Published:Updated:

தீபாவளி அட்ராசிட்டி!

தீபாவளி அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி அட்ராசிட்டி!

மகிழ்ச்சிகருப்பு, ஓவியங்கள்: ராமமூர்த்தி

தீபாவளி அட்ராசிட்டி!

மகிழ்ச்சிகருப்பு, ஓவியங்கள்: ராமமூர்த்தி

Published:Updated:
தீபாவளி அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
தீபாவளி அட்ராசிட்டி!

சாதாரண நாள்ல நீங்க சமைக்கிறத என்னிக்காவது நல்லா இல்லைனு வாய் தொறந்து சொல்லியிருப்போமா சொல்லுங்க... அத புரிஞ்சுகிட வேணாமா? பண்டிகைனு வந்துட்டா, பண்ணின ஸ்வீட்ஸை எல்லாம் தட்டுல நீட்டி, நீங்க பெர்ஃபாமன்ஸ் பண்ண எங்களை பணயம் வைக்கிறீங்க... நியாயமா தெய்வமே?

தீபாவளி அட்ராசிட்டி!

• ஒவ்வொரு தீபாவளி அன்னிக்கும்... ஏதோ ஒரு மாவை பிசைஞ்சு எண்ணெயில பொரிச்செடுத்து சர்க்கரை தண்ணியில போட்டெடுத்து தர்றீயே... அதுக்குப் பேரு என்னடா செல்லம்?
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• படிக்கும்போது உங்களுக்கு ஈஸியா தெரியுற ரெசிப்பி, எப்புடிதான் எங்களுக்கு பில்லி, சூனியம் வைக்குதோ அந்த மாரியாத்தாவுக்குதான் வெளிச்சம். அதுக்காக, `மாசக்கணக்குல ஜிம் போயும் குறையாத உங்க உடம்பை எப்படிக் குறைய வெச்சேன் பார்த்தீங்களா'ன்னு சாமர்த்தியமா பேசுறது சத்தியமா நல்லால்ல... ஆமா!

• சாஃப்ட்டா மொறுமொறுன்னு இருக்கிற மாதிரிதான் அதிரசம் சுட ஆசைப்படுறீங்க. ஆனா, கருகிப்போன தட்டை மாதிரி ஒண்ணை கொண்டுவந்துட்டு, அதுக்கு நீங்க கொடுக்கிற அட்ராசிட்டியைத்தான் தாங்கிக்க முடியல.

• `இத வாங்கிட்டு வாங்க, அத வாங்கிட்டு வாங்க'னு நூறு முறை கடைக்கு அனுப்பின பாவத்துக்காகவாவது, வாய்லயே நுழையாத அந்த ஸ்வீட்டை நீங்க நல்லா பண்ணி தந்திருக்கலாம்..

• சின்னதா சுடுறதா, பெருசா சுடுறதான்னு முறுக்கு சுடுறதுக் காக தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் ரெசிப்பி கேக்குறேனு கேட்டு ஒரு பட்டிமன்றத்த நடத்திட்டு, நல்லி எலும்பைக் கடிக்கிற ராஜ்கிரணா மாறி கடிச்சாலும் உடையாத அளவுக்கு முறுக்கு சுடுற உங்க நல்லெண்ணத்த நினைச்சு கண்ணுல ஜலம் வெச்சுடுறோம்.

தீபாவளி அட்ராசிட்டி!

• போன வருஷம் தீபா வளிக்குப் பக்கத்து பெங்காலி வீட்டில் இருந்து வந்த ஸ்வீட்டை மொத்த வீடுமே எச்சில்கொட்டி சாப்பிட்டது என்னமோ நெசம் தான். அதுக்காக பேரே தெரியாத அந்த ஸ்வீட்டை `நானும் செஞ்சே தீருவேன்'னு வம்படியா அடம்பிடிச்சு நீங்க களமிறங்குறது அரை டன் பாரத்தை நெஞ்சுல ஏத்துது அம்மணி.

• `அட, பூந்தி நல்லாருக்கே'னு வீட்டுக்கு வந்துட்டு போனவங்க சொன்னதுக்கு பின்னாடி... முயற்சி செஞ்சும் பிடிபடாம உடைஞ்சு போன லட்டு எனக்கு மட்டும் அடிக்கடி நினைப்புல வந்துபோகுதே... ஏன்?
 

• தீபாவளிக்கு அடுத்தநாள் ஆபீஸ்ல வேலை செய்ற ‘பாய்’ ஃப்ரெண்ட் ‘ஏண்டா ரம்ஜானுக்கு பிரியாணி மட்டும் கேட்டு வாங்குனியே! தீபாவளிப் பலகாரம் தரணும்னு அக்கறை
இல்லையா’னு கேட்கும்போது ‘உன் மேல அக்கறை இருக்கிற தாலதான் அதைக் கொண்டு வரலை’னு சொல்லும்போது செத்துறாத சேகர் மொமன்ட்.

• எல்லாத்தையும்விட ஹைலைட் என்னன்னா, சமைச் சது டேஸ்ட்டா வராட்டி அதை வீட்டிலேயே வெச்சுட்டு, பார்சல் வாங்கிட்டு வந்த ஸ்வீட் பாக்ஸ்ல இருந்து பக்கத்து வீட்டுக்கு பார்சல் போகும். சூனாபானா..ம்...

• என்னதான் உங்க ஸ்வீட் டால எங்க வாய் புஸ்வாணம் ஆனாலும்... எங்களுக்காக நீங்க எண்ணெயில வேகுறதை நினைச்சா... நிஜமா கட்டைமாதிரி இருக்கிற ஸ்வீட்டைக்கூட கரைச்சு சாப்பிட்டிருவோம். ஏன்னா... எங்க இளகின மனசு அப்படி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism