Published:Updated:

ராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

புதிய பதவி கிடைக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மேஷம்: தவறுகளைத் தட்டிக்கேட்கும் நெஞ்சுரம் கொண்டவர்களே! ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய பொறுப்பு, பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதிதாக வீட்டுமனை வாங்குவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.  உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வழக்கு சாதகமாகும். 8-ல் நிற்கும் சனியுடன் சூரியனும் இணைவதால் மனஇறுக்கம், தலைச்சுற்றல், வீண் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பக்குவமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

நல்ல தீர்ப்பு வரும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

ரிஷபம்: உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் களே! குருவும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால், எல்லா பிரச்னைகளையும் சமாளிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிரிகள் நண்பர்களாவர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.  7-ல் நிற்கும் சனியுடன் சூரியனும் சேர்வதால் வீண் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.

அரசியல் செல்வாக்கு கூடும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


மிதுனம்: விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் நுழைவதால், நினைத்தது நிறைவேறும். நாடாளுபவர் களின் நட்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். ஆனால், ராசிநாதன் புதன் 24-ம் தேதி வரை சனியுடன் சேர்ந்து நிற்பதால் அலர்ஜி, கழுத்து வலி ஆகியவை வந்து போகும். ராகு 3-ல் நிற்பதால் புதிய பதவி மற்றும்  பொறுப்புகள் தேடி வரும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். 4-ல் குரு நீடிப்பதால், இனந்தெரியாத கவலைகள் வரக்கூடும். திடீர் யோகம் ஏற்படும் நேரமிது.

சகோதரர்கள் உதவுவர்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

கடகம்: காசு பணத்துக்கு விலை போகாதவர்களே! செவ்வாய் 7-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பணவரவு ஒருபக்கம் இருந்தாலும், பற்றாக்குறையும் நீடிக்கும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் வாகன விபத்துகள், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிகள் எடை மிகுந்த பொருட்களைச் சுமக்க வேண்டாம். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலைகளை சிரமப்பட்டு முடிக்க வேண்டியதிருக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நேரமிது.

சுப நிகழ்ச்சிகள் நடக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


சிம்மம்:  போராட்டங்களைக் கண்டு  சளைக்காமல் எதிர்கொள்பவர்களே! குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்கள் கனவுகள் நனவாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

அயல் நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். செவ்வாய் 6-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் தைரியம் கூடும். 4-ல் நிற்கும் சனியுடன் ராசிநாதன் சூரியனும் சேர்வதால் கை கால் வலி, அடி வயிற்றில் வலி ஏற்படலாம். உத்யோகத்தில் தொல்லை தந்த அதிகாரி இடம் மாறுவார்.

பணவரவு அதிகரிக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

கன்னி: பகைவனுக்கும் உதவும் பரந்த மனம் கொண்டவர்களே! சனி 3-ம் இடத்திலும், கேது 6-ம் இடத்திலும் வலுவாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். பணவரவு அதிகரிக்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டை மாற்றுவது, விரிவு படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். ஜென்ம குரு தொடர்வதால் வாழ்க்கையில் சிறுசிறு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். ராசிநாதன் புதன் 24-ம் தேதி வரை சனியுடன் சேர்ந்து நிற்பதால், சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, வீண் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் நேர்மூத்த அதிகாரியைவிட, மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணமிது.

அதிகார நட்பு கிடைக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

துலாம்: லட்சியக் கனவுடன் வாழ்பவர்களே! சப்தமாதிபதி செவ்வாய் 4-ல் உச்சம் பெற்று அமர்ந் திருப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்
கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும். 2-ல் சூரியன் அமர்வதாலும், பாதச்சனி தொடர்வதாலும் முன்கோபம், தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு மறையும். உழைப்பால் உயரும் வேளையிது.

துணிச்சலான முடிவு எடுப்பீர்கள் !

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

விருச்சிகம்: கலக்கமாக வருபவர்களைக் கலகலப்பாக்குபவர்களே! குரு வலுவாக இருப்ப தால், எதையும் தாங்கும் மன வலிமை கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. ராசிக்குள் சூரியன் நுழைவதால், அரசு காரியங்கள் இழுபறியாகும். ஜென்மச் சனி தொடர்வதால், மனதில் இனம்புரியாத பயம், ஏற்படும். வியாபாரத்தில் தேங்கி இருந்த பழைய சரக்குகள் விற்றுத் தீரும். துணிச்சலான முடிவுகள் எடுக்கும் நேரமிது.

வீட்டுமனை வாங்குவீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை


தனுசு: மற்றவர்களின் நலனுக்காக அயராது போராடுபவர்களே! கேது 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் உண்டாகும். ஆன்மிக அறிஞர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகும். வழக்கு சாதகமாகத் திரும்பும். புதுவேலை அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்கு வீர்கள். 12-ல் சனியும், 10-ல் குருவும் தொடர்வதால், வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். அரசு காரியங் கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள்.

வசதி வாய்ப்புகள் பெருகும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மகரம்: தலைமைப் பண்பு அதிகமுள்ள வர்களே! சனியும் சூரியனும் வலுவாக இருப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புது வேலை கிடைக்கும். பாதியில் நின்று போன வீடு கட்டும் பணியைத் தொடங்க, வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகனுக்கிருந்த கூடா நட்பு விலகும். வேற்றுமதத்தவர்களால் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். உத்யோகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

கும்பம்: மலர்ந்த முகத்துடன் அனைவரிட மும் மனம் விட்டுப் பேசுபவர்களே! சூரியன் 10-ம் வீட்டில் அமர்வதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். ராகு, கேது சாதகமாக இல்லாததால் தோல்வி மனப்பான்மை வந்து செல்லும்.  மற்றவர்களுக்காக சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் தருணமிது.

புண்ணிய தலம் செல்வீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

மீனம்: காலம் கனியும் வரை காத்திருப் பவர்களே! செவ்வாய் லாப வீட்டில் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமா கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  அண்டை மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர்.