Published:Updated:

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் வேளை இது.

வித்தியாசமாகச் சிந்திப்பவர்களே!

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் அமர்வதால், தன்னம்பிக்கை அதிகமாகும். மாறுபட்ட அணுகுமுறையால் காரியங்கள் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வேலை அமையும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதர வகையில் ஆதரவு கூடும். ஆனால், ராசிநாதன் கேதுவுடன் அமர்ந்திருப்பதால், அலர்ஜி, ரத்த சோகை வந்து போகும்.

சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் சாதகமாக இல்லா ததால், பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது நல்லது. அஷ்டமத்துச் சனி தொடர்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் தேடி வரும்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

பலம் பலவீனம் உணரும் தருணம் இது.

எதிலும் உணர்ச்சிவசப்படுபவர்களே!

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரனும், பூர்வ புண்ணியாதிபதி புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீட்டை விரிவுபடுத்தும் பணி சிறப்பாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

சப்தமாதிபதி செவ்வாய் 10-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், தைரியம் கூடும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும்.  புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், கண்டகச் சனி தொடர்வதால், வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். முன் கோபத்தால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

சாதித்துக் காட்டும் வேளை இது.

எப்போதும் சிந்தனையில் இருப்பவர்களே! 

மிருகசீரிடம்  3,4-ம் பாதம்,  திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சவாலான காரியங்களைக் கூட சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வி.ஐ.பி.கள், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். நல்ல மணப்பெண்ணும் அமைவாள். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

15-ம் தேதி வரை 6-ல் சூரியன் வலுவாக நிற்பதால், பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 8-ல் மறைந்திருந்த செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்வதால், சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். குரு சாதகமாக இல்லா ததால், வேலைச்சுமை, மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும். வியா பாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலம் இது.

காலத்தின் அருமை தெரிந்தவர்களே! 

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

சுக்கிரன் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால், போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

6-ல் புதன் மறைந்திருப்பதால், சளித்தொந்தரவு, காய்ச்சல், நரம்புச்சுளுக்கு வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் இருந்துகொண்டே யிருக்கும். 15-ம் தேதி வரை 5-ல் நிற்கும் சனியுடன் சூரியனும் அமர்ந்திருப்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உறவினர் பகை வந்து நீங்கும். சூரியன் 16-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் நுழைவதால், தள்ளிப்போன அரசாங்க விஷயம் முடியும். செவ்வாய் 8-ல் மறைவதால், முன்கோபம், சகோதரர்களுடன் மனவருத்தம் உண்டாகும். 3-ல் குரு நீடிப்பதால், யாரிடமும் கோபத்துடன் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! விமர்சனங்களையும் கடந்து முன்னேறுவீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

ரகசியங்களைக் காக்க வேண்டிய நேரம் இது.

மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே! 

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

குரு ராசிக்கு தனஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். ராஜதந்திரமாகப் பேசுவீர்கள். வேலை கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அறிஞர்களின் நட்பால் தெளி வடைவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.

புதன் சாதகமாக இருப்பதால், புதியவர்கள் நண்பர்களாவார்கள். பூர்விக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். சொந்தங்கள் உங்களைப் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சுக்கிரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரக்கூடும். 15-ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் சனியுடன் நிற்பதால், டென்ஷன், படபடப்பு வந்து போகும். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

நினைப்பவை நிறைவேறும் தருணம் இது.

காலம் அறிந்து எதையும் செய்பவர்களே!

உத்திரம்  2,3,4-ம் பாதம்,  அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால், தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
 
உங்கள் தன-பாக்கியாதிபதி சுக்கிரனும், ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அரசால் ஆதாயமடைவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. ஜன்ம குரு தொடர்வதால், வீண் பகை வந்து போகும். வியாபாரத்தில் புதிய திட்டங்களுக்குச் செயல் வடிவம் தருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! புதுமையாகச் சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

நினைத்த காரியங்கள் முடியும் வேளை இது.

எதிலும் சுத்தத்தை விரும்புபவர்களே!

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி,  விசாகம் 1,2,3-ம் பாதம்

சுக்கிரனும்  புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை அணிகலன்கள் சேரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். வெளியூர்ப் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள்.

லாப வீட்டில் ராகு வலுவாக நிற்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். எதிர்பார்த்த விலைக்குப் பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். 2-ல் சனி தொடர்வதால், பேச்சால் பிரச்னை, வீண் டென்ஷன் வந்து நீங்கும். செவ்வாய் 5-ல் அமர்வதால், பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். சகோதரர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்து போகும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது.

எப்போதும் நேர்வழியில் செல்பவர்களே!

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ராசிநாதன் செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்வதால், எதிர்ப்புகள் அடங்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிள்ளைகள் உங்களின் உண்மையான பாசத்தை உணருவார்கள். புது இடம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சகோதரர்கள் மனம் திறந்து பேசுவார்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், இங்கிதமாகப் பேசத் தொடங்குவீர்கள். கொடுத்த பணத்தையும் நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிக்குள் சூரியன் சனியுடன் நிற்பதால், சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். கலைத்துறையினரே! உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

புதிய பாதையில் பயணிக்கும் தருணம் இது.

எதிலும் பின்வாங்காதவர்களே!

மூலம்,  பூராடம்,  உத்திராடம் 1-ம் பாதம்

3-ம் இடத்தில் செவ்வாய் வலுவாக அமர்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். துணிச்சல் அதிகரிக்கும். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கு முயல்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சகோதரரின் பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள்.  புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பூர்விக சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் உண்டு. ஆனால், பாக்கியாதிபதி சூரியன் சனியுடன் 12-ல் நிற்பதால், அடுத்தடுத்து செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் சற்று தாமதமாகக் கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

தடைப்பட்ட வேலைகள் முடியும் வேளை இது.

மற்றவர்களை மதித்து நடப்பவர்களே!

உத்திராடம் 2,3,4-ம் பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

சூரியனும் சனியும் லாப வீட்டில் நிற்பதால், தொட்டது துலங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் நல்ல வழிக்குத் திரும்புவார்கள். மூத்த சகோதரர் உதவுவார். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சிலருக்கு வேலை கிடைக்கும். தடைப்பட்ட திருமணப் பேச்சு நல்ல விதத்தில் முடியும். ஆனால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும்.

குருபகவான் வலுவாக இருப்பதால், எதையும் எதிர்த்து நின்று போராட சக்தி கிடைக்கும். 2-ல் செவ்வாய் நுழைவதால், சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பு இருக்கிறது. சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம் இது.

பிறர் குற்றத்தைப் பார்க்காதவர்களே!

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பணம் வரும். வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். மூத்த சகோதரர்கள் மதிப்பார்கள்.

குரு 8-ல் தொடர்வதால், அவ்வப்போது அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். செவ்வாய் ராசிக்குள் அமர்வதால், முன்கோபம், ரத்த அழுத்தம், படபடப்பு வந்து செல்லும். உடன் பிறந்தவர்களால் பிரச்னைகள் வெடிக்கும். சூரியனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். பூர்விக சொத்தை மாற்றியமைப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே!  பல இடங்களில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 6 முதல் 19 வரை

நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் நேரம் இது.

எதிலும் தரத்தை விரும்புபவர்களே!

பூரட்டாதி  4-ம் பாதம்,  உத்திரட்டாதி, ரேவதி

குரு வலுவாக நிற்பதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கால் இருந்த டென்ஷன் விலகி வெற்றி கிட்டும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

செவ்வாய் 12-ல் மறைவதால், சகோதரர்களால் செலவினங்கள் இருந்தாலும் நிம்மதி உண்டு. நெஞ்சு எரிச்சல், பின்மண்டையில் வலி வந்து போகும். 15-ம் தேதி வரை சூரியன் 9-ல் சனியுடன் நிற்பதால், தந்தையாருடன் மனக்கசப்பு, அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புது வேலை அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். கலைத் துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும்.