Published:Updated:

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

Published:Updated:
ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை
பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

எண்ணியதைச் சாதித்துக் காட்டும் தருணம் இது.

மன உறுதி மிக்கவர்களே!

10-ல் சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி முயற்சிகள் கூடிவரும்.

குரு வலுவாக இருப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரபலங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், திடீர் செலவுகளும், அலைச்சல்களும், சகோதர வகையில் சச்சரவுகளும் வந்துபோகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். கலைத் துறையினரே! உங்களின் புகழ், கௌரவம் உயரும்.

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

சில காரியங்கள் வெற்றி பெறும் நேரம் இது.

சுயநலம் இல்லாதவர்களே!

சப்தமாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சுக்கிரனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், பணவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். உறவினர்களுடன் இருந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

7-ல் சனியும், 6-ல் குருவும் நிற்பதுடன், சர்ப்பக் கிரகங்களின் சஞ்சாரமும் சரியில்லாததால், மனஉளைச்சல், வீண் டென்ஷன், சின்னச்சின்ன ஏமாற்றங்கள், வீண் பழி, பணப்பற்றாக்குறை ஏற்படும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.

மிருகசீரிடம்  3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

வசதி, வாய்ப்புகள் கூடும் நேரம் இது.

மற்றவர்களுக்காக வாழ்பவர்களே!

முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். திடீர் நன்மை உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். கல்யாண முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். புது வேலை அமையும். வழக்கில் வெற்றி உண்டு. எங்குச் சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக்கொள்வீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

8-ல் சூரியனும், ராசிநாதன் புதனும் நிற்பதால், எதிர்மறை சிந்தனைகள், தந்தையுடன் கருத்து மோதல்கள், வீண் செலவுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். கலைத்துறையினரே! ரசிகர்களின் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

விட்டதைப்பிடிக்கும்  வேளை இது.

சமூக விழிப்பு உணர்வு உள்ளவர்களே!

உங்களின் யோகாதிபதி செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கருத்துவேறுபாடு கொண்டிருந்த உறவினர்களின் மனம் மாறும்.

ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் சர்ப்பக் கிரகங்களான ராகு, கேது உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. சூரியனின் சஞ்சாரம் சரியில்லாததால், முன்கோபம், வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதம் வந்து நீங்கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சிச் செய்வீர்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் வளைந்துகொடுத்துப் போவது நல்லது. கலைத் துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடையப் படைப்புகள் ரிலீசாகும்.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

எதிர்ப்புகளைக் கடக்க வேண்டிய நேரம் இது. 

வெளிப்படையாகப் பேசுபவர்களே!

ராசிநாதன் சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால், போராட்டங்களைக் கடந்து முன்னேறும் சக்தி உண்டாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வீடு மாறவேண்டிய சூழ்நிலை உருவாகும். புதன் 6-ல் மறைந்திருப்பதால், நண்பர்களுடன் பகைமை வந்து நீங்கும். உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், உடல் வலி, வீண் டென்ஷன், விரயம், மறைமுக அவமானம் வந்துபோகும்.

3-ல் குரு நீடிப்பதால், பல வேலைகளையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். 8-ல் செவ்வாய் நீடிப்பதால், சகோதர வகையில் பிணக்குகள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில், போட்டிகளால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! மூத்தக் கலைஞர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

காரியத்தில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் இது.

பட்டம் பதவிக்கு ஆசைப்படாதவர்களே!

உங்களின் தனாதிபதி சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு. வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். குருபகவான் வலுவாக இருப்பதால், வீட்டில் தள்ளிப்போன சுபக் காரியங்கள் கூடிவரும். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், புதுத்தெம்பு பிறக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

5-ல் சூரியன் நிற்பதால், பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால், வாழ்க்கைத் துணைக்கு வேலைச்சுமை, சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்து ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்னுரிமை தருவார்கள். கலைத்துறையினரே! வருமானம் உயரும்.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி,  விசாகம் 1,2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

சகிப்புத்தன்மை தேவைப்படும் வேளை இது.

பழைமையை விரும்புபவர்களே!

செவ்வாய் சாதகமாக இருப்பதால், சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் அக்கறைச் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். சகோதரருக்கு வேலை கிடைக்கும்.

சூரியன் 4-ல் நிற்பதால், இழுபறியாக இருந்த அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். ஆனால், தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், கழுத்து வலி, மின்னணு, மின்சார சாதனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. ஜன்ம குரு தொடர்வதால், எதையோ இழந்ததைப்போல் ஒருவித மனவாட்டத்துடன் அவ்வப்போது காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத் தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களைக்கண்டு அஞ்ச வேண்டாம்.

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

தடைகளை மீறி முன்னேறும் தருணம் இது.

உள்ளத்தை வெளிப்படுத்த தயங்காதவர்களே!

சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் சாதகமாக இருப்பதால், சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். அடகிலிருந்த நகையை மீட்பதுடன், புது ஆபரணங்களும் வாங்குவீர்கள்.

ராஜ கிரகங்களான குரு, சனி மற்றும் நிழல் கிரகமான ராகு, கேதுவின் போக்கு உங்களுக்குச் சரியில்லாததால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வீண் சந்தேகம் வந்து விலகும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைத் துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

சொன்னதைக் காப்பாற்றும் நேரம் இது.

கலாசாரத்தைப் போற்றுபவர்களே!

சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. செவ்வாய் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்குச் சாதகமாக திரும்பும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
 
ஏழரைச் சனி தொடர்வதால் மனஇறுக்கம் உண்டாகும். குரு லாப வீட்டில் வலுவாக இருப்பதால், மனோ பலம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள், கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். வியாபாரம் செழிக்கும்; நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் சம்பளம் உயரும். மூத்தக் கலைஞர்கள் உதவுவார்கள்.

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

கோபம் தவிர்த்து வெற்றி பெறும் வேளை இது.

சமத்துவத்துக்காகப் போராடுபவர்களே!

செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டைக் கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவார்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

சூரியன் ராசிக்குள் நிற்பதால், முன்கோபம், மனஉளைச்சல் வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். லாப வீட்டில் ராசிநாதன் சனி வலுவாக இருப்பதால், தடைகள் நீங்கும். ஷேர்மூலம் பணம் வரும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். சில நேரங்களில் வாடிக்கையாளர்களிடம் தர்மச்சங்கடமான சூழ்நிலை ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வெடிக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது அவசியம். கலைத்துறையினரே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம்,  பூரட்டாதி  1,2,3-ம் பாதம்

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

உண்மையால் உயரும் தருணம் இது.

காலத்துக்கேற்ப செயல்படுபவர்களே!

குரு வலுவாக இருப்பதால், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள்.

ராகு, கேது சாதகமாக இல்லாததால், மற்றவர்கள் பிரச்னையில் அநாவசிய மாகத் தலையிடாதீர்கள். சூரியன் 12-லும், செவ்வாய் 2-ம் இடத்திலும் நிற்பதால், எதிலும் ஒருவித பயம், டென்ஷன் வந்துபோகும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் நீங்களே முன்னின்று முடிப்பது அவசியம். உத்தியோகத்தில் உங்களை குறை சொல்லிக்கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். கலைத்துறையினரே! உங்களுடைய கலைத்திறன் வளரும்.

ராசிபலன் - ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை

பூரட்டாதி  4-ம் பாதம்,  உத்திரட்டாதி, ரேவதி

திடீர் திருப்பங்கள் நிகழும் வேளை இது. 

மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!

லாப வீட்டில் சூரியனும், புதனும் நிற்பதால், திடீர் யோகம் உண்டாகும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்திகள் வரும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள். 8-ல் நிற்கும் குருவால், பொறுப்புகளும் வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்துவிட்டு பிறகு அவதிப்பட வேண்டாம். வியாபாரத்தில் புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்.