தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

புதிய திட்டம் நிறைவேறும்

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

மேஷம்: சுய கௌரவத்துக்கு முக்கியத்துவம் தருபவர்களே! புதன் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால், புதிய திட்டம் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சூரியன் நீசமாகி 7-ல் நிற்பதால், வேலைச்சுமை காரணமாக மனஇறுக்கம், முன்கோபம் ஏற்படும். மாமியாருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். சகட குருவும், அஷ்டமத்துச் சனியும் தொடர்வதால், உங்கள் குடும்ப விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிட அனுமதிக்காதீர். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
 

உடல் சோர்வு ஏற்படும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

ரிஷபம்: இலக்கை எட்டும் வரை சளைக்காமல் உழைப்பவர்களே! குருவின் திருவருளால் பிரச்னைகளில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்ட யோசிப்பீர்கள். கணவருடனான மோதல்கள் குறையும். காதுவலி, கழுத்து வலி, தொண்டைவலி காரணமாக லேசான சோர்வு ஏற்படும். மாமனார், மாமியாருடன் அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை தேவைப்படும் வேளையிது.
 

பதவி தேடி வரும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

மிதுனம்: ராகு 3-ம் வீட்டிலும், சனி 6-ம் இடத்திலும் வலுவாக நிற்பதால், உலக நடப்புக்கேற்ப உங்களையும் கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கௌரவப் பதவி தேடி வரும். தோழி வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்துவீர் கள். வேலை கிடைக்கும். மாமனார், மாமியார் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 25-ம் தேதி முதல் செவ்வாய் 8-ல் மறைவதால், நெருப்புக் காயங்கள், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், சகோதர வகையில் மனத்தாங்கல், வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். 

வழக்கில் திருப்பம் ஏற்படும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

கடகம்: தர்மசங்கடமான நேரத்திலும் நகைச்சுவையாகப் பேசுபவர்களே! சூரியனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவருடன் பேசி பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். மாமனார் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். மற்றவர் களுக்காக ஜாமீன் கையொப்பமிட வேண்டாம்.
 

பணவரவு அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே! ராசிநாதன் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவர். பணவரவு அதிகரிக்கும். கணவர் பொறுப்பாக நடந்துகொள்வார்.  அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், தோழிகள், உறவினர் களின் வருகையாலும் வீடு களைகட்டும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வேற்றுமொழி பேசு பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்
 

குழந்தை பாக்கியம் கிடைக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

கன்னி: உதிக்கும்போது விதிக்கப் பட்டதை உணர்ந்துகொண்டு வாழ்பவர் களே! சனியும், கேதுவும் வலுவாக இருப்பதால், எங்கு சென்றாலும் உங்களுக்கு முதல்
மரியாதை கிட்டும். சாதனையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிட்டும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையை மதிப்பார். தூரத்து சொந்தங்கள் தேடி வருவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மாமனார்,
மாமியார் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள். 25-ம் தேதி முதல் செவ்வாய் உச்சம் பெற்று 5-ல் அமர்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 

வீட்டுமனை வாங்குவீர்கள்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

துலாம்: சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களே! ராகு லாப வீட்டில் வலுவாக அமர்வதால், பிரச்னைகளை களைவீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். உறவினர்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சகோதரர்கள் பாசமழை பொழிவர். மாமியார் அரவணைத்துப் போனாலும் நாத்தனார் தொந்தரவு தருவார். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். உத்யோகத்தில் மேலதிகாரி கனிவாக நடந்துகொள்வார்.
 

நல்ல தீர்ப்பு வரும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

விருச்சிகம்: எவருக்கும் மனதளவில்கூட துரோகம் நினைக்காதவர்களே! 25-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 3-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால், சவாலான காரியங்களை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீட்டுக்கு மாறுவீர்கள். புது வேலை அமையும். கணவர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நடப்பார். குரு சாதகமாக இருப்பதால், மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள்.
 

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

தனுசு: எல்லோரையும் பார்த்த மாத்திரத்தில் எடை போடுவதில் வல்லவர்களே! சூரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்
புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலம் லாபம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கு முடிவுக்கு வரும். வரும் 25-ம் தேதி முதல் செவ்வாய் ராசியை விட்டு விலகி 2-ல்உச்சம் பெற்று அமர்வதால், முன் கோபம், மனப்போராட்டங்கள் விலகும்.
 

புதிய வாய்ப்பு தேடி வரும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

மகரம்: போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களே! குரு வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் நிர்வாகத் திறன் கூடும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதிய பதவிகளும், வாய்ப்புகளும் தேடி வரும். கணவர் உங்களை முழுமையாக நம்புவார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். உறவினர், தோழிகளால் அனுகூலம் உண்டு. வெளிநாடு, வேற்றுமாநிலத்தில் இருப்பவர்கள் உதவுவர்.  வழக்குகள் சாதகமாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரமிது.
 

பிள்ளைகளால் மதிப்பு கூடும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

கும்பம்: எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கணவர் உங்களது திட்டங்களை ஆதரிப்பார். பிள்ளைகளால் மதிப்பு கூடும்.  பழைய கடன் பிரச்னை தீரும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தைக்கு கை, கால் வலி வந்து போகும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும்.
 

பழைய பாக்கி வசூலாகும்!

ராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை

மீனம்: அசைக்க முடியாத ஆன்மிக சக்தி உள்ளவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால், தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். பழைய பிரச்னை தீரும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள்.  வழக்கு சாதகமாக திரும்பும். 12-ல் கேது தொடர்வதால், வீண் விரயம், ஏமாற்றம், இனந்தெரியாத கவலை வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.