Published:Updated:

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை

பொறுமையுடன் இருந்து சாதிக்கும் நேரம் இது.

எல்லோருக்கும் நல்லது நினைப்பவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைசுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு புது வேலை அமையும். ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

சூரியன் 16-ம் தேதி முதல் 8-ல் அமர்வதால், குடும்பத்தில் அமைதி திரும்பும் என்றாலும் சனியுடன் சேர்வதால் பல், காது வலி, இருமல் வந்து போகும். பிள்ளைளை அனுசரித்துச் செல்லவும். அரசு காரியங்கள் தாமதமாகும். புதனும் 8-ல் மறைந்திருப்பதால், வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில நேரங்களில் உங்களை கடிந்து பேசினாலும் அன்பாக நடந்துகொள்வார். கலைத் துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவேகமான முடிவுகளால் முன்னேறும் நேரம் இது.

உள்ளத் தூய்மை கொண்டவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைசப்தமாதிபதி செவ்வாய் உச்சமாகி 9-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், தைரியமாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

நீச்சமாகி 6-ல் நிற்கும் உங்கள் சுகாதிபதி சூரியன் 16-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால், கோபம் குறையும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும். என்றாலும் சூரியன் சனியுடன் சேர்வதால், வாழ்க்கைத்துணைக்கு முதுகு வலியும், முழங்காலில் அடிபடவும்கூடும். ராசிநாதன் சுக்கிரன் சனியை விட்டு விலகி 8-ல் மறைந்ததால், ஆரோக்கியம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைந்து முடியும். கண்டகச் சனி தொடர்வதால், எதிலும் ஈடுபாடற்ற நிலை, தலைச்சுற்றல் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரே! விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

பலமும் பலவீனமும் உணரும் தருணம் இது.

மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைராகு வலுவாக இருப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பணவரவு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

16-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால், எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழுதான டி.வி., ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். ராசிநாதன் புதன் 6-ல் மறைந்து சனியுடன் இணைந்திருப்பதால், சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, தொண்டை வலி வந்து நீங்கும். செவ்வாய் 8-ல் நிற்பதால், ரத்த அழுத்தம், முன்கோபம், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து செல்லும். வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.

பொறுத்திருந்து சாதிக்கும் காலம் இது.

திட்டமிடுவதில் வல்லவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரையோகாதிபதி செவ்வாய் 7-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், கறாராகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும்.

5-ல் அமர்ந்திருக்கும் சனியுடன், 16-ம் தேதி முதல் சூரியனும் இணைவதால், பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. 6-ல் சுக்கிரன் மறைவதால், சிறுசிறு விபத்து, கழுத்து வலி, வாகனப் பழுது வந்து நீங்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், நிம்மதி உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், வீண் விரயம், ஏமாற்றம், வேலைச்சுமை வந்து செல்லும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத ஏமாற்றங்கள் வந்து போகும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

புதிய பாதையில் பயணிக்கும் காலம் இது.

எப்போதும் மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைஉங்கள் யோகாதிபதியான செவ்வாய் 6-ம் இடத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சகோதரர்களால் பயனடைவீர்கள். வழக்கு சாதகமாகும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீசமாகி இருக்கும் ராசி நாதன் சூரியன் 16-ம் தேதி முதல் 4-ல் அமர்வதால், அரசால் அனுகூலம் உண்டு. ஆனால், சனியுடன் சேர்வதால், வேலைச்சுமையால் ஓய்வின்மையும், தூக்கமின்மையும் வந்து போகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். அர்த்தாஷ்டமச் சனியும், ராசிக்குள் ராகுவும் தொடர்வதால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், கை, காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதி காரிகள் உங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத் துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

எதையும் சாதிக்கத் துடிக்கும் வேளை இது.

ஒற்றுமையுடன் வாழ நினைப்பவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைசுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய எண்ணங்கள் தோன்றும். திடீர் பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

ஆனால், ராசிநாதன் புதன் சனியுடன் சேர்ந்திருப்பதால், அசதி, சோர்வு, வீண் செலவுகள், டென்ஷன் வந்து போகும். 16-ம் தேதி முதல் சூரியன் 3-ல் அமர்வதால், உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும். பழைய கடனில் ஒரு பகுதியைத் திருப்பித் தருவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். செவ்வாய் 5-ல் நிற்பதால், வீண் குழப்பங்கள், மனஉளைச்சல் வந்து போகும். ஜன்ம குரு தொடர்வதால், யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

எதிர்பாராத நன்மைகள் சூழும் தருணம் இது.

சுய முயற்சியுடன் செயல்படுவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைராகு லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செவ்வாய் கேந்திரபலம் பெற்று வலுவாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், தலைவலி, பல்வலி, பேச்சால் பிரச்னைகள், கணுக்கால் வலி வந்து போகும். அரசு காரியங்கள் தள்ளிப் போகும். ஏழரைச் சனி தொடர்வதால், யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குருவின் போக்கு சரியில்லாததால், எதிலும் ஒரு வித தயக்கம், தடுமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் நேரம் இது.

இதமாகப் பேசி பிறரைக் கவர்பவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைசுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

ராசிநாதன் செவ்வாய் 3-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். 16-ம் தேதி முதல் ராசிக்குள் நிற்கும் சனியுடன் சூரியனும் சேர்வதால், முன்கோபம், உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். ஜன்மச் சனி தொடர்வதால், ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர் களைக் கலந்தாலோ சிக்கவும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

சாமர்த்தியமாகச் செயல்படவேண்டிய காலம் இது.

தீர்க்கதரிசனத்துடன் உண்மையை விரும்புபவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைகேது வலுவாக 3-ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். தாய்வழியில் அனுகூலம் உண்டு.

சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வீட்டை அழகுபடுத்துவீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால், பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். கசப்பான சம்பவங்களால் அவ்வப்போது தூக்கம் குறையும். 16-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால், தந்தையாருடன் மோதல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.  உத்தியோகத்தில் வேலைச் சுமை இருக்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும்.

புதிய திட்டம் நிறைவேறும் வேளை இது.

மரபுகளை மாற விரும்பாதவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைராஜ கிரகங்களான குருவும், சனியும் சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது பொறுப்புகளுக்கு தேர்ந் தெடுக்கப்படுவீர்கள். வேலை கிடைக்கும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

உறவினர்கள், நண்பர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். செவ்வாய் ராசிக்குள் உச்சம் பெற்று நிற்பதால், சகோதரர்களால் பலனடைவீர்கள். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்கும் முயற்சி பலிதமாகும். முன்கோபம், ரத்த சோகை, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். சர்ப்பகிரகங்கள் சாதகமாக இல்லாததால், எதிலும் நிம்மதியற்ற போக்கு, இழப்புகள் வந்து போகும். வியாபாரம் செழிக்கும். பங்குதாரர்கள் புரிந்து கொள்வார்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் உங்களிடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளால் மற்றவர் கவனத்தைக் கவர்வீர்கள்

சமயம் அறிந்து செயல்படும் காலம் இது.

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை


நம்பி வந்தவர்களைக் கைவிடாதவர்களே!


புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக்கொள்வார்கள். 16-ம் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால், புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். தந்தையின் உடல் நலம் சீராகும். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால், தாழ்வுமனப்பான்மை, வீண் விரயம், ஏமாற்றம் வந்து செல்லும். வாழ்க்கைத்துணைக்கு இடுப்பு வலி, கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். 12-ல் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் குறையாது. வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

விஸ்வரூபம் எடுக்கும் தருணம் இது.

கற்பனைத் திறன் மிக்கவர்களே!

ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரைராகு 6-ம் வீட்டில் நீடிப்பதாலும், ராசிநாதன் குருபகவான் உங்களது ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். செயற்கரிய காரியங்களையும் செய்து முடித்து எல்லோருடைய பாராட்டையும் பெறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகளால் மதிப்பு கூடும்.

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பூர்வீகச் சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. செவ்வாய் சாதகமாக இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வழக்கில் திருப்பம் உண்டாகும். 16-ம் தேதி முதல் சூரியன் 9-ல் நிற்கும் சனியுடன் சேர்வதால், தந்தைக்கு நெஞ்சு வலி, வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத்துறையினரே! மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism