திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரை

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

அனுசரித்துச் செல்லவேண்டிய நேரம் இது.

சீர்த்திருத்த சிந்தனை உள்ளவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைஉங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் 10-ம் வீட்டில் பலம் பெற்று நிற்பதால், போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். வி.ஐ.பி.கள் ஆதரவாக இருப்பார்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.
 
ஆனால், சூரியன் 8-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், கமிஷன் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புது டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். குருபகவான் 6-ல் மறைந்திருப்பதால், வீண் சந்தேகம், மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணம் இது.

பகிர்ந்தளிக்கும் மனம் கொண்டவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைகுருபகவான் வலுவாக இருப்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

உங்களின் ராசிநாதனாகிய சுக்கிரனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால் இதமாகப் பேசி சாதிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் களின் தொடர்பு கிடைக்கும். செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சூரியனும், சனியும் 7-ல் அமர்ந்திருப்பதால், வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருக்கவும். உத்தியோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வலிய வந்து உதவுவார். சக ஊழியர்களால் சின்னச் சின்ன இடையூறுகளைச் சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். 

பிறரைப் புரிந்துகொள்ளும் தருணம் இது.

சுயநல எண்ணம் இல்லாதவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைஉங்களின் ராசிநாதனாகிய புதன் 25-ம் தேதி முதல் சனியை விட்டு விலகி 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியையும் பார்க்க இருப்பதால், சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்களுட னான மோதல் போக்கு மாறும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

8-ல் செவ்வாய் நிற்பதால், சிறுசிறு நெருப்பு காயங்கள், சகோதரர்களுடன் மனவருத்தம் வந்து நீங்கும். சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால், மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசவும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

பொறுமையுடன் இருக்கவேண்டிய காலம் இது.

திட்டம் போடுவதில் வல்லவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைசெவ்வாய் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது விரைந்து முடியும். 3-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதுடன், 25-ம் தேதி முதல் புதனும் மறைவதால், நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். டி.வி., மிக்சி போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும்.

சூரியன் 5-ல் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் பிரச்னைகள் வந்து போகும். ராகு 2-லும், கேது 8-ம் வீட்டிலும் அமர்ந்திருப்பதால், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் நேரம் இது.

புத்தி சாதுர்யம் உள்ளவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைஉங்களின் ராசிநாதனாகிய சூரியன் 4-ல் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். ஆனால் சனியுடன் நிற்பதால், நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்து நீங்கும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புது வேலை அமையும். ராசிக்குள் ராகு நிற்பதால், அவ்வப்போது மனதில் சின்னச் சின்ன சஞ்சலங்கள், நிம்மதியற்றப் போக்கு வந்து நீங்கும். 6-ல் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துகொள்வார்கள். கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

முயற்சிகளில் வெற்றிபெறும் வேளை இது.

மற்றவர்க்கு நல்லதையே செய்பவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைஉங்களின் ராசிநாதன் புதன் 25-ம் தேதி முதல் சனியை விட்டு விலகி 4-ம் இடத்தில் அமர்வதால், தடைப்பட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் உடனே முடியும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

ஆனால், 5-ல் செவ்வாய் நிற்பதால், பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிக்கவும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வி.ஐ.பி.கள் உதவுவார்கள். சூரியன் 3-ல் நிற்பதால், அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஜன்ம குருவால் அவ்வப்போது குழப்பம், தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் ஏற்படக்கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் வரும். சனி வலுவாக இருப்பதால், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படக்கூடும். கலைத்துறையினரே! புகழடைவீர்கள்.

முயற்சியால் வெற்றிபெறும் காலம் இது.

உங்கள் மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைலாப வீட்டில் ராகு நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். பதவிகள் தேடி வரும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். புது வேலை அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

சூரியன் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், பேச்சில் தடுமாற்றம், கணுக்கால் வலி, கண் எரிச்சல், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். 12-ல் குரு நிற்பதால், வேலைச்சுமை, தூக்கமின்மை வந்து செல்லும். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்தி ருப்பதால், நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் சில முக்கிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை புது யுக்திகளால் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். மேலதிகாரியுடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

புதிய திட்டங்கள் தீட்டும் தருணம் இது.

வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்பவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைராசிநாதன் செவ்வாய் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், தொட்ட காரியம் துலங்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக் குள் அந்நியோன்யம் உண்டாகும். சகோதர வகையில் நன்மை உண்டு. கொடுத்த பணத்தை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

கல்யாண முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். சிலர் திடீரென வீடு மாற வேண்டி வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பழைய சொந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சூரியனும், சனியும் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் வீண் டென்ஷன், நெஞ்சு வலி, படபடப்பு வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

உழைப்பால் சாதிக்கும் நேரம் இது.

வாதாடும் குணம் கொண்டவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைகேது 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர் கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும்.

சூரியன் 12-ல் மறைந்திருப்பதால், மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அதிரடியாக முடிவெடுப்பீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தாய்வழியில் மரியாதை கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ராசிநாதன் குரு 10-ல் நீடிப்பதால், மறைமுக அவமானம், தயக்கம், வேலைச்சுமையால் டென்ஷன் வந்து செல்லும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு அங்கீகாரமோ, பாராட்டோ இல்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும்.

முயற்சிகள் வெற்றிபெறும் காலம் இது.

குலப் பெருமையைக் காப்பவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைகுருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். சொந்தங்களின் அன்புத் தொல்லை குறையும். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள்.

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தேடி வரும். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், சில நேரங்களில் தலைச்சுற்றல், தடுமாற்றம் வரும். பழைய சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போகவும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். புதுப் பொறுப்புகள் தேடி வரும். கலைத் துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

பிரச்னைகளிலிருந்து விடுபடும் காலம் இது.

தன்னம்பிக்கை என்றும் குறையாதவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைசுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டு வளர்ப்பீர்கள். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.
 
சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால், இழுபறி நிலை மாறும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தந்தையின் உடல் நிலை சீராகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் 12-ல் நிற்பதால், சகோதரர்களுடன் சச்சரவு வரும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். கை, கால் மரத்துப் போகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் நேரம் இது.

தன்னலத்தை ஒருபோதும் விரும்பாதவர்களே!

ராசிபலன் - நவம்பர்-22 முதல் டிசம்பர்-5 வரைராசிநாதன் குரு 7-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. புது வீடு கட்டி குடி புகுவீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பெரிய பொறுப்புகள் தேடி வரும். நவீன மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற் றுவீர்கள். சூரியன் 9-ல் அமர்வதால், தந்தைக்கு நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து விலகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதி காரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.