கு பவர்களே! குரு 2-ல் நிற்பதால், சாணக் கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 5-ல் நிற்பதால், மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். அர்த்தாஷ்டம சனி தொடர்வதால், மறைமுக விமர்சனங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பி-க்கள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும்!

கன்னி:
தளராத தன்னம்பிக்கையாளர் களே! தனாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், திடீர்  பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.  நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்ததை உங்கள் வாழ்க்கைத் துணைவர் வாங்கித் தருவார். ஜென்ம குரு தொடர்வதால், உடல்நலக் கோளாறு வந்துபோகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் தவறை சுட்டிக்காட்டினால் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

உழைப்பு உயர்த்தி வைக்கும்!

துலாம்:
அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களே! ஏழரைச் சனி தொடர்வதால்... ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக உங்கள் ராசியிலேயே அமர்ந் திருப்பதால், கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். அழகு,  இளமை கூடும். ராசிக்கு 12-ல் குருவும், சூரியனும் மறைந்திருப்பதால்... தூக்கமின்மை, பசியின்மை வந்து போகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

ஆதரவு பெருகும்!

விருச்சிகம்:
எப்போதும் எளி மையை விரும்புபவர்களே! சூரியனும் குருவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்... தைரியம், புகழ், செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். உறவினர், தோழிகளால் ஆதாயம் உண்டு. என்றாலும், ஜென்மச் சனி தொடர்வதால்... உடல் உபாதை, மனப்போராட்டம் வந்து போகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் வந்தாலும், சக ஊழியர்களின் ஆதரவு பெருகும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

உறவினர்கள் மதிப்பார்கள்!

தனுசு:
‘வளைந்து கொடுத்தால் வானம் போல் நிமிரலாம்’ என்பதை உணர்ந்தவர்களே! கேது வலுவாக அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால், பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

பாராட்டுகள் குவியும்!

மகரம்:
அழுத்தமான கொள்கைப்பிடிப்பு உள்ளவர்களே! ராஜகிரகங்களான குருவும், சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால்... இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள்.

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

மனப்போராட்டம் நீங்கும்!

கும்பம்:
காத்திருந்து காய் நகர்த்து வதில் வல்லவர்களே! செவ்வாய் 11-ம் இடத்தில் வலுவாக நிற்பதால், மனப்போராட்டங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். குருவும் சூரியனும் சரியில்லாததால்... வேலைச்சுமை, காரிய தாமதம், வீண் அலைச்சல் வந்துபோகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். 

ராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை

எதிர்ப்புகள் அடங்கும்!

மீனம்:
காலத்துக்கு ஏற்ப கோலத்தை மாற்றிக்கொள்பவர்களே! ராகு, குரு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகள் அடங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். புதன் 6-ல் மறைந்திருப்பதால்...
உடல் உபாதை, உறவினர்களுடன் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன்மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.