Published:Updated:

ராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை
ராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

புதிய பாதையில் பயணிப்பீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



மேஷம்: எதிலும் வித்தியாசத்தை விரும்புபவர்களே! ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களது ஆளுமைத்திறன் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். 8-ல் சூரியனும், சனியும் நிற்பதால், கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. புதிய பாதையில் பயணித்து பழைய சிக்கல்களைத் தீர்க்கும் வேளையிது.

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை

வழக்கில் வெற்றி கிடைக்கும்!

ரிஷபம்: உணர்ச்சிவசப்பட்டு பேசி பிறகு வருத்தப் படுபவர்களே! 5-ல் குரு நீடிப்பதால், தன்னம்பிக்கையுடன் எதையும் செய்வீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகள் ஆக்கபூர்வமாக செயல்படுவர்.  வழக்கில் வெற்றி உண்டு.  வாகனத்தை சீர் செய்வீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. கண்டகச் சனி தொடர்வதுடன், 7-ல் சூரியனும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். நட்பால் முன்னேறும் காலமிது.

திடீர் திருப்பம் உண்டாகும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை


மிதுனம்: ஓயாமல் சிந்தித்துக்கொண்டிருப்பவர்களே! சனி பகவான் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி மேலே உயரும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரத்தில் இருப்பவர் கள் உதவுவர். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வெளிநாட்டில் இருப்பவர் களால் திடீர் திருப்பம் உண்டாகும். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள்.  6-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில்  நுழைவதால், கோபம் குறையும்.  வித்தியாசமான முடிவுகளால் வெற்றிப்பாதை தெரியும்.

தடைகள் விலகும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



கடகம்:
காலம் தவறாதவர்களே! டிசம்பர் 3-ம் தேதி வரை சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால் சோர்வு வந்து நீங்கும். ஆனால், 4-ம் தேதி முதல் ராசிக்கு 7-ல் சுக்கிரன் அமர்ந்து உங்களது ராசியையும் பார்க்க இருப்பதால், தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பணப்பற்றாகுறையைச் சமாளிப்பீர்கள். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் சச்சரவு வரும். சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதியை இழப்பீர்கள்.

புதிய வேலை கிடைக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



சிம்மம்:
  சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்களே! குரு 2-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். கைமாற்றாக வாங்கிய பணத்தைக் கொடுப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவர். வி.ஐ.பி அறிமுகம் கிடைக்கும். புதிய வேலை அமையும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று, புது வீடு வாங்குவீர்கள். கடந்தகால அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து நடப்பது நல்லது. புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், இடமாற்றமும் கிடைக்கும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



கன்னி:
இடம், பொருள் அறிந்து எதையும் செய்பவர் களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பணப்புழக்கம் அதிகமாகும். நீண்டநாளாக தாமதமான காரியங்கள் விரைந்து முடியும். திருமணம் கூடி வரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விசா கிடைக்கும். வழக்குகளில் சுமுகத் தீர்வு கிடைக்கும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். வேற்றுமொழிப் பேசுபவரால் ஆதாயமடைவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த  சிக்கல்கள் விலகும். புண்ணிய தலம் செல்வீர்கள். வியாபாரம் செழிக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



துலாம்: சுத்தம், சுகாதாரத்தை விரும்புபவர்களே! ராகு வலுவாக இருப்பதால், எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். பணவரவு உண்டு. சாதனையாளர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.  பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியடையும் நேரமிது.

வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



விருச்சிகம்: நேரான பாதையிலேயே பயணிப் பவர்களே! ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர் களின் நட்பு கிட்டும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். ஆன்மிகத் தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  எதையும் சாதிக்கும் வல்லமை பெறும் வேளையிது.

புதிய சொத்து வாங்குவீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



தனுசு: முன்வைத்த காலை பின் வைக்காதவர்களே! 3-ம் இடத்தில் கேது அமர்ந்திருப்பதால், பிரச்னைகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். வி.ஐ.பி-க்கள் நண்பர்களாவார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். ஷேர் லாபம் தரும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய உறவினர்கள், நண்பர் களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். விசா கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.  6-ம் தேதி முதல் செவ்வாய் 3-ல் நுழைவதால், பேச்சில் கம்பீரம் பிறக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். திடீர் நன்மைகள் சூழும் காலமிது.

புதிய தொழில் தொடங்குவீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



மகரம்:
மரியாதை கொடுத்து மரியாதை பெறுபவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சிந்தனை வளம் பெருகும். வராது என்றிருந்த பணம் வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் மனங்கோணாமல் நடந்து கொள்வர். புதிய செல்போன் வாங்குவீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால், அரசு காரியங்கள் சுலபமாக முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பேச்சில் நிதானம் அவசியம். வழக்கால் நெருக்கடி கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். விடாமுயற்சியால் வெற்றி பெறும் நேரமிது.

புதிய ஒப்பந்தம் போடுவீர்கள்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



கும்பம்: `குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பதை உணர்ந்தவர்களே! சூரியன் 10-ல் நிற்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அதிகாரிகளின் நட்பால் ஆதாயமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பாதிப்பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். புதிய வேலை அமையும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.  வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். தொடர் உழைப்பால் தொடங்கியதை முடிக்கும் தருணமிது.

எதிர்பார்த்த தொகை கிடைக்கும்!

ராசிபலன்கள் -  நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை



மீனம்:
எதிலும் தரத்தை விரும்புபவர்களே! ராகு 6-ம் இடத்திலும், குரு 7-ம் இடத்திலும் வலுவாக அமர்ந்திருப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பர். உறவினர், நண்பர்களால் சில நன்மைகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆப ரணங்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.  புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு