Published:Updated:

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

உயர் பதவி கிடைக்கும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரைமேஷம்: முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம் உள்ளவர்களே! ராசிநாதன் செவ்வாய் 11-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவீர்கள். புதிய வேலை, உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால், செவ்வாய் கேதுவுடன் இணைவதால் உடல் உபாதை, முன்கோபம் வந்து போகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சீராகும். புதியவர்களை நம்ப வேண்டாம். குடும்ப விஷயத்தில் பிறர் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்.  கமிஷன் மூலம் பணம் வரும். விடாமுயற்சியால் முன்னேறும் வேளையிது.

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

தங்க ஆபரணம் வாங்குவீர்கள்!

ரிஷபம்: `மறப்போம், மன்னிப்போம்' என்றிருப்பவர்களே! குரு வலுவாக இருப்பதால், எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களின் உதவிகள் உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை அமையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். போராட்டங்களை சமாளிக்க வேண்டிய தருணமிது.

பழைய கடன் பிரச்னை தீரும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


மிதுனம்: ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! சனி 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கையுடன் எதையும் செய்வீர்கள். மதிப்பு, மரியாதை கூடும்.  பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவர். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகளை செய்து முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தும் காலமிது.

பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


கடகம்: கற்பனைத்திறன் மிக்கவர்களே! 16-ம் தேதி முதல் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் நுழைவதால், நினைத்த காரியம் நிறைவேறும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு நெருக்கடிகள் நீங்கும். நண்பர்களுடனான மோதல்கள் விலகும். இழுபறியான வேலைகள் முடிவடையும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண் டாம். எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய வேளையிது.

எதிர்பார்த்த பணம் கிடைக்கும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


சிம்மம்:
சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்த தேக்கநிலை மாறும். திருமணம் கைகூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புண்ணிய தலம் செல்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்துகொள்வர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர்.

புதிய வேலை அமையும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


கன்னி: கேள்விக்கணை தொடுப்பதில் வல்லவர்களே! செவ் வாயும், கேதுவும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் தாங்கும் மனோபலம் உண்டாகும். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதிய வேலை அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேற்றுமதத்தினர், மாற்றுமொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கடின உழைப்புக்கு உரிய  அங்கீகாரம் கிடைக்கும் நேரமிது.

உற்சாகம் பிறக்கும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


துலாம்: நீதியின் பக்கம் நிற்பவர்களே! 16-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால், சவால்கள், விவாதங்களில் வெற்றிபெறுவீர்கள். அரசியலில் செல் வாக்கு கூடும். பழைய வீட்டை இடித்து கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புது வாகனம் வாங்கு வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் தரும் காலமிது.

வாகனத்தை சீர் செய்வீர்கள்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


விருச்சிகம்: விளம்பரத்தை விரும்பாதவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். வி.ஐ.பி-களின் ஆதரவால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தைப் புதுப்பிப்பீர்கள். வேற்று மதத்தவரின் அறிமுகம் கிடைக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

வழக்கு சாதகமாகும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


தனுசு: கொள்கைப் பிடிப்புள்ளவர் களே! செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்தில் உங்களின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். சகோதரர்களால் பயனடைவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் தருணமிது.

புதிய பொறுப்புகள் தேடிவரும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


மகரம்: காரியத்தில் கண்ணாக இருப்பவர்களே! சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் புகழ் உயரும். அனுபவபூர்வமாகப் பேசி சாதிப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். புதிதாக வீடு வாங்குவது, கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதிய சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

புண்ணிய தலம் செல்வீர்கள்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


கும்பம்: வாழ்வியல் நுட்பங்களை அறிந்தவர்களே! சூரியன் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எந்த இக்கட்டான சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் மனவலிமை அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களில் யார் யார் எப்படி என்பதை அறிந்துகொள்வீர்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி உண்டு. புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

ஆளுமைத்திறன் அதிகரிக்கும்!

ராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை


மீனம்: அன்புக்கு அடிமையானவர் களே! 16-ம் தேதி முதல் சூரியன் 10-ல் அமர்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். படபடப்பு, தடுமாற்றம் நீங்கும். வழக்கில் வெற்றி உண்டு.