தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

சுய கௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே!

மேஷம்: 14-ம் தேதி முதல் சூரியன் சாதகமாவதால், உங்களின் நிர்வாகத்திறன் கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். 16-ம் தேதி முதல் குரு 7-ல் அமர்வதால், நோய்கள் நீங்கும். திருமணம் கூடி வரும். செவ்வாய் 16-ம் தேதி முதல் கேதுவை விட்டு விலகுவதால், அசதி, சோர்வு நீங்கும். ஆனால், திடீர் பயணங்கள், செலவுகள், அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

அநியாயத்தைக் கண்டிப்பவர்களே!

ரிஷபம்: செவ்வாய் சாதகமாக இருப்பதால், தைரியம் கூடும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். ராசிநாதன் சுக்கிரன் கேதுவுடன் இணைந்திருப்பதால், இனம்தெரியாத கவலை, வீண் டென்ஷன், காய்ச்சல் வந்து நீங்கும். 16-ம் தேதி முதல் குரு 6-ல் சென்று மறைவதால், வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், தாழ்வுமனப்பான்மை, தூக்கமின்மை வந்து செல்லும். உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

விவாதங்களில் வெற்றி பெறுபவர்களே!

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைமிதுனம்: ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். 16-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அதிரடியாக வளர்ச்சி காணும் தருணம் இது.

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மற்றவர்களின் மனதை ஆக்கிரமிப்பவர்களே!

கடகம்: செவ்வாய் 16-ம் தேதி முதல் 9-ம் வீட்டில் அமர்வதால், உடன்பிறந்தவர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், விலை உயர்ந்த மின்னணு, மின்சாரச் சாதனங்கள் வாங்குவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால், அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். குரு சாதகமாக இல்லாததால், தாயாருடன் வீண் விவாதம், வீட்டு பராமரிப்புச் செலவுகள் வந்து செல்லும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

முயற்சியைக் கைவிடாதவர்களே!

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைசிம்மம்: 14-ம் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் அமர்வதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். குடும்ப வருமானம் உயரும். புது வேலை அமையும். வழக்கில் வெற்றி உண்டு. 16-ம் தேதி முதல் உங்களின் யோகாதிபதி செவ்வாய் 8-ல் மறைவதால், முன்கோபம், ரத்தச்சோகை, வீண் செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள் வந்து செல்லும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களைக் குறை கூற வேண்டாம். கோபம் அடங்கி முன்னேறும் தருணம் இது.

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

விவேகமாகச் சிந்தித்துப் பேசுபவர்களே!

கன்னி: குருபகவான் 16-ம் தேதி முதல் உங்களுடைய ராசிக்கு 2-ம் இடத்தில் அமர்வதால், மன இறுக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். யோகாதிபதி சுக்கிரன் 6-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.

எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவர்களே!

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைதுலாம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

16-ம் தேதி முதல் குரு, ஜன்ம குருவாக வருவதால், அலர்ஜி, நெஞ்சுவலி, வயிற்றுக்கோளாறு வந்து நீங்கும். கடனை நினைத்து கலங்குவீர்கள். மற்றவர்களுக்காகச் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள்.

மனதில் பட்டதைப் பேசுபவர்களே!

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைவிருச்சிகம்: 14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் வீட்டில் நுழைவதால், தைரியம் கூடும். பணம் வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. 16-ம் தேதி முதல் குரு, ராசிக்கு 12-ல் மறைவதால், சுபச்செலவுகள் அதிகமாகும். எதிர்பாராத பயணம் உண்டு. 16-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய், கேதுவை விட்டு விலகுவதால், கோபம் தணியும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

எதிலும் வித்தியாசமாக இருப்பவர்களே!

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைதனுசு: சுக்கிரன் சாதகமாக இருப்பதால், செலவுகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். 16-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் குருபகவான், லாப வீட்டில் அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் குறை கூறிய அதிகாரியின் மனம் மாறும்.

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

மற்றவர் நலனில் அக்கறை காட்டுபவர்களே!

மகரம்: சனி வலுவாக இருப்பதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். இதமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். 16-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் வீட்டில் அமர்வதால், மனோபலம் கூடும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், 16-ம் தேதி முதல் குரு உங்களுடைய ராசிக்கு 10-ல் அமர்வதால், வேலைச்சுமை இருந்தபடி இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பங்குதாரர் உதவுவார். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.

எப்போதும் கனவுலகில் சஞ்சரிப்பவர்களே!

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரைகும்பம்: உங்களின் யோகாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 16-ம் தேதி முதல் செவ்வாய் உங்களுடைய ராசியை விட்டு விலகுவதால், ஏமாற்றங்களில் இருந்து விடுபடுவீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். குருபகவான் 16-ம் தேதி முதல் 9-ம் இடத்தில் அமர்வதால் தடைகள் விலகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை

விடாமல் போராடி இலக்கை அடைபவர்களே!

மீனம்: புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. 16-ம் தேதி முதல் செவ்வாய், ராசிக்குள் நுழைவதால், வீண் விரயம், ஏமாற்றம், சகோதர வகையில் பிணக்குகள் வந்து செல்லும். 16-ம் தேதி முதல் ராசிநாதன் குருவும் 8-ல் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.