Published:Updated:

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை
ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

தன்னம்பிக்கையால் சாதிக்கும் காலம் இது.

புரட்சிகர சிந்தனை உடையவர்களே!

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய், கேதுவுடன் சேர்ந்திருந்தாலும் லாப வீட்டில் நிற்பதால், ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும். 10-ம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால், புதிய வேலை அமையும். சிலருக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் உள்ள நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் சில உதவிகள் கிடைக்கும்.

அஷ்டமச் சனி நடைபெறுவதால், பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். விலையுயர்ந்த  ஆபரணங்கள், இரவல் நகைகளை வாங்கவும் வேண்டாம்; தரவும் வேண்டாம். குரு 6-ம் வீட்டில் நிற்பதால், செலவுகள்
அதிகமாகும். சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தையாருடன் சின்னச்சின்ன மனத்தாங்கல்கள் வர வாய்ப்பிருக்கிறது. புதன் சாதகமாக இருப்பதால், சாதுர்யமாகப் பேசி முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். அதிகாரியிடம் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

விடாமுயற்சியால் வெற்றி பெறும் காலம் இது.

நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்களே!

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

உங்களுடைய ராசிநாதனாகிய சுக்கிரன் 9-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்ப்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது, கூடுதல் அறை அமைப்பது போன்ற முயற்சிகளில் இறங்குவீர்கள்.

கண்டகச் சனி நடப்பதால், கணவன்- மனைவிக்குள் சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகள் வர வாய்ப்பு உள்ளது. சூரியன் ராசிக்கு 8-ம் வீட்டில் தனித்து நிற்பதால், பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். குரு சாதகமாக நிற்பதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையவும், வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர் களுடன் சின்னச்சின்ன விவாதங்கள் இருந்தாலும், பாதிப்புகள் இருக்காது. உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுடைய நேர்மை யைப் பாராட்டுவார்கள்; எதிர்ப்புகள் அகலும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும் நேரம் இது.

யோசித்து செயல்படுபவர்களே!

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் நிற்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களுடைய யோகாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், நான்காம் இடத்தில் குரு நிற்பதால் நாலா வகையிலும் செலவுகள் வந்துகொண்டேயிருக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 
ஆறாம் வீட்டில் சனி வலுத்து நிற்பதால் வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னைகளைப் பேசியே சுமூகமாகத் தீர்த்துக் கொள்வீர்கள். செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்கள் ராசி நாதனாகிய புதன் வக்ரமாகி நிற்பதால், தொண்டை வலி வந்து போகும். வியாபாரத்தில், கடையை மாற்றுவது, விரிவுப்படுத்துவது, புதிய ஏஜென்ஸி எடுப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த நிம்மதியற்ற போக்கு மாறும். மூத்த அதிகாரி உங்களுக்கு உதவியாக இருப்பார். ஆனால், சக ஊழியர்களுடன் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து போகும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது.

கற்பனை வானில் சிறகடித்துப் பறப்பவர்களே!

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் நிற்பதால் தைரியம் பிறக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் நல்ல விதத்தில் முடிவடையும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள்.

இரண்டாம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்பத்தின் அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். மூன்றாம் வீட்டில் குரு நின்று யோகாதிபதியின் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்கு கூடும். அதிகாரமுள்ள பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். உங்கள் யோகாதிபதியான செவ்வாய், எட்டாம் வீட்டில் கேதுவுடன் சேர்ந்து நிற்பதால், பணம் கொடுக்கல் - வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை.சகோதரர்களுடன் மனத்தாங்கல் வரும். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவீர்கள். வியாபாரத்தில், திடீர் லாபம் உண்டு. பழைய பாக்கிகளும் வசூலாகும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

பொறுமையால் சாதிக்கும் காலம் இது.

முன் வைத்த காலை எப்போதும் பின் வைக்காதவர்களே!

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

இரண்டாம் வீட்டிலேயே குரு தொடர்வதால் கம்பீரமாகப் பேசி சில காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குக் குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள்.

உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும், நான்காவது வீட்டிலே சனியும் நிற்பதால், அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கும்; உடல் நலனில் கவனம் தேவை. ஆறாம் வீட்டில் சுக்கிரன் நிற்பதால் இனந்தெரியாத மனக் கவலை வந்து போகும். செவ்வாய் ஏழாம் வீட்டில் நிற்பதால், வியாபாரத்தில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு. லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களால் உற்சாகம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வேலை அதிகமாகும். உயர் அதிகாரிகள் உங்களைக் குறை கூறினால், அமைதியாக இருப்பது நல்லது. எதிர்த்துப் பேசவேண்டாம்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

மதிப்பும் மரியாதையும் கூடும் நேரம் இது.

கனிவாகவும், கறாராகவும் பேசுபவர்களே!

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனிபகவான் நிற்பதால், தைரியம் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. சகோதரர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

உங்கள் யோகாதிபதி சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். பிள்ளை களால் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டு. செவ்வாயும், கேதுவும் வலுவாக இருப்பதால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ராசிக்குள்ளேயே குரு நிற்பதால், சிறுசிறு உடல்நலக்குறைவு வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். போட்டிகள் குறையும். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்துக்கு கடையை மாற்ற முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில், கூடுதல் சலுகைகள் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அவற்றை கண்ணும்கருத்துமாக நிறைவேற்றி அவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் தருணம் இது.

மனசாட்சிக்கு மதிப்பளித்து வாழ்பவர்களே!

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி,  விசாகம் 1,2,3-ம் பாதம்

பாதகாதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் இருப்பதால் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர்வீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் வரும். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். மூத்த சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகத் தீரும்.

ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். கோபம் குறையும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். செவ்வாயும் கேதுவும் ஐந்தாவது வீட்டில் நிற்பதால், பிள்ளைகளால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஏழரைச் சனியில் பாதச்சனி நடைபெறுவதால், எடை மிகுந்த பொருட்களைத் தூக்கவேண்டாம். சாலைகளைக் கடக்கும்போது கவனமாக இருங்கள். வியாபாரத்தில், கமிஷன் மற்றும் இறக்குமதி வகைகளால் லாபம் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

எதிர்ப்புகளும் ஏமாற்றங்களும் விலகும் நேரம் இது.

குற்றம் பொறுக்காத அன்பர்களே!

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

உங்கள் ராசிக்கு சாதகமாக குரு பகவான் நிற்பதால், உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு ஓரளவு குறையும். பிரபலங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். மகனுக்குத் தள்ளிப்போன திருமணம் கூடி வர வாய்ப்பிருக்கிறது.

ஜன்மச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் நிற்பதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களிடம் குடும்பத்தின் அந்தரங்க விஷயங்களைச் சொல்லவேண்டாம். கண் பார்வையைப் பரிசோத்துக்கொள்வது நல்லது. சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். வியாபாரம் தழைக்கும்; பற்று - வரவு உயரும். பழைய பாக்கியும் வசூலாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த நெருக்கடிகளெல்லாம் நீங்கும். சக ஊழியர்களால் நிம்மதி அடைவீர்கள்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

உழைப்பால் உயரும் வேலை இது.

நெருக்கடியான நேரத்திலும் நேர்வழியில் செல்பவர்களே!

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

உங்கள் ராசிக்கு யோகாதிபதியான செவ்வாய் மூன்றாம் வீட்டில் நிற்பதால், அனைத்து காரியங்களிலும் தடைகள் தகர்ந்திடும். எதிர்ப்பார்த்த தொகை கைக்கு வரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் பிடிவாதமான போக்கு மாறும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள்.

சூரியன் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் தொடர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு பிரச்னையையும் இங்கிதமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்களால் வியாபாரம் பெருகும். ராசிநாதன் குரு பத்தாம் வீட்டில் நிற்பதால், உத்யோகத்திலே வேலைச்சுமை இருக்கும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

சீரிய சிந்தனையால் வெற்றி பெறும் காலம் இது.

மண் மணம்  மாறாமல் வாழ்பவர்களே!

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

உங்கள் யோகாதிபதி சுக்கிரன் ராசிக்குள் இருப்பதால், பழைய பிரச்னை களுக்கு தீர்வு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்ய, குறைந்த வட்டியில் பண உதவி கிடைக்கும். முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த வீட்டை பத்திரப்பதிவு செய்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன், மனைவிக்குள்ளே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

இரண்டாம் வீட்டில் செவ்வாயும், கேதுவும் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும், செலவுகள் அதிகமாகும். திடீரென்று அறிமுகமாகும் அன்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். காது, மூக்கு, தொண்டை வலி வந்து நீங்கும். குரு பகவான் சாதகமாக இருப்பதால், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அலுவலகத்தில் எதிர்ப்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

புதிய வாய்ப்புகளால் மகிழும் காலம் இது.

கொடுத்து சிவந்த கைகளை உடையவர்களே! 

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பதால் சவாலான விஷயங் களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். இதுவரையிலும் மனதில் இருந்த சலிப்பு, அலுப்பு ஆகியன விலகும்; தைரியம் பிறக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் நெருக்கம் ஆவார்கள்.

ராசியில் செவ்வாயும் கேதுவும் நிற்பதால் தூக்கம் குறையும். சகோதரர் களின் அன்புத் தொந்தரவு அதிகரிக்கும். குரு எட்டாம் வீட்டில் மறைந்து கிடப்பதால் செலவுகளையும், திடீர் பயணங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். யோகாதிபதி சுக்கிரன் பன்னிரண்டாவது வீட்டில் நிற்பதால் விலையுயர்ந்த ஆபரணங்கள், புதிய வாகனங்கள்  வாங்கும் பாக்கியம் உண்டு. உங்கள் மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்து, அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில், இதுவரை இருந்து வந்த கெடுபிடிகள் குறையும்; கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

ராசிபலன் - டிசம்பர் 20 முதல் ஜனவரி 2 வரை

நினைத்தது நிறைவேறும் நேரம் இது.

சுமைதாங்கியாக திகழ்பவர்களே! 

பூரட்டாதி  4-ம் பாதம்,  உத்திரட்டாதி, ரேவதி

சூரியன் பத்தாம் வீட்டில் நிற்பதால், அரசால் அனுகூலம் உண்டு. புதிய வியாபாரம் தொடங்குவீர்கள். அதற்கு வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, மனை அமையும். சிலருக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு விசா வந்து சேரும்.

குரு ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். ராகு சாதகமாக இருப்பதால், பழையக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். உங்களது தொழிலை விரிவாக்கும் பொருட்டு, புதிய கிளைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடன் புது வியாபாரம் தொடங்கவும் வாய்ப்பிருக்கிறது. உத்தியோகத்தில் செல்வாக்குக் கூடும். பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் எதிர்ப்பார்க்கலாம். சிலருக்கு, எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism