Published:Updated:

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!
பிரீமியம் ஸ்டோரி
2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!
பிரீமியம் ஸ்டோரி
2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!
2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

2017 புத்தாண்டு பொதுப்பலன்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


புதிய கட்சி உதயமாகும்!

நி
கழும் துர்முகி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயனம், ஹேமந்த ருதுவில், வளர்பிறையில், திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம் - மகர ராசி, கன்னி லக்னத்திலும், ஹர்ஷணம் நாமயோகம், கரசை நாமகரணத்திலும், நேத்திரம் ஜீவனம் மறைந்த ரிஷப நவாம்ச லக்னத்திலும், சித்த யோக நன்னாளிலும் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.

எண் ஜோதிடப்படி 2017-ன் கூட்டு எண்ணாக (2+0+1+7=10) சூரியனின் ஆதிக்க எண்ணாகிய ஒன்று வருவதால், மக்களிடையே அரசியல், ஆன்மிக விழிப்பு உணர்வு அதிகரிக்கும். விதி எண்ணாக மூன்று வருவதால் ஒன்று, மூன்று ஆகிய எண்கள் புகழடையும். அந்த எண்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு பயன்பாட்டுக்கு வரும். மாரடைப்பு உள்ளிட்ட இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க நவீன மருந்துகள், அறுவை சிகிச்சை இல்லாத எளிய சிகிச்சைகள் நடைமுறைக்கு வரும். குருவுக்கு நான்கில் சூரியன் நிற்பதால், புதிய அரசியல் கட்சி உதயமாகும். 

தன காரகன் குரு, கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து லக்னத்தில் நிற்பதால், இந்திய பொருளாதாரம் சரிந்து 15.4.17 முதல் எழுச்சி பெறும்.தங்கத்தின் விலை குறையும். தங்கத்தின் பயன்பாடும், சேமிப்பும் சரியும். பள்ளி, கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சட்டம் வரும். ஆன்லைனில் தேர்வு எழுதும் முறை அறிமுகமாகும். வருமான வரி வரம்பு உயர்த்தப்படும். விவசாயிகள் நலன் காக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
2.9.17 முதல் குரு சுக்கிரன் வீட்டில் அமர்வதால், வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அரசின் வரி அதிகரிக்கும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்திரனை குரு பார்ப்பதால், ஆரோக்கியம் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரிக்கும். இயற்கை உணவு, மூலிகை உணவு, பாரம்பரிய உணவுகளும் பிரபலமாகும். சிறுதானிய உணவுகளும் முக்கியத்துவம் அடையும். கதர், காட்டன் துணிகளாலான ஆடைகளை மக்கள் விரும்பி அணிவார்கள்.

மனோகாரகன் சந்திரனை சனி பார்ப்பதால், மக்களிடையே மன இறுக்கம் அதிகமாகும். சுற்றுச் சூழல்களை பாதுகாக்கவும், தூர்ந்துபோன மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்கவும், வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கவும் புதிய சட்டங்கள் வரும்.

வருடம் பிறக்கும்போது, சுக்கிரனுடன் செவ்வாயும் கேதுவும் சேர்ந்து நிற்பதாலும், லக்னத்துக்கு ஆறாவது வீட்டில் மறைவதாலும் பதுக்கல்காரர்கள் சிக்குவார்கள். உணவுக் கலப்படத்தைத் தடுக்க கடும் சட்டம் அமலுக்கு வரும். ரசாயனப் பொடி கலப்படத்துடன், கிடங்குகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

டி.வி., மொபைல், லேப்டாப், கேமரா போன்ற எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை சரியும். சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை குறையும். கட்டுமானத் தொழிலை கட்டுப்படுத்த புதுச் சட்டங்கள் வரும். அங்கீகாரம் இல்லாத வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் பாதிப்பு அடையும்.

28.1.17 முதல் 5.6.17 வரை சுக்கிரன் மீனத்திலேயே உச்சமாகி பின்னர் வக்ரமாகி நிற்பதால், இந்த காலகட்டத்தில் பருவ நிலை மாறுதல்கள் அதிகம் இருக்கும். சினிமா தொழில் பாதிப்படையும். புகழ் பெற்ற நடிகர், நடிகைகள் விபத்துக்குள்ளாவர். அவர்களிடையே விவாகரத்தும் அதிகரிக்கும். புதிய இயக்குனர்கள் பிரபலமாவார்கள். புது ரக வாகனங்கள், சூரிய ஒளியில் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகும்.

லக்னத்துக்கு மூன்றில் சனி நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதாலும் சனியும், செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் நீதித் துறைக்கும் ஆளுபவர்களுக்கும் இடையே உள்ள பனிப்போர் குறையும்.

வருடத்தின் பிற்பகுதியில், நீதித் துறையில் புதிய நீதிபதிகள் அதிகளவு நியமிக்கப்படுவார்கள். பூமிகாரகன் செவ்வாய் வீட்டில் இந்த வருடம் முழுக்க சனி தொடர்வதால், ரியல் எஸ்டேட் தொழிலில் தில்லுமுல்லுகளைத் தடுக்கவும், பத்திரத்தாளில் போலிகளை அழிக்கவும் புதுச் சட்டங்கள் வரும். புதிய நான்கு வழி மற்றும் ஆறு வழி சாலைகள் அமைக்கப்படும். புதிய மேம்பாலங்களும் எழும்பும். சுற்றுலாத் துறை மேம்பாடு அடையும்.

26.7.17 வரை ராகுவும், கேதுவும் முறையே சிம்மத்திலும், கும்பத்திலும் இருப்பதால், நாட்டில் பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். ஆனால், 27.7.17 முதல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் அமர்வதால், அதுமுதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதன் வலுவடைந்திருப்பதால், இந்தியா விளையாட்டுத் துறையில் சாதிக்கும். கிரிக்கெட்டில் இந்திய அணியினர் மேலும் பல சாதனைகள் செய்வர்.

செவ்வாய் பகவான் சனி வீட்டில் நிற்பதால், ராணுவத்தில் நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். தீவிரவாதிகள் அழிக்கப்படுவர். தொல்லை கொடுக்கும் அண்டை நாடுகளின் கொட்டம் அடங்கும்.

சமயோசித புத்திக்கும், இசை, நடனம் உள்ளிட்ட சகல கலைகளுக்கும் உரிய கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், நாடெங்கும் உள்ள பாரம்பரியக் கலைகளை வளர்க்க உதவுவோம். நம் முன்னோர்களின் உணவு, உடை மற்றும் நல்ல பழக்கவழக்க பண்பாடுகளை இயன்றவரை பின்பற்றுவோம். மனோகாரகனாக சந்திரன் வருவதால், ‘மனமது சுத்தமானால் மந்திரம் தேவையில்லை’. என்ற சித்தர் வாக்குப்படி மனசாட்சிக்கு மதிப்பளித்து வாழ்வோம்; நலம் பெறுவோம்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

மேஷம்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

நேர்மையாளர்களே!


உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் லாப வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். விலகிப் போன நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். ஆனால், 16.1.17 வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.17 முதல் 26.2.17 வரை ராசிக்கு பன்னிரண்டில் மறைவதாலும் முன்கோபம், ரத்த சோகை, சகோதரர்களுடன் மனக் கசப்புகள் வந்து போகும்.

11.4.17 முதல் 26.5.17 வரை, உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதால், சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து போகும்.

உங்களின் சுகாதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால், இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.
26.7.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால், ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ஆனால், 27.7.17 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் அமர்வதால், வேலைப்பளு அதிகரிக்கும்; வீண் பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, ரத்த அழுத்தம் வந்து போகும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட வேண்டாம்.     

புத்தாண்டின் தொடக்கம் முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கியாதிபதியும் விரயாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால், பணத் தேவைக்காகக் கூடுதலாக உழைப்பீர்கள். கணவன் - மனைவிக் குள் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் அலைச்சலும் செலவு களும் அதிகரிக்கும்.

ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், திறமைகளை வெளிப் படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் உண்டா கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

14.12.17 வரை சனி 8-ல் நின்று அஷ்டமச் சனியாக வருவதால், அவ்வப்போது கோபம் உண்டாகும். பொருட்கள் களவு போக வாய்ப்பு இருப் பதால், கவனம் தேவை. பெரிய நோய்கள் இருப்பது போன்ற பிரமை உண்டாகும். 15.12.17 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தர்மசங்கடமான நிலைமை மாறும்.

வியாபாரத்தில் செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால், வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். பங்குதாரர்களால் பிரச்னை உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன், மின்சார சாதன வகைகளில் லாபம் அடைவீர்கள்.

உங்களின் உத்தியோகஸ்தானத் துக்கு அதிபதி சனி 8-ல் நீடிப்பதுடன், ஜீலை 27-ம் தேதி முதல் கேதுவும் 10-ல் அமர்வதால், கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். சலுகைகளைப் போராடிப் பெறவேண்டும். அதிகாரிகள் அனுசரணையாக இருந்தாலும் சக பணியாளர்களால் இடையூறுகள் உண்டாகும். செப்டம்பருக்குப் பிறகு உத்தியோகத்தில் சாதகமான போக்கு நிலவும்.

மாணவ-மாணவிகளே! கடினமாக உழைத்தால்தான் நல்ல மதிப்பெண் களைப் பெறமுடியும். போட்டிகளில் பரிசு, பாராட்டு கிடைக்கும்.

கலைத்துறையினரே! விமர்சனங் களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்தாலும் பாதிப்பு இருக்காது. இளைய கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.    

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, உங்களுக்கு அதிக சிரமங்களைத் தருவதாக இருந்தாலும், சமயோசித அறிவால் முன்னேற வைப்பதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

கும்பகோணம்-குத்தாலத்துக்கு அருகில் உள்ள க்ஷேத்ரபாலபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகால பைரவரை, ஞாயிற்றுக்கிழமை அல்லது அஷ்டமி திதியில் சென்று வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

கடின உழைப்பாளிகளே!


சந்திரன் உங்களது ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும்போது, இந்த புத்தாண்டு பிறப்பதால், தொலை நோக்குச் சிந்தனை யால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.    

உங்களுடைய சப்தமாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சுக்கிரனும் 10-ம் வீட்டில் இருப்பதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்.

ஆனால், 16.1.17 வரை செவ்வாயும், 27.1.17 வரை ராசிநாதன் சுக்கிரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால், சளித் தொந்தரவு, சோர்வு, கை, கால் வலி வந்து போகும்.

11.4.17 முதல் 26.5.17 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி நேருக்கு நேர் பார்க்க இருப்பதால், வாழ்க்கைத்துணைக்கு தலைச்சுற்றல், மூட்டு வலி, முன்கோபம், வேலைச்சுமை வந்து போகும். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம். 

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ல் ராகுவும் நீடிப்பதால், அடுக்கடுக்காக வேலைச்சுமை ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சிலருக்கு, வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.

ஜுலை 27-ம் தேதி முதல், வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால், தந்தைக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். பணம் வந்தாலும் செலவு களும் துரத்தும். ஆனால், ராகு 3-ல் அமர்வதால், மனதில் தைரியம் உண்டா கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்று மொழி, இனத்தவர்களால் ஆதாயம் ஏற்படும்.

1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால், நல்லவர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் அமர்வதால், சிறுசிறு காரியங்களைக் கூடப் போராடித்தான் முடிக்க வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். கடன்களை நினைத்து கலக்கம் உண்டாகும்.
15.12.17 வரை சனி 7-ல் கண்டகச் சனியாகவும், பிறகு அஷ்டமச் சனி யாகவும் வருவதால், உடல் நலன் சிறிய அளவில் பாதிப்புக்கு ஆளாகலாம். மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதைத் தவிர்க்கவும். வழக்கால் நெருக்கடிகள் ஏற்படும். 

வியாபாரத்தில், போட்டிகளை மீறி லாபம் கிடைக்கும். ஆனாலும் சின்னச் சின்ன நஷ்டங்களும் ஏற்படும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வேலையாட்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படலாம். உணவு, மருந்து, கட்டுமானப் பொருட் களால் லாபம் அடைவீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடையை விரிவுபடுத்துவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். ஜனவரி, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கியும் கைக்குக் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! பிறகு படித்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம். ஆர்வத்துடன் படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.

கலைத்துறையினரே! உங்களுடைய திறமைகள் வெளிப்படும். பெரிய வாய்ப்புகளுக்குக் காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு, உங்களுக்கு சற்று அமைதிக் குறைவை ஏற்படுத்துவதாக இருந்தாலும், உங்கள் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

பிரதோஷ நாட்களில், கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் ஈஸ்வரனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

மிதுனம்

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

வாரி வழங்கும் வள்ளல்களே!


உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் புது வருடம் பிறப்பதால், சமயோசித புத்தியால் மேலும் மேலும் சாதிப்பீர்கள்.

வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடி முடியும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலை கிடைக்கும்.

ஆனால், சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கும்போது புது வருடம் பிறப்பதால், ஆதாயம் இருந்தா லும் அலைச்சலும் இருக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

8.1.17 வரை உங்களுடைய ராசி நாதனான புதன் சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால், அலர்ஜி, நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு வந்து போகும். 11.4.17 முதல் 26.5.17 வரை உள்ள காலக் கட்டத்தில் செவ்வாயை சனி பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால், தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும். அவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ஆனால், ராகு 3-ம் இடத்தில் இருப்பதால், புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேறு மொழி பேசுபவர்களால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.

27.6.17 முதல் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால், வீண் விரயம், அலைச்சல் வந்துபோகும். வீண் பழி உண்டாகும். வருட ஆரம்பத்தில் இருந்து 1.9.17 வரை குரு 4-ல் இருப்பதால், மனதில் இனம்தெரியாத கவலைகள் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சிறுசிறு விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. 2.9.17 முதல் குரு 5-ல் அமர்வதால், பணம் வரும். பிள்ளைகளால் மதிப்பு மரியாதை கூடும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வழக்கு கள் சாதகமாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.    
 
15.12.17 வரை சனி பகவான் 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால், எதிர்ப்புகள் குறையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வி.ஐ.பி.களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தந்தையாரின் உடல்நலம் சீராகும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால், 16.12.17 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால்,  கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பெரிய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். கட்டுமானம், பதிப்பகம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஜுவல்லரி வகை களால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் உங்களின் உத்தியோக ஸ்தானாதிபதி குருபகவான் சாதக மாவதால், பணிச்சுமை குறையும். உங்களுக்குத் தொல்லை தந்த மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு உயரும். வருடத் தொடக்கத்திலேயே பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவ-மாணவிகளே! பாடங் களை கூடுதல் கவனத்துடன் படிக்கவும். இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பாராட்டு களும் பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

கலைத் துறையினர்களே! மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டின் முற்பகுதி, உங்களுக்கு பரபரப்பான வாழ்க்கையைத் தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

சனிக்கிழமைகளில், வடலூர் அருகே கருங்குழி எனும் ஊரில் அருளும் ஸ்ரீராஜ்யலட்சுமி சமேத  ஸ்ரீலட்சுமி நாராயணரை வழிபட்டு வாருங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

கடகம்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

கள்ளம்-கபடம் இல்லாதவர்களே!


உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த புது வருடம் பிறப்பதால், உங்களுடைய திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். தடைப்பட்டிருந்த திருமணப் பேச்சு வார்த்தை, இனி சாதகமாகும்.  மன இறுக்கம் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

தனாதிபதி சூரியன் 6-ல் இருக்கும் போது, புது வருடம் பிறப்பதால், எதிரிகளும் பணிந்துபோவார்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசாங்க காரியங்கள் தடையின்றி முடியும். 1.1.17 முதல் 16.1.17 வரை செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால், சிறுசிறு பொருள் இழப்புகள், சகோதர வகையில் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

11.4.17 முதல் 26.5.17 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயை, சனி பார்க்க இருப்பதால், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள், மனஇறுக்கம், மறைமுக நெருக்கடிகள் வந்து செல்லும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால், படபடப்பு, எதிலும் பிடிப்பற்ற போக்கு, வீண் விரயம் வந்து செல்லும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

27.7.17 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், எதிலும் ஒருவித பயம், ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
1.1.17 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கியாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால், முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். இளைய சகோதர வகையில் கருத்துவேறுபாடுகள் தோன்றலாம். மற்றவர்கள் உங்களை விமர்சிப்பதைப் பொருட்படுத்தவேண்டாம்.

ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், தடைப்பட்ட காரியங்கள் முடியும். தாயாருடன் கருத்துவேறுபாடுகள், அவருக்கு ஆரோக்கியக் குறைவு உண்டாகும்.

தந்தையின் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்கவும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.
14.12.17 வரை சனி 5-ல் நிற்பதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் பொறுமையாக நடந்துகொள்ளவும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு வேலையின் காரணமாக குடும்பத்தை தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரும்.

ஆனால், 15.12.17 முதல் 6-ம் வீட்டில் சனிபகவான் அமர்வதால், எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கு மாறும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும்.  
             
வியாபாரத்தில், புது விஷயங்களில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். லாபம் எதிர் பார்த்ததுபோல் இருக்காது. பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்லவும். துணி, சிமெண்ட், செங்கல் சூளை வகைகளால் ஆதாயம் கிடைக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகள் கொடுக் கும் அதிகப்படியான வேலைகளை முடித்துக்கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். சக ஊழியர்களால் பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் வரும்.

மாணவ-மாணவிகளே! அடிக்கடி மறதி ஏற்படும். விரும்பியப் பாடப்பிரிவில் சேருவதற்கு பணமும், சிலரின் சிபாரிசும் தேவைப்படும். விளையாடும்போது, காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; எச்சரிக்கையாக இருக்கவும்.    

கலைத் துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

மொத்தத்தில் இந்த புத்தாண்டு,  விடாமுயற்சியாலும் கடின உழைப் பாலும் உங்களை முன்னேற்றம் அடையவைப்பதாக இருக்கும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

பௌர்ணமி அல்லது நவமி திதிகளில், கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடிக்குச் சென்று, அங்கு அருளாட்சி செய்யும் ஸ்ரீமகா பிரத்யங்கிராதேவியை வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

தன்னம்பிக்கை மிகுந்தவர்களே!


உங்களுடைய ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, இந்த  ஆண்டு பிறப்பதால், உங்களின் நீண்ட கால ஆசைகளெல்லாம் நிறைவேறும். எதிரிகள் பணிந்துபோவார்கள். சின்னச் சின்ன வாய்ப்புகளையும் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவீர்கள்.

உங்களுடைய ராசியை சுக்கிரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் புது வருடம் பிறப்பதால், செயலில் வேகம் கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புது வாகனம் வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மகளின் திருமணத்தை நல்லபடி நடத்தி முடிப்பீர்கள்.

ஜுலை 26-ம் தேதி வரை ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பதால், கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம். 27.7.17 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால், மனப்போராட்டங்கள் ஓயும். நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக் குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். வெளி நாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புது வேலை கிடைக்கும்.

17.1.17 முதல் 26.2.17 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாய்  8-ல் மறைந்திருப்பதாலும், 11.4.17 முதல் 26.5.17 வரை செவ்வாயை சனி பார்க்க இருப்பதாலும் சகோதர வகையில் சச்சரவுகள், மன உளைச்சல், காரியத்தடை வந்து செல்லும். சொத்துக்கள் சம்பந்தமான வில்லங்கங்கள் தோன்றக்கூடும்.

1.1.17 முதல் 1.9.17 வரை பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதி பதியுமான குருபகவான் 2-ல் இருப்ப தால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆடை, ஆபரணம் சேரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால், 2.9.17 முதல் குரு 3-ல் அமர்வதால், எந்த ஒரு வேலையையும் போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். முயற்சிகள் தாமதமாகி முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

14.12.17 வரை சனி 4-ல் அர்த்தாஷ்டமச் சனியாக இருப்ப தால், தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும்.

15.12.17 முதல் சனி 5-ம் இடத்தில் அமர்வதால், கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. பாகப் பிரிவினை விஷயத்தில் பொறுமை அவசியம்.

 வியாபாரத்தில், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். ஆனால், அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், வேலையாட்கள் பிரச்னை செய்வார்கள். தொழில் போட்டி அதிகமாகும். உணவு, லெதர், மளிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னை உண்டாகும்.

உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எனினும், எவ்வளவுதான் உழைத்தாலும் மற்றவர்கள் உங்களை குறைகூறவே செய்வார்கள் என்பதால் பொறுமையுடன் இருக்கவும். ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து முடியுங்கள். அப்போதுதான் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற முடியும்.

கலைத் துறையினரே! கலை நயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு போராட்டங்கள் நிறைந்ததாக இருந் தாலும்,  உங்களின் எதிர்கால கனவு களை நனவாக்குவதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் திருப்புகளூர் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

கன்னி

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

மண் மணம் மாறாதவர்களே!


இந்த ஆண்டு சந்திரன் உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்கும்போது பிறப்பதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். மகளின் திருமணம் சிறப்பாக முடியும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வருடம் பிறக்கும் போது செவ்வாய் 6-லும் சூரியன் 4-லும் வலுவாக இருப்ப தால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்ப தால், எதிர்ப்புகள் அடங்கும். வெளி வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். ஆனால், ராசிக்கு 12-ம் வீட்டில் ராகு நிற்பதால், எவருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் வரும். சுபச் செலவுகள் அதிக மாகும். 27.7.17 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால், பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை உண்டாகும். ராகு 11-ம் வீட்டில் அமர்வதால், பெரிய திட்டங்கள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். திருமணம் கூடி வரும்.

26.2.17 முதல் 11.4.17 வரை செவ்வாய் 8-ல் அமர்வதாலும் மற்றும் 11.4.17 முதல் 26.5.17 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி பார்க்க இருப்பதாலும் உடன் பிறந்த வர்களுடன் மோதல்கள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துசெல்லும். வருடப்பிறப்பு முதல் 8.1.17 வரை ராசிநாதன் புதனும், சனியுடன் சேர்ந்து வக்ரமாகி நிற்பதால், காய்ச்சல், இருமல், கழுத்து வலி, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்து போகும்.

1.1.17 முதல் 1.9.17 வரை சேவகாதி பதியும், சப்தமாதிபதியுமான குரு உங்கள் ராசியிலேயே ஜன்ம குருவாக இருப்பதால், ஆரோக்கியத் தில் அக்கறை அவசியம். ஆனால், 2.9.17 முதல் குரு 2-ல் அமர்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணம் சேரும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சொத்து வாங்கும் முயற்சி நல்லவிதத்தில் முடியும்.

14.12.17 வரை சனி 3-ம் வீட்டிலேயே நிற்பதால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. 15.12.17 முதல் சனி அர்த்தாஷ்டமச் சனியாக வருவதால், தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் அசதி, சோர்வு, வீண் டென்ஷன் வந்து செல்லும்.  

வியாபாரத்தில், பற்று-வரவு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். வெளிநாட்டில் இருப்பவர் களின் உதவியால், சிலர் கடையை விரிவுபடுத்துவீர்கள். ஹார்ட்வேர், ஜுவல்லரி, செங்கல்சூளை வகை களால் ஆதாயம் உண்டாகும். ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத் துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு உண்டாகும்.    
உத்தியோகத்தில், செப்டம்பர் மாதம் முதல் முக்கியத்துவம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

மாணவ-மாணவிகளே! சமயோசித அறிவால் சாதிப்பீர்கள். சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக்கொள் வீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

கலைத் துறையினரே! நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பெரிய வாய்ப்புகள் வரும். வேற்று மொழி வாய்ப்புகளால் பெரும்புகழ் அடைவீர்கள். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்த புது வருடம், உங்களுக்குச் சிறு சிறு சங்கடங்களை அளித்தாலும், முடிவில் வெற்றியை தருவதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

 ஏகாதசி திதி நாளில், திண்டுக்கல் மலையடிவாரக் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீநிவாஸ பெருமாளை வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

துலாம்

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துணிச்சல் மிக்கவர்களே!


உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் லாபாதிபதியான சூரியன் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் தன்னம்பிக்கை வரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங் கள் விரைந்து முடிவடையும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும்.

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணம் வரத் தொடங்கும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வேலைக்கு விண்ணபித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும்.

11.4.17 முதல் 26.5.17 வரை உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் அமர்வதுடன் செவ்வாயை சனி பார்க்க இருப்பதால், வீண் விரயங்கள்,  முன் கோபம், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கியக் குறைபாடுகள் வந்து போகும். சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால், பிள்ளைகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். பூர்வீகச் சொத்துக்களால் மனச் சங்கடம் உண்டாகும். ஆனால், ராகு லாப வீட்டில் நிற்பதால், வசதி வாய்ப்புகள் பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

27.7.17 முதல் கேது 4-லும் ராகு 10-லும் அமர்வதால், வேலைச் சுமை அதிகரிக்கும். வழக்கு விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பெரிய விஷயங்களில் குடும்பத்தினரை ஆலோசித்து முடிவெடுக்கவும்.

1.1.17 முதல் 1.9.17 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் அமர்வதால், திடீர் பயணங்களால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க முடியாது. அடிக்கடி கனவுத் தொல்லை, தூக்கமின்மை, மனதில் படபடப்பு வந்து செல்லும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை நீங்களே முன்னின்று நடத்துவீர்கள். ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குரு ஜன்ம குருவாக இருப்பதால், மனநிம்மதி குறையும். வாயுத் தொல்லையால் நெஞ்சுவலி, அல்சர் வரக்கூடும். தலைச்சுற்றலும் தூக்கமின்மையும் வந்துபோகும். கணவன் - மனைவிக் குள் வீண் மனஸ்தாபங்கள் தோன்றக் கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. 

14.12.17 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதி கட்டமான பாதச் சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால், பல் வலி, காது வலி வந்து நீங்கும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளை விட்டுப்பிடிப்பது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும்.

15.12.17 முதல் 3-ம் வீட்டில் சனி அமர்வதால், சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நி யோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

வியாபாரிகளே! ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சின்னச் சின்ன நஷ்டங்களும் ஏமாற்றங்களும் உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்கள் பணியில் இருந்து விலகுவார்கள். புதிய சலுகைகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டாகும். ஜனவரி, ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், வேலைச் சுமை கூடிக்கொண்டே போகும். உங்கள் திறமையைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறப் பார்ப்பார்கள். எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. சலுகைகளைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.

மாணவ-மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். மறதியால் மதிப்பெண்கள் குறையக்கூடும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது உன்னிப்பாக கவனிப்பது அவசியம்.

கலைத் துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர் களால் உதவிகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த வருடம், சகிப்புத் தன்மை தேவை என்பதை உங்களுக்கு உணர்த்துவதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அருள்பாலிக்கும் புகழிமலை ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமியை, சஷ்டி திதியில் சென்று வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

சுய பலம் மிகுந்தவர்களே!


உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது, இந்த ஆண்டு பிறப்பதால், சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். துணிச்சலாக முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல உத்தியோகம் அமையும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

26.5.17 முதல் 12.7.17 வரை உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைவதாலும், 11.4.17 முதல் 26.5.17 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்க்க இருப்ப தாலும் மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை வந்து செல்லும். உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்ப தால், வாகன விபத்துகள், காரிய தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 27.7.17 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால், ராகு 9-ம் வீட்டில் நிற்பதால், சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். வேற்றுமொழி பேசுவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். 
1.1.17 முதல் 1.9.17 வரை உங்கள் தன-பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குரு 11-ல் இருப்பதால், புகழ், கௌரவம் ஒருபடி உயரும். திடீர் யோகம், பண வரவு உண்டு. வராத கடன்கள் வந்து சேரும். மூத்த சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். ஆனால், 2.9.17 முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ல் சென்று மறைவதால், திடீர் பயணங் கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.      

14.12.17 வரை ராசிக்குள் சனி அமர்ந்து ஜன்மச் சனியாக தொடர்வதால், உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும். 15.12.17 முதல் சனி உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால், உடல் ஆரோக்கியம் சீராகும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. மூக்கு, காது, கை கால்களில் வலி வந்து போகும். 

ஜன்மச்சனி தொடர்வதால், புதிய தொழில் தொடங்க வேண்டாம். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். போட்டிகளைச் சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப் படுத்துவீர்கள் வேலையாட்கள் அனுசரணையாக நடந்துகொள்ள மாட்டார்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்த முடியாமல் திணறு வீர்கள். ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் தள்ளிப்போன வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகத்தில் 26.7.17 வரை ராகு 10-ல் இருப்பதால், சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

ஏழரைச் சனி நடப்பதால், மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மறதி ஏற்படும். படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

கலைத் துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் பயன் படுத்திக்கொள்ளுங்கள். மூத்த கலை ஞர்களின் ஆதரவு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புது வருடம் மற்றவர்களைப் புரிந்துகொள்ள வைப்பதுடன், உங்களுக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவ தாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

நவமி திதி நாட்களில் சேலம் அருகிலுள்ள ஆத்தூருக்குச் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

தனுசு

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

துடிப்பு மிகுந்தவர்களே!


உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த வருடம் பிறப்பதால், பண வரவுக்குக் குறைவிருக்காது. எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். வழக்கு சாதகமா கும். சிலருக்கு அயல்நாடு தொடர்பு உடைய நிறுவனத்தில் வேலை அமையும்.   

வருடம் பிறக்கும்போது, உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், மனோபலம் கூடும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் உதவி கரமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்தில் உங்கள் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். ஆனால், 11.4.17 முதல் 26.5.17 வரை செவ்வாயை சனி பார்க்க இருப்பதால், பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். சகோதரர் கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சொத்துக்களால் பிரச்னை உண்டாகும்.

26.7.17 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால், புதிய முயற்சிகள் வெற்றி அடையும். ஷேர் மூலம் பணம் வரும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு இருப்பதால், பணப் பற்றாக்குறை நீடிக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். 27.7.17 முதல் கேது 2-லும் ராகு 8-லும் அமர்வதால், குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். எந்த வேலையையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். பல் வலி, காது வலி, கணுக்கால் வலி வந்து நீங்கும்.

1.1.17 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிநாதனும் சுக ஸ்தானாதிபதியுமான குரு 10-ல் அமர்ந்திருப்பதால், அடுக்கடுக்கான வேலைகள் உங்க ளைச் சோர்வடையச் செய்யும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால், 2.9.17 முதல் குரு லாப வீட்டில் அமர்வதால், மதிப்பு மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத் தில் வேலை கிடைக்கும். கடன்கள் தீரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

14.12.17 வரை சனி விரயச் சனியாகவும், 15.12.17 முதல் ஜன்ம சனியாகவும் வருவதால், செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமை அதிகரித்து சோர்வடையச் செய்யும். தூக்கம் குறையும்.

வியாபாரத்தில், பற்று-வரவு கணிசமாக உயரும். செப்டம்பர் மாதம் முதல் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். 

உத்தியோகத்தில், செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சக ஊழியர்களும் மூத்த அதிகாரிகளும் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார் கள். மே, ஜூன், அக்டோபர் மாதங் களில் புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வையும் எதிர் பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலர், உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ஏழரைச் சனி தொடர்வதால், மாணவ மாணவியர் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். ஆசிரியர்கள் உங்களிடம் அக்கறையாக நடந்துகொள்வார்கள். விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.

கலைத் துறையினரே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களையும் புதிய வர்களையும் அனுசரித்துச் செல்லவும்.

மொத்தத்தில் இந்தப் புது வருடத்தின் துவக்கம் ஏற்ற இறக்க மாக இருந்தாலும், நிறைவில் தொடர் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

அரக்கோணத்துக்கு அருகிலுள்ள பனப்பாக்கம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஎல்லம்மனை, அஷ்டமி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

யோசித்து செயல்படுபவர்களே!


உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், பிரச்னைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்.

ஆனால், உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். வீண் செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது, சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் மறைமுக எதிர்ப்பு கள் வந்து போகும்.      
11.4.17 முதல் 26.5.17 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்க இருப்பதால், எதிலும் ஒருவித குழப்பம், தடுமாற்றம், படபடப்பு, இளைய சகோதர வகையில் அலைச்சல் வந்து செல்லும்.

26.7.17 வரை 2-ல் கேதுவும்  8-ல் ராகுவும் இருப்பதால், பிரச்னைகளும் போராட்டங்களும் இருந்துகொண்டே இருக்கும். கண் பார்வையில் சிறு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. 27.7.17 முதல் வருடம் முடியும்வரை ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் அமர்வதால், மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டாம். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும். பொருட்கள் களவு போக வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருந்துகொள்ளவும்.

1.1.17 முதல் 1.9.17 வரை குரு 9-ம் வீட்டிலேயே இருப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால், அவ்வப்போது ஏமாற்றங்களை உணருவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள்.

14.12.17 வரை சனி 11-ம் வீடான லாப வீட்டில் தொடர்வதால், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களைப் புரிந்துகொள்வீர்கள். திருமணம் கூடி வரும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை உண்டாகும். ஆனால், 15.12.17 முதல் சனி 12-ல் மறைந்து விரயச் சனியாக ஏழரைச் சனி தொடங்குவதால்,  தூக்கமில்லாமல் போகும். உங்கள் பலம், பலவீனமறிந்து செயல்படப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.    

வியாபாரத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக்கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். ஆனால், 2.9.17 முதல் தொழில் ஸ்தானமான 10-ம் இடத்தில் குரு அமர்வதால், அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும். ஜனவரி, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.           

உத்தியோகத்தில், 2.9.17 முதல் குரு 10-ல் அமர்வதால், ஒரே நேரத்தில் பல வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உங்களுடைய உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேறு வார்கள். சக ஊழியர்களால் அவ்வப் போது டென்ஷனாவீர்கள். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள்.

மாணவ மாணவியர் தேர்வு நேரத்தில் படித்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கவேண்டாம். போட்டிகளில் உங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தி பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங் களை கேட்டுத் தெரிந்துகொள்வீர்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும்.

மொத்தத்தில் இந்தப் புது வருடம், சின்னச் சின்ன இடையூறுகளைத் தந்தாலும், கடுமையான உழைப்பால் இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

 சிதம்பரத்துக்கு அருகிலுள்ள ஆச்சாள்புரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவலோக தியாகேசரை, வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வழிபட்டு வாருங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

கும்பம்

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

சாமர்த்தியசாலிகளே!


உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. திருமணம் கூடி வரும். உங்களுடைய ராசிக்கு 12-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், அலைச்சல், செலவுகள் வந்து போகும். அவ்வப்போது தூக்கம் குறையும். 

11.4.17 முதல் 26.5.17 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் செவ்வாயைப் பார்க்க இருப்பதால், வேலைச்சுமை, மனஉளைச்சல், சகோதர வகையில் டென்ஷன், பணத் தட்டுப்பாடு வந்து செல்லும். 

26.7.17 வரை உங்கள் ராசிக் குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால், தலைச்சுற்றல், தூக்கமின்மை, மன இறுக்கம், கை, கால் வலி வந்து செல்லும். குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். கணவன் - மனைவி இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும்.
ஆனால், 27.7.17 முதல் வருடம் முடியும் வரை ராகு 6-லும், கேது 12-லும் அமர்வதால், மனதில் தெளிவு பிறக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கத்துணையின் ஆரோக்கியம் சீராகும்.

1.1.17 முதல் 1.9.17 வரை உங்கள் தனாதிபதியும், லாபாதிபதியுமான குரு, உங்கள் ராசிக்கு 8-ல் இருப்பதால், வீண் அலைச்சல், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு கடன் வாங்கவேண்டிய நிலையும் ஏற்படும்.

ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால், அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். தள்ளிப்போன காரியங் கள் முடிவடையும். ஷேர் மூலமாக பணம் வரும். பிள்ளைகளின் தனித் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நல்ல நிறுவனத் திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.       

14.12.17 வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால், வழக்கில் வெற்றி பெறுவீர் கள். ஆனால், 15.12.17 முதல் சனி 11-ம் வீட்டில் நுழைவதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். 

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வதால் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். வேற்றுமொழி பேசுபவர், வெளிநாட்டில் இருப்பவர் களின் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

லாட்ஜிங், ஃபைனான்ஸ், கன்சல்டன்சி வகை களால் ஆதாயம் அடைவீர்கள். செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் பிரதானமான இடத்தில் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில், 2.9.17 முதல் உங்கள் நிர்வாகத் திறமை கூடும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் உங்களுக்கு உற்சாகம் தரும். சிலருக்கு விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும்.

ஆனால், சனி 10-ல் தொடர்வதால், மறைமுகப் பிரச்னைகள் இருக்கவே செய்யும். செப்டம்பர் மாதம் முதல் சலுகைகள் கிடைக்கும்.

மாணவ மாணவியருக்கு, செப்டம்பர் மாதம் முதல் படிப்பில் ஆர்வமும், பாடங்களை கிரகித்துக் கொள்ளும்  ஆற்றலும் அதிகரிக்கும்.

கலைத் துறையினர்களே! புகழ் உங்களைத் தேடி வரும். விருதுகளும் பாராட்டுகளும் பெறுவீர்கள். பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற வைத்தாலும், மையப் பகுதியிலிருந்து அதிரடி மாற்றங்களையும், வெற்றி களையும் தருவதாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

புதன்கிழமைகளில், வந்தவாசி அருகிலுள்ள சௌந்தர்யபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவ பெருமாளையும்  ஸ்ரீபத்ம சக்கரத்தையும் வணங்குங்கள்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

மீனம்

பூரட்டாதி  4-ம் பாதம்,  உத்திரட்டாதி, ரேவதி

புதுமையை விரும்புபவர்களே!


உங்களுக்கு லாப ராசியில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு-மரியாதை கூடும். சிலர், ரசனைக்கேற்ற புதிய வீட்டுக்கு குடி புக வாய்ப்பு உண்டு.

உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் நிற்கும்போது, இந்த வருடம் பிறப்பதால், உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும்.    

26.7.17 வரை ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால், உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனைச் செலுத்துவீர்கள். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

27.7.17 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். இல்லத்தில், இதுவரை தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும்.

ஆனால், ராகு 5-ம் வீட்டில் நிற்பதால், பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் எழலாம்.

1.1.17 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் செல்வாக்கு கூடும்.

ஆனால், 2.9.17 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால், உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். வீண் அலைக்கழிப்பு களும் அதிகமாகும். திடீர்ப் பயணங்கள் இருக்கும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.  

14.12.17 முதல் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால், தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக் கியம் சீராகும். தந்தைவழியில் உதவி கள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

ஆனால், 15.12.17 முதல் சனி 10-ல் அமர்வதால், வீரியத்தைவிட காரியம்தான் பெரிது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.  

வியாபாரத்தில், சில நுணுக்கங் களை கற்றுக்கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுவது அவசியம். கடையை வேறு இடத்துக்கு மாற்றி விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, உணவு, ஏற்றுமதி - இறக்கு மதி, கடல் வாழ் உயிரினங்களால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில், செப்டம்பர் மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகளை கொஞ்சம் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். ஆனால், மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் அடைவீர்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடின உழைப்பால் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

மாணவ மாணவியர் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி சாதிப்பீர்கள். வகுப்பில் பாடங்களை கூடுதல் அக்கறையுடன் கவனிப்பது அவசியம்.

கலைத் துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதி கரிக்கும். மூத்த கலைஞர்களை விட அறிமுகக் கலைஞர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

மொத்தத்தில் இந்தப் புது வருடம், அலைச்சலுடன் ஆதாயத்தைப் பெற்றுத் தருவதுடன், உங்களது எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவ தாக அமையும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

பரிகாரம்

வியாழக்கிழமைகளில், சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டார்குப்பம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகனை வழிபட்டு வாருங்கள்.

உங்கள் வாழ்க்கை ஒளிரட்டும்!

சூரியனின் ஆதிக்க எண்ணில் பிறக்கிறது 2017 புத்தாண்டு. இருள் நீக்கி ஒளி தரும் அந்த பகலவனைப் போலவே, உங்கள் வாழ்வும் ஒளிர தெய்வ பலம் துணை நிற்கட்டும். மலை போல் வரும் துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிட அருள் செய்யும் சில தெய்வ துதிப்பாடல்கள் இங்கே உங்களுக்காக.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

ரக்ஷ ரக்ஷ ஜகன்மாதா...

அம்பாளைப் போற்றி ஆதிசங்கரரால் அருளப்பட்ட துதிப்பாடல் தேவி அஷ்டகம். இந்தத் துதியை, ‘தேவ்ய இஷ்டகம்’ எனப் போற்றுவர். எட்டுப்பாடல்கள் கொண்ட இந்தத் துதியைக்கூறி அனுதினமும் வழிபட்டால், அம்பாளின் பேரருள் பரிபூரணமாக ஸித்திக்கும். அப்படி, நமது கஷ்டங்களை நீக்கும் தேவி அஷ்டகத்தில் இருந்து ஒரு பாடல் இங்கே...

மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்


கருத்து: தேவியே, மஹாதேவனின் மனைவி யும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், சிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்வில் ஏற்படும் மனக் கவலையை போக்கும் அன்னையும், உலகங்களுக்கு தாயுமான தங்களை வணங்குகிறேன்.

நேரம் வாய்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலைப்பாடி அம்பாளை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், கிரக தோஷங்கள், கெட்ட கனவுகள், மனக் கலக்கம் ஆகியன விலகும்; நல்லன  நடக்கும்.

அண்ணாமலையார் அருள்செய்வார்!

நி
னைக்க முக்தி தரும் அண்ணாமலையாரைப் போற்றி திருநாவுக்கரசுப் பெருமான் பாடியருளிய பதிகம் இது.

மறையி னானொடு மாலவன் காண்கிலா
     நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்
     பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.


மாலவனும் பிரம்மதேவனும் அடிமுடித் தேடிக் காணக் கிடைக்காத பெருஞ்ஜோதியாம் அண்ணா மலையாரை சிறப்பிக்கும் இந்தப் பாடலைப் பாடி பிறைசூடிய பெருமானை வழிபட்டால், முன் ஜன்ம பாவங்கள் பொடிபடும்; நமது தோஷங்கள் யாவும் நீங்கி சந்தோஷம் பெருகும்.

2017 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்!

யாவும் இனிமையே!

மகான் வல்லபாசார்யர் அருளிய மதுராஷ்டகத் தின் ஒரு பாடல் இங்கே தரப்பட்டுள்ளது. சனிக் கிழமைகளிலும், ஏகாதசி புண்ணிய தினங்களிலும் இந்தப் பாடலைப் பாடி கண்ணனை மனதில் தியானித்து வழிபட்டு வந்தால், நமது கஷ்டங்கள் யாவும் நீங்கும்.

கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர்
   மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
   மதுராதிபதேரகிலம் மதுரம்


கருத்து: கோபர்கள் இனிமையானவர்கள், பசுக்கள் இனிமையானவை, கம்பு இனிமை, உண்டாக்குதல் இனிமை, முறித்தல் இனிமை, பயனளித்தல் இனிமை, மதுரா நாயகனைச் சேர்ந்த யாவும் இனிமையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism