Published:Updated:

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

ஜோதிட ரத்னா முனைவர். கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

அசுவினி, பரணிகிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைசகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும்.

புரட்சிகர சிந்தனைகளை உடையவர்களே!

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு, வாகன வசதி பெருகும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு.

ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் நீடிப்பதால், சகோதரர்களால் உதவிகள் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால், ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் நிற்பதால், சிறுசிறு விபத்துகள், உஷ்ணத்தால் வயிற்றில் வலி வந்து போகும். 5-ல் ராகு தொடர்வதால், பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். 13-ம் தேதி வரை சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால், தந்தைக்கு நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் வந்து செல்லும். அஷ்டமத்துச் சனியும், சகட குருவும் தொடர்வதால், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு வேறு சிலர் உரிமை கோருவார்கள். கலைத்துறையினரே!!எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தேடி வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

கடின உழைப்பால் இலக்கை எட்டுவீர்கள்.

உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே!

குருபகவான் சாதகமாக இருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் கூடாப்பழக்க, வழக்கங்கள் விலகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். தெய்விக ஈடுபாடு அதிகரிக்கும். மகளுக்குத் தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். 13-ம் தேதி வரை 8-ல் சூரியன் நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், வீண் டென்ஷன் வந்து செல்லும். ஆனால், சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால், தடைகள் நீங்கும். சொத்துச் சிக்கல் தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைதிட்டமிட்ட காரியங்கள் கைகூடும்.

இனிமையாகவும் கனிவாகவும் பேசுபவர்களே!

ராகுவும், சனியும் வலுவாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

ராசிநாதன் புதன் 7-ம் தேதி வரை சனியுடன் சேர்ந்து பலவீனமாக இருப்பதால், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து செல்லும். 8-ம் தேதி முதல் புதன், சனியை விட்டு விலகி 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 13-ம் தேதி வரை சூரியன் ராசியைப் பார்ப்பதால், உஷ்ணத்தால் உடல்நலம் சிறிது பாதிக்கும். குரு 4-ல் தொடர்வதால், தாயாரின் உடல்நலனில் அக்கறை அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம்.

போராட்டக் குணம் கொண்டவர்களே!

13-ம் தேதி வரை சூரியன் ராசிக்கு 6-ல் நிற்பதால், உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

8-ம் தேதி முதல் புதன் 6-ல் சென்று மறைவதால், சில வேலைகள் தடைப்பட்டு முடிவடையும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் 8-ல் நிற்பதால், வீண் பழி, அசதி, ஒற்றைத் தலைவலி, சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நீங்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததாலும், சனி 5-ல் நிற்பதாலும், முக்கியமான விஷயங்களுக்கு வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரையதார்த்தமான பேச்சால் சாதிப்பீர்கள்.

தன்மானம் பெரிதென்று நினைப்பவர்களே!

குரு வலுவாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்குத் தெளிவாகச் சிந்தித்து தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட சில காரியங்களை பிரபலங்களின் உதவியால் செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். செவ்வாய் கேதுவுடன் நிற்பதால், உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போகவும். 13-ம் தேதி வரை ராசிநாதன் சூரியன் 5-ம் வீட்டில் நிற்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், தாயாருக்குச் சிறுசிறு அறுவைச் சிகிச்சைகள், முதுகு வலி வந்து செல்லும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைஎதிர்ப்புகளைக் கடந்து முன்னேறுவீர்கள்.

கற்பனைத் திறன் உள்ளவர்களே!

13-ம் தேதி வரை சூரியன் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சனிபகவான் வலுவாக இருப்பதால், ஆன்மிகத் தில் மனம் லயிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 8-ம் தேதி முதல் புதன் சனியை விட்டு விலகி 4-ல் அமர்வதால், புத்துணர்ச்சி பெருகும். செவ்வாய் 6-ல் நீடிப்பதால், சகோதரர்களால் பயனடைவீர்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளைக் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கவும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும்.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைதொலைநோக்குச் சிந்தனையுடன் சாதிப்பீர்கள்.

நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே!

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், புது முயற்சிகள்  வெற்றியடையும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். எதிரிகள் பணிந்து போவார்கள். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். மகனுக்கு புது வேலை கிடைக்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். மூத்த சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
 
ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், திடீர் பணவரவு, பேச்சில் நிதானம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். 12-ல் குரு மறைந்திருப்பதால், வீண் சந்தேகம், மறைமுக விமர்சனம், எதிர்  காலம் பற்றிய கவலைகள், காய்ச்சல் வந்து விலகும். பாதச் சனி தொடர்வதால், கடனை நினைத்து சில நேரங்களில் கவலைப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும்.

கவலைகளை மறைத்து சிரிப்பவர்களே!

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வராது என்று நினைத்த பணம் வரும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. புதிய டிசைனில் ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். குரு வலுவாக அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும். மகான்கள், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள்.

ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் நிற்பதால், ஒருவித படபடப்பு, மருத்துவச் செலவு, சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து செல்லும். ஜன்மச் சனி தொடர்வதால், உடல்நலம் பாதிக்கும். மனதில் விரக்தி ஏற்படும். வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! பரபரப்புடன் காணப்படுவீர்கள்.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைஅந்தஸ்தும் மதிப்பும் ஒருபடி உயரும்.

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே!

செவ்வாய் 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வி.ஐ.பி.-களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அந்தஸ்து உயரும். நட்பு வட்டம் விரியும்.

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று, புது இடம் வாங்குவீர்கள். கேது வலுவாக இருப்பதால், சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 13-ம் தேதி வரை ராசிக்குள் சூரியன் நிற்பதால், பெற்றோரால் டென்ஷன், அலைச்சல்கள் வந்து போகும். குலதெய்வ வழிபாடு மன நிறைவைத் தரும். 10-ல் குரு தொடர்வதால், தர்மசங்கடமான சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டி வரும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். கலைத்துறையினரே! புது வாய்ப்புகள் வரும்.

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைதன்னம்பிக்கையால் வெற்றி பெறுவீர்கள். 


மன்னிக்கும் மனம் கொண்டவர்களே!

சனி பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்று புது இடம் வாங்குவீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

யோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வ தால், உறவினர்களால் நன்மை உண்டு. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குரு சாதகமாக இருப்பதால், கட்டட வேலைகளைத் தொடங்க லோன் கிடைக்கும். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். 2-ல் செவ்வாய், கேது நிற்பதால், பேச்சால் பிரச்னை, வீண் பகை, மன உளைச்சல், கண் எரிச்சல், செலவுகள் வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக் கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரைகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.


மற்றவர்களுக்கு நல்லதைச் சொல்பவர்களே!

சூரியன் வலுவாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடன் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வீர்கள்.

ராசிநாதன் சனி பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், திடீர் பணவரவு உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். செவ்வாயும், கேதுவும் ராசிக்குள் தொடர்வதால், கொஞ்சம் அலைச்சலும், மறதியும் வந்து நீங்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். சகோதர வகையில் சச்சரவு வரும். சொத்து வாங்கும் போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

ராசிபலன் - ஜனவரி 3 முதல் 16 வரை

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

திடீர்த் திருப்பங்கள் ஏற்படும்.

வாழ்க்கைத் தத்துவம் புரிந்தவர்களே!

சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மூத்த சகோதரிக்குத் திருமணம் பேசி முடிப்பீர்கள்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். சுபச் செலவுகளும் அதிகமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். 12-ல் செவ்வாய் மறைந்திருப்பதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருக்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரே! எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism