மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை
பிரீமியம் ஸ்டோரி
News
ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

எதிர்பாராத பண வரவு உண்டு!

மேஷம்: இளகிய மனம் கொண்ட உங்களுக்கு சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால், எதையும்

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

சாதிக்கும் துணிச்சல் வரும். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். திருமண பேச்சுவார்த்தை கைகூடும். சகோதர வகையில் பயனடைவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 12-ல் நீடிப்பதால், வீண் விரயம், ஏமாற்றம், வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

பிள்ளைகளால் மதிப்பு கூடும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

ரிஷபம்: உள்ளதை உள்ளபடி பேசும் உங்களுக்கு புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். பணம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.  பிள்ளைகளால் மதிப்பு கூடும். புது வேலை கிடைக்கும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். ராகு, கேது, சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இல்லாததால், மனதில் குழப்பம் உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

பழைய பாக்கிகள் வசூலாகும்!

மிதுனம்: மற்றவர் சுகத்துக்காக வாழும் உங்களுக்கு, குருபகவான் சாதகமாக இருப்பதால், புதிய

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

முயற்சிகள் வெற்றியடையும். பணப்புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிநாட்டு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தெய்வ பலத்தால் முன்னேறுவீர்கள்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

கடகம்: தேசப்பற்று மிக்க உங்களுக்கு, சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், தெய்வ பலத்தால் முன்னேறுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். சூரியன் சாதகமாக இல்லாததால்,  அரசு காரியங்கள் இழுபறியாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான்.  உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைச்சல் உண்டாகும். சூட்சுமங்களை அறிந்துகொள்ள வேண்டிய வேளை இது. 

வீடு கட்டும் பணி தொடங்குவீர்கள்!

சிம்மம்: அதிரடியாக திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்களான உங்களுக்கு சந்திரன் சாதகமாக இருப்பதால்,

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 16-ம் தேதிக்குப் பிறகு புதன் 7-ல் அமர்வதால், தடைப்பட்ட வேலைகள் நல்லபடி முடியும். செவ்வாய் 8-ல் இருப்பதால், சொத்துக்கள் வாங்கும்போது எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

கன்னி: எதிலும் வெளிப்படையாக இருக்கும் உங்களுக்கு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். அரசு காரியங்கள் நல்லபடி முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பிற மொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் காலம் இது.

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும்!

துலாம்: தடை வந்தாலும் தளராத உங்களுக்கு, பாக்கியாதிபதி புதன் சாதகமாக இருப்பதால், திட்டமிட்ட

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

காரியங்கள் கைகூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சுக்கிரன் 6-ல் மறைந்திருப்பதால், கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது அவசியம். வீட்டில் சிறு சிறு பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். செவ்வாய் 6-ல் நிற்பதால், சகோதரர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படாத வருத்தம் உண்டாகும்.

நிர்வாகத் திறமை கூடும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

விருச்சிகம்: பணத்துக்கு அடிமையாகாத உங்களுக்கு, சூரியன் சாதகமாக இருப்பதால், நிர்வாகத் திறமை கூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால், வீண் சந்தேகம், ஏமாற்றங்கள் வந்து செல்லும். செவ்வாயின் சஞ்சாரம் சொத்துக்கள் விஷயத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சில எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணம் இது.

வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும்!

தனுசு
: மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட உங்களுக்கு, கேது சாதகமாக இருப்பதால், மனதில்

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

தைரியம் உண்டாகும். கடன் பிரச்னை நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மூத்த சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். குரு பகவான் சாதகமாக இருப்பதால், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்றுமதி வகைகளால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். பிரபலங்களின் பாராட்டுகளைப் பெறும் நேரம் இது.

சுபச்செய்திகள் வந்து சேரும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

மகரம்: எதையும் பலமுறை யோசித்துச் செயல்படும் உங்களுக்கு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணவரவு கூடும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கிய கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாததால், பேச்சால் பிரச்னை வரக்கூடும் என்பதால் நிதானம் அவசியம். எதிலும் ஒரு தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். குரு சாதகமாக இல்லாததால், வேலைச்சுமை, எதிர்காலம் பற்றிய கவலை வந்து செல்லும். விவேகமாக முடிவெடுத்து முன்னேறும் வேளை இது.

பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்!

கும்பம்: பார்வையாலேயே மற்றவர்களைக் கவரும் உங்களுக்கு, குருபகவான் சாதகமாக இருப்பதால்,

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

எதிர்பார்த்த வேலைகள் நல்லபடி முடியும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். பணவரவு கூடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும். சூரியனும் செவ்வாயும் சாதகமாக இல்லாததால், சிலருக்கு நெஞ்சுவலி, தூக்கமின்மை, பல்வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்!

ராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை

மீனம்: மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் கொண்ட உங்களுக்கு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால், தேவையான பணம் கிடைக்கும்.பழைய கடன்களை ஓரளவு தீர்ப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். செவ்வாய், குரு சாதகமாக இல்லாததால், செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதி காரியை அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வேளை இது.