Published:Updated:

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை
ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

விடாமுயற்சியால் முன்னேறும் வேளை இது.

சிந்தித்துச் செயல்படுபவர்களே!

ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால்,  பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறை வேறும். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். சூரியன் நீச்சமாகி நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். மறதியால் பணம், நகைகளைத் தொலைத்துவிடாதீர்கள். 6-ல் குரு மறைந்திருப்பதால், வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் உண்டாகும். உயரதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் காலம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

லட்சியத்தை நிறைவேற்றுபவர்களே!

 குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சப்தமாதிபதி செவ்வாய் 9-ம் இடத்தில் உச்சம் பெற்று அமர்வதால், உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துகொள்வார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் தூக்கம் குறையும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும். கண்டகச் சனி தொடர்வதால், எப்போதும் எதையோ இழந்ததைப் போல இருப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும்.

பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம் இது.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

எப்போதும் சமாதானத்தை விரும்புபவர்களே!

ராகுவும், சனியும் வலுவாக இருப்பதால், பெரிய பிரச்னைகளையும் சாமர்த் தியமாகச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வழக்கு சாதகமாகும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.  வெளிமாநிலத்தில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு. ஆனால், செவ்வாய் 8-ல் மறைந்தாலும் உச்சம் பெற்று அமர்வதால், சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள்.

சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். ஆனால், அடிவயிற்றில் வலி, உடல் உஷ்ணம் அதிகரித்தல் வந்து செல்லும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதுடன், 4-ம் தேதி முதல் புதனும் 6-ல் மறைவதால், தொண்டைப் புகைச்சல், அலர்ஜி வரக்கூடும். ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

நண்பர்களால் பலன் பெறும் தருணம் இது.

அரிய காரியங்களைச் சாதிப்பவர்களே!

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உங்களின் அனுபவ அறிவைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வது, விற்பது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் சாதகமாக அமையும். வண்டியை மாற்றுவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். விலகிச் சென்ற சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

4-ம் வீட்டில் சூரியன் நீச்சமாகி நிற்பதால், தாயாரின் உடல் நிலை பாதிக்கப்படும். உங்களின் யோகாதிபதி செவ்வாய் 7-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால், கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குரு 3-ல் மறைந்திருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி ஒருதலைபட்சமாக நடந்துக் கொள்கிறார் என்று நினைப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனை திறன் வளரும்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

தன்னம்பிக்கையால் சாதிக்கும் காலம் இது.

சிரிக்கப் பேசி சிந்திக்க வைப்பவர்களே!

உங்களின் யோகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குடும்பத் தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து ஒருபடி உயரும். புது பதவிகள் தேடி வரும்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். ஆனால், ராசிநாதன் சூரியன் நீச்சகதி பெற்றிருப்பதால், ஒருவித சோர்வு, களைப்பு, படபடப்பு வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால்,  பல் வலி, செரிமானக் கோளாறு வரக்கூடும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

அனுபவ அறிவால் சாதிக்கும் நேரம் இது.

மற்றவர்களை மதித்து நடப்பவர்களே!

கேதுவும், சனியும் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு அதிகரிக்கும். பிரச்னைகள், போராட்டங்கள் ஓயும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர் வீட்டு கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதிதாக செல்போன் வாங்குவீர்கள்.

ராசிநாதன் புதன் 3-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்க ளாவார்கள். ஆனால் 4-ம் தேதி முதல் 3-ல் நிற்கும் சனியுடன் புதன் சேர்வதால், நரம்புச் சுளுக்கு, தைராய்டு, தோலில் நமைச்சல் வந்து போகும். செவ்வாய் 5-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜன்ம குரு தொடர்வதால், காய்ச்சல், சளித் தொந்தரவு, தூக்கமின்மை வந்து செல்லும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் மூத்த அதிகாரியை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் வேளை இது.

எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்களே!

சாதகமான வீடுகளில் செவ்வாய் சென்றுகொண்டிருப்பதால், பணவரவு உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். நீண்ட காலமாக பார்க்க நினைத்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

ஆனால், சனியுடன் ராசிநாதன் சுக்கிரன் சேர்ந்திருப்பதால், அசதி, சோர்வு, வீண் டென்ஷன் வந்து போகும். பாதச் சனி தொடர்வதால், உங்களை எல்லோரும் காரியம் ஆகும் வரை பயன்படுத்திக்கொண்டு வேலை முடிந்த உடன் அலட்சியப்படுத்துவார்கள். உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நீச்சமாகி நிற்பதால், உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக செயல்படவேண்டும். ராகு லாப ஸ்தானத்தில் தொடர்வதால், ஷேர் பணம் தரும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலக நிமித்தமாக சிலர் வெளி மாநிலம், அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

புதிய முயற்சிகள் பலிதமாகும் நேரம் இது.

அன்புக்கு கட்டுப்படுபவர்களே!

குருபகவான் வலுவாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகனுக்கு தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். ராசிநாதன் செவ்வாய் 3-ம் இடத்தில் உச்சம் பெற்று அமர்வதால், சகோதரிக்கு திருமணம் முடியும். புது வேலை கிடைக்கும். 12-ம் வீட்டில் சூரியன் நீச்சமாகி நிற்பதால், பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். ஜன்மச் சனி தொடர்வதால், கை, கால் மரத்துப் போகுதல், முன்கோபம் வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத் துறையினரே! உங்கள் புதுமையான படைப்புகளால் மற்றவர்களைக் கவர்வீர்கள்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

தன்னடக்கத்தால் தடைகளைக் கடக்கும் தருணம் இது.

பணத்துக்கு அடிமைப்படாதவர்களே!

கேது 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி வகைகள் கிடைக்கும். மாற்று யோசனைகள் மனதில் உதிக்கும். நல்லவர்களின் நட்பும் தக்க நேரத்தில் உதவிகரமாக இருக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், கௌரவப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சூரியன் சாதகமாக இருப்பதால், அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. ராசிநாதன் குரு 10-ல் தொடர்வதாலும் ஏழரைச் சனி நடைபெறுவதாலும், வேலைச்சுமையால் டென்ஷன், சின்னச் சின்ன சஞ்சலங்கள் வந்து போகும்.  பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 2-ல் உச்சம் பெற்று அமர்வதால், பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

பிரபலங்களால் முன்னேறும் காலம் இது.

புரட்சிகரமான சிந்தனை உடையவர்களே!

ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் தொடர்வதால், சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடிக்கும் வல்லமை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை  கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். பிள்ளைகளும் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்ட நாள் கனவு நனவாகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், கொஞ்சம் அலைச்சல், பல், கண் மற்றும் கணுக்கால் வலி வந்து போகும். செவ்வாய் ராசியிலேயே உச்சம் பெற்று அமர்வதால், சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். அனுபவ முள்ள வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

திட்டமிட்டு பிரச்னைகளைக் குறைக்கும் நேரம் இது.

விட்டுக் கொடுக்கும் குணம் உடையவர்களே!

யோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். தாய்வழியில் உதவிகள் உண்டு. உறவினர், நண்பர்களால் நன்மை உண்டாகும்.

விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். பழைய கடனில் ஒருபகுதியை கொடுக்க வழி பிறக்கும். ராசிநாதன் சனிபகவான் சாதகமாக இருப்பதால், திடீர் பணவரவு உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வாழ்க்கைத் துணையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க புது யுக்தியைக் கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் ஒரு அதிகாரி உங்களை ஆதரித்தாலும்
மற்றொருவர் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார். கலைத்துறையினரே! நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

ராசிபலன் - அக்டோபர் 25 முதல் நவம்பர் 7 வரை

எதிலும் ஏற்றம் நிறைந்த வேளை இது.

நாலும் தெரிந்துவைத்திருப்பவர்களே!

செவ்வாய் பகவான் லாப வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால், உங்களின் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். உற்சாகமாகப் பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். புது வேலை அமையும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

ராகு வலுவாக இருப்பதால், மனவலிமை கூடும். 8-ல் சூரியன் நிற்பதால், அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால், பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டுத் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசத்தை எல்லாம் நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சந்தையில் மதிக்கப்படுவீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சக ஊழியர்கள் கலைத்துறையினரே! உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism