தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

புது வீடு கட்டுவீர்கள்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைமேஷம்: அஞ்சா நெஞ்சம் படைத்தவர் களே! கேது 11-ம் வீட்டிலேயே தொடர் வதால் எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றால் வீடு களைகட்டும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 16-ம் தேதி வரை சூரியன் சாதகமாக இருப்பதால், அரசு வழிகளில் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், செலவுகள் வந்து செல்லும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வேளையிது.

 ஆடை, ஆபரணம் சேரும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைரிஷபம்: எல்லோரையும் உங்கள் வழிக்குக் கொண்டு வருவதில் சாதுர்யமிக்கவர்களே! குருவும், புதனும்  16-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால், தடைகள், போராட்டங்களை கடந்து வருவீர்கள். வி.ஐ.பி-க்களின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். பணவரவு திருப்தி தரும். திருமணம் கூடி வரும். ஆடை, ஆபரணங்கள் சேரும். மாமியார் மதிப்பார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.   


குழந்தை பாக்கியம் கிடைக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைமிதுனம்:
சத்தியத்தையும், சமாதானத்தையும் விரும்புபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய யோசனை உதயமாகும். பூர்வீகச் சொத்தை கேட்டு வாங்குவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.  செல்வாக்கு கூடும் தருணமிது.

பழைய பாக்கி வசூலாகும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைகடகம்: கதை, கவிதை, கலை என கற்பனை செய்பவர்களே! செவ்வாயும், சூரியனும் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். பழைய வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சிலர் புதுவீடு கட்டுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் காலமிது.  

வி.ஐ.பி நட்பு கிடைக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைசிம்மம்: கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சவால்களை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும்.  கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். தடைபட்ட திருமணம் கூடி வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாமனார், மாமியார் அன்பாக நடந்துகொள்வர்.  குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனை நிறைவேற்றுவீர்கள்.  உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

வாகன வசதி பெருகும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைகன்னி: சந்தர்ப்பச் சூழ்நிலையை அனுசரித்துச் செல்பவர்களே! சனி வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். புது சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகன வசதிகள் பெருகும். பள்ளி, கல்லூரிக் கால தோழியை சந்திப்பீர்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. போராடி வெற்றி பெறும் நேரமிது.


பூர்வீகச்சொத்து கிடைக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைதுலாம்: எல்லோரையும் நல்லவர்கள் என்று நம்புபவர்களே! பாக்யாதிபதி புதனும், ராசிநாதன் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், மனப்போராட்டங்கள் குறையும். அடுத்தடுத்த விசேஷங்களால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். செவ்வாய் வலுவாக இருப்பதால், வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளால் பயனடைவீர்கள். வீடு, மனை வாங்கு வது, விற்பது சாதகமாக முடியும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைவிருச்சிகம்: பாகுபாடு பார்க்காமல் எதையும் செய்பவர்களே! குரு வலுவாக இருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடிவரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். கணவர் உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். மகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு நல்ல மணமகள் அமைவார். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங் கள் வாங்குவீர்கள். புண்ணிய தலங்கள் செல்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 

பெரிய திட்டம் நிறைவேறும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைதனுசு:
தர்மநெறிகளை கடைப்பிடிப்பவர்களே! சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நீங்கள்  போட்டு வைத்திருந்த பெரிய திட்டங்களில் ஒன்று நிறைவேறும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவர். பிதுர்வழி சொத்துக்கள் கைக்கு வரும். வராது என்று நினைத்திருந்த பணம் வந்து சேரும். கணவர் உங்கள் உள் மனதைப் புரிந்து நடப்பார். பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. 

புதிய வேலை கிடைக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைமகரம்:
மனசாட்சியை மதிப்பவர்களே! ராஜ கிரகங்களான சனியும், குருவும் வலு வாக இருப்பதால், பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய வேலை கிடைக்கும். கணவரின் குழப்பங்களுக்குத் தீர்வு சொல்வீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். புதிய எண்ணங்கள் மனதில் மேலோங்கும்.  

வெளியூர் பயணம் செல்வீர்கள்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைகும்பம்:
சுற்றியுள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் குணம் உள்ளவர்களே! செவ்வாய் வலுவாக இருப்பதால், தன்னம்பிக்கை அதிகமாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். கணவர் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். 

நல்ல வேலை கிடைக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரைமீனம்: எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர்களே! செவ்வாய், ராகு மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் சூட்சுமத்தை உணருவீர்கள். கைமாற்று, கடன் பணத்தை திருப்பித் தருவீர்கள். வருமானம் உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலைக்கு விண்ணப் பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். திருமண முயற்சிகள் பலிதமாகும்.